Published:Updated:

ராசி பலன்

கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

மே 31 முதல் ஜூன் 13-ம் தேதி வரை

ராசி பலன்

மே 31 முதல் ஜூன் 13-ம் தேதி வரை

Published:Updated:
கே.பி.வித்யாதரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.பி.வித்யாதரன்

ஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த மே 31 முதல் ஜூன் 13-ம் தேதி வரையிலான துல்லியமான ராசிபலன்கள்

ராசி பலன்

மேஷம்:

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். செவ்வாய் 12-ல் மறைந்திருப்பதால், உடன்பிறந்தவர்களால் செலவுகள் வந்துபோகும். சகோதரருக்குத் திருமணம் கூடி வரும். திடீர் பயணங்கள் உண்டு. சொத்து வாங்குவது; விற்பதில் அலட்சியம் வேண்டாம். குரு 12-ல் மறைவதால் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, செலவுகள் உண்டு.

ராசி பலன்

சுக்கிரன் வலுவாக அமர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதாயம் உண்டு. 2-ல் சூரியன் நிற்பதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத் தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.

சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் காலம் இது.

ராசி பலன்

ரிஷபம்:

செவ்வாய் சாதகமாக இருப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குரு பகவான் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால் செல்வாக்கு உயரும். மூத்த சகோதர வகையில் ஆதாயம் உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சாதுர்யமாகப் பேசிப் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணம் வரும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சூரியன் ராசியிலேயே நிற்பதால் முன்கோபம் வரும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத் துறையினர், தங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட நேரிடும்.

பொறுமையால் சாதிக்க வேண்டிய நேரம் இது.

ராசி பலன்

மிதுனம்:

குரு 10-ல் இருப்பதால், யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சொத்தை விற்று, புது வீடு வாங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதியவரின் நட்பால் ஆதாயம் உண்டு.

பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். பண பலம் உயரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் மனஇறுக்கம், வீண் டென்ஷன் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களைச் சொல்லித் தருவார். கலைத்துறையினரைப் புது நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் காலம் இது.

ராசி பலன்

கடகம்:

குரு வலுவாக அமர்ந்திருப்பதால் கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். மூத்த சகோதர வகையில் பயனடைவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளாலும், உறவினர் வருகையாலும் வீடு களைகட்டும்.

சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் பதவி, பொறுப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் கைகூடும். உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். கலைத்துறையினருக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

அனைவராலும் மதிக்கப்படும் நேரம் இது.

ராசி பலன்

சிம்மம்:

செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், செயலில் வேகம் கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ராசிநாதன் சூரியன் 10 - ல் கேந்திரபலம் பெற்று நிற்பதால், அதிகாரப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் இணக்கம் உருவாகும். சக ஊழியர் கள் மதிப்பார்கள். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.

நினைத்ததை முடிக்கும் நேரம் இது.

ராசி பலன்

கன்னி:

செவ்வாய் சாதகமான இருப்பதால், சகோதர வகையில் மகிழ்ச்சியுண்டு. புது சொத்து வாங்குவீர்கள். குரு பகவான் வலுவாக அமர்ந்திருப்பதால் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக் கும். சூரியன் 9-ல் நிற்பதால் தந்தைக்கு வீண் டென்ஷன், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.

புதனும் சுக்கிரனும் சாதகமான இருப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களுடன் வளைந்து கொடுங்கள். உத்தியோகத்தில் பதற்றம் வேண்டாம். கலைத்துறையினருக்குச் சலுகைகள் கிடைக்கும்.

காத்திருந்து காய் நகர்த்தவேண்டிய காலம் இது.

ராசி பலன்

துலாம்:

செவ்வாய் 6-ல் இருப்பதால் பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பூர்வீகச் சொத்தை விற்று விட்டு, சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். 6-ல் குருவும், 8-ல் சூரியனும் நிற்பதால் வி.ஐ.பிகளின் நட்பை இழக்க நேரிடும். திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். பணம் வாங்கித் தரும் விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.

புதனும், சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் ஊக்கம், உற்சாகம் பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்; அதனால் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கலைத்துறையினரின் படைப்புகளை அரசு கௌரவிக்கும்.

திடீர் திருப்பங்கள் ஏற்படும் தருணம் இது.

ராசி பலன்

விருச்சிகம்:

குரு வலுவாக அமர்ந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். செவ்வாய் 5 - ல் அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். சகோதரருக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

சுக்கிரன் 6-ல் மறைவதால் வாகன விபத்து, வீண் பழி, சளித் தொந்தரவு, வீண் டென்ஷன் வந்து போகும். 5-ம் தேதி வரை புதன் 6-ல் மறைவதால் வேலைச்சுமை, வீண் டென்ஷன், நரம்புச் சுளுக்கு வந்து செல்லும். உறவினர், நண்பர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும்.

நிதானம் தேவைப்படும் நேரம் இது.

ராசி பலன்

தனுசு:

சூரியன் சாதகமாக இருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். குரு 4-ல் நிற்பதால் வீண் அலைச்சல், தாயாருக்கு மருத்துவச் செலவு, மனக்குழப்பம் வந்து செல்லும். செவ்வாய் வலுவாக இருப்பதால் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

சுக்கிரனும், 5-ம் தேதி வரை புதனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் புதிய எண்ணங்கள் தோன்றும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பிரபலங்களின் உதவியுடன் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பட்ஜெட்டில் வீடு, மனை அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் நிர்வாகத்திறமை வெளிப்படும். கலைத்துறையினரிடம் மூத்த கலைஞர்கள் நட்புறவாடுவார்கள்.

புகழ், கௌரவம் உயரும் காலம் இது.

ராசி பலன்

மகரம்:

குரு 3-ல் இருப்பதால் சில முயற்சிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உங்களின் நிலையறிந்து உதவுவார். வாகனத்தைச் சரி செய்வீர்கள். சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கனத்த மனசு லேசாகும். விலையுயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

சூரியன் 5-ல் இருப்பதால் ஒற்றைத் தலைவலி, வீண் டென்ஷன் வந்து போகும். பிள்ளைகள் கோபப்படுவார்கள். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் கவலைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் ஆதரிப்பார்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். கலைத் துறையினர் மீதான பழிச்சொற்கள் நீங்கும்; புகழடைவீர்கள்.

கடின உழைப்பால் இலக்கை எட்டும் நேரம் இது!

ராசி பலன்

கும்பம்:

புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் சுறுசுறுப்புடன் செயல்பட்டுத் தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளிடம் குவிந்து கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வீடு, மனை, வாகனச் சேர்க்கை உண்டு. உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும்.

4-ம் வீட்டில் சூரியன் கேந்திரபலம் பெற்றிருப்பதால் சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். கலைத்துறையினர் பிரபலமாவார்கள்.

சகிப்புத் தன்மையால் சாதிக்கும் நேரம் இது.

ராசி பலன்

மீனம்:

சூரியன் 3-ல் அமர்ந்திருப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். ஜன்ம குரு நீடிப்பதால் கோபம், ஏமாற்றம், மறைமுக விமர்சனம் வந்து போகும். செவ்வாய் வலுவாக இருப்பதால் இழுபறியான வேலைகள் உடனே முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சகோதரிக்குத் திருமணம் கூடி வரும்.

சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புது நகை வாங்குவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களெல்லாம் அடங்கு வார்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அணுகுமுறையை மாற்றி போட்டியாளர்களுக்குப் பதிலடி கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். கலைத்துறையினருக்குச் சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நேரம் இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism