விழாக்கள் / விசேஷங்கள்
திருத்தலங்கள்
தொடர்கள்
சக்தி ஜோதிடம்
Published:Updated:

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

ராசிபலன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராசிபலன்

வளைந்துகொடுத்து முன்னேறும் நேரம் இது.

மேஷம்

ங்களின் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் 5-ம் வீட்டில், 17-ம் தேதி முதல் ஆட்சி பெற்று அமர்வதால், பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், கடன் பிரச்னை களுக்கு மாற்றுவழி காண்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புதன் சாதகமாக இருப்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. 5 - ம் வீட்டில் நிற்கும் ராசிநாதனால் முன்கோபம், எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகளை விமர்சித்து கருத்துப்பகிர்வுகள் செய்யவேண்டாம். கலைத்துறையினருக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

கடின உழைப்புக்கான பலனைப் பெறும் நேரம் இது.

ரிஷபம்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களை எதிர்த்தவர்களும் நண்பர்களாவார்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று நடப்பார்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடி வரும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். இளைய சகோதரர் வகையில் ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமாக இருப்பதால், எதிர்காலத் திட்டங்களைப் பற்றி யோசிப்பீர்கள்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. புதனும் வலுவாக இருப்பதால் சாதுர்யமாகப் பேசி எதையும் சாதிப்பீர்கள். கடன் பிரச்னையைத் தீர்க்க புதிய வழி கிடைக்கும். செவ்வாய் 4 - ம் வீட்டில் இருப்பதால், உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ராகு, கேது சரியில்லாததால் எதிலும் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்குப் பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.

முக்கிய முடிவுகளை எடுக்கும் காலம் இது.

மிதுனம்

சூரியன் 17-ம் தேதி முதல் 3 - ம் வீட்டில் அமர்வதால், எதிலும் தெளிவு பிறக்கும். இளைய சகோதரர் வகையில் இருந்த பிணக்கு நீங்கும். வழக்கு சாதகமாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்பற்றாக்குறை சீராகும். ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால், தாயாரின் உடல்நலம் சீராகும். புதிய வேலை கிடைக்கும். வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

செவ்வாய் 3 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், மனவலிமை கூடும். அதிகாரம் மிக்க பதவியிலிருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. குரு, சனி மற்றும் சர்ப்ப கிரகங்கள் சரியில்லாததால், உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர், தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

கடுமையான முயற்சிகளால் முன்னேறும் வேளை இது.

கடகம்

சூரியன் 16-ம் தேதி வரை ராசியில் நிற்பதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். அவர் 17-ம் தேதி முதல், ராசியைவிட்டு விலகி சொந்த வீட்டில் அமர்வதால், உடல்நலம் சீராகும். தள்ளிப்போன காரியங்கள் முடியும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புதன் சாதகமாக இருப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமாக இருப்பதால், அதிரடியான முடிவுகளை எடுத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். கையில் பணம் புரளும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம் கண்டறிவீர்கள். 2-ம் வீட்டில் நிற்கும் செவ்வாயால், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வரும். வியாபாரத்தில், அதிரடியான செயல்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் வீண்வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். கலைத் துறையினர் தேவையற்ற விஷயங்களில் தலையிடவேண்டாம்.

யதார்த்தமான பேச்சால் சாதிக்கும் வேளை இது.

சிம்மம்

12-ம் வீட்டில் மறைந்திருக்கும் உங்கள் ராசிநாதன் சூரியன், 17-ம் தேதி முதல் ராசிக்குள் ஆட்சிபெற்று அமர்வதால், அலைச்சல் குறையும். எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். அரசியலில் செல்வாக்கு கூடும். சுக்கிரனும் சாதகமாக நிற்பதால் பழைய நண்பர்கள் மூலம் உதவியுண்டு. வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

உங்களின் அழகும் இளைமையும் கூடும். புதன் ஓரளவு சாதகமாக இருப்பதால், புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் முன்கோபம், டென்ஷன் அதிகரிக்கும். தியானம் செய்வது நல்லது. வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறனைப் பாராட்டுவார். கலைத்துறையினர், புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

தீர்க்கமான முடிவுகளால் முன்னேறும் தருணம் இது.

கன்னி

16-ம் தேதி வரை சூரியன் 11-ம் வீட்டில் இருப்பதால், எதிலும் இழுபறி என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். ராசிநாதன் புதன் சாதகமான வீடுகளில் நிற்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். ஷேர் மார்க்கெட் மூலம் லாபம் வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

செவ்வாய் 12-ம் வீட்டில் மறைந்திருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் வீண்வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். சுக்கிரனும் ஓரளவு சாதகமாக இருப்பதால், ஏமாற்றங்களை எதிர்கொண்டு வெல்வீர்கள். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். அக்கம்பக்கத்தாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு, மூத்த கலைஞர்களின் ஆதரவு கிட்டும்.

தன்னம்பிக்கையுடன் சாதித்துக் காட்டும் வேளை இது.

துலாம்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முக்கிய பிரமுகர்கள் உதவிக்கு வருவார்கள். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பாக்கியாதிபதி புதன் வலுவாக அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பணவரவு உண்டு. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். வீடு வாங்குவது, விற்பது நினைத்தபடி முடியும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

சுக்கிரன் சாதகமான வீடுகளில் நிற்பதால் கல்வியாளர்கள், வி.ஐ.பிகள் ஆதரவு தருவார்கள். நட்பு வட்டம் விரியும். சாமர்த்தியமான செயல்பாடு களால் சாதிப்பீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். கலைத்துறையினரே, உங்களை நிராகரித்த நிறுவனமே உங்களுக்குப் புதிய வாய்ப்பைத் தரும்.

புதிய பாதையில் பயணிக்கும் காலம் இது.

விருச்சிகம்

ராசிக்கு 10-ம் வீட்டில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக உள்ளதால், சவாலான காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். தந்தையின் உடல்நலம் சீராகும். சூரியன் 17-ம் தேதி முதல் 10-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், அதிகாரமிக்க பதவி தேடி வரும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

புதன் வலுவாக இருப்பதால் கல்வியாளர்கள், வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். சுக்கிரன் சாதகமாக நிற்பதால் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பிள்ளைகளின் அடிமனத்திலிருந்த பயத்தைப் போக்குவீர்கள். குரு, சனியின் போக்கினால் அவ்வப்போது மனஉளைச்சல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில், அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்கள், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

வளைந்துகொடுத்து முன்னேறும் நேரம் இது.

தனுசு

சூரியன் 8-ம் வீட்டில் மறைந்திருந்ததால் எண்ணற்ற இழப்புகளைச் சந்தித்தீர்கள். ஆனால் 17-ம் தேதி முதல் அவர் 9-ல் ஆட்சி பெற்று அமர்வதால், எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு கட்டவும் வாங்கவும் வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் திடீர் திருப்பம் உண்டாகும். சிலருக்குப் புதிய வேலை அமையும். புதன் மறைந்திருப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மனஇறுக்கம் குறையும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

செவ்வாய் 9-ம் வீட்டில் நிற்பதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தந்தையாருக்குக் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டுக்குத் தேவையான மிக்ஸி, கிரைண்டர் வாங்குவீர் கள். வியாபாரத்தில் விட்டதைப் பிடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரின் புகழ், கௌரவம் உயரும்.

திடீர் திருப்பங்கள் நிகழும் காலம் இது!

மகரம்

சூரியன் 17 - ம் தேதி முதல் 8 -ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் கணவன், மனைவிக்குள் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். மனைவியின் உடல்நலம் சீராகும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஒருசிலர் வீடு மாறுவீர்கள். புதிய வாகனம் அமையும். புதன் வலுவாக அமர்ந்திருப்பதால், மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். நட்புவட்டம் விரியும். தந்தைவழிச் சொத்து கைக்கு வரும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

செவ்வாய் 8-ம் வீட்டில் நிற்பதால் வாகனத்தை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை. சகோதரர் வகையில் பிரச்னைகள் வரக்கூடும். சுக்கிரனும், குருவும் சாதகமாகத் திகழ்வதால், வாகனம், சொத்துச் சேர்க்கை எல்லாம் உண்டு. வியாபாரத்தில், அலட்சியப் போக்கு மாறும். உத்தியோகக்தில், சக ஊழியர்களிடம் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. கலைத்துறையினர், தங்களின் படைப்புகளைச் சற்றுப் போராடி வெளியிடவேண்டியிருக்கும்.

எதிர்ப்புகளைக் கடந்து ஏற்றம் பெறும் வேளை இது.

கும்பம்

சூரியன் 16-ம் தேதி வரை 6-ம் வீட்டில் நிற்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சாதகமாகும். 17 -ம் தேதி முதல் சூரியன் 7-ம் வீட்டில் அமர்வதால், உடல்நலனில் கவனம் தேவை. 20-ம் தேதி வரை பூர்வ புண்ணியாதிபதி புதன் 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால், பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களால் செலவுகள் வந்து போகும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

செவ்வாய் 7-ம் வீட்டில் நிற்பதால் சகோதரியின் பிரச்னை தீரும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். 17 - ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாக நிற்பதால், கணவன், மனைவிக்கு இடையே புரிதலும் இணக்கமும் ஏற்படும். சனி மற்றும் கேதுவின் சஞ்சாரத்தால், பிரச்னைகளை எதிர்கொண்டு வெல்லும் வல்லமை கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்க தாமதமாகும்; எனினும் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

பொறுமையால் புகழடையும் நேரம் இது.

மீனம்

செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சூரியன் 17-ம் தேதி முதல் 6-ம் வீட்டில் ஆட்சிபெற்று அமர்வதால், நினைத்ததை முடிப்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.

ராசிபலன்: ஆகஸ்டு 13 - ம் தேதி முதல் 26 - ம் தேதி வரை

ஆனால் 17-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். 20-ம் தேதி வரை, புதன் 5 - ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்வீகச் சொத்துகளைச் சீர்செய்வீர்கள். மகனுக்கு, அயல்நாட்டில் உயர்கல்வி தொடர நல்ல வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில், பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில், உங்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படும். கலைத்துறையினருக்கு மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

தன்னம்பிக்கையால் சாதிக்கும் தருணம் இது.