Published:Updated:

கல்யாண மாலை தோள் சேரும்!

கல்யாண பிரார்த்தனை!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண பிரார்த்தனை!

`ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

கல்யாண மாலை தோள் சேரும்!

`ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

Published:Updated:
கல்யாண பிரார்த்தனை!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாண பிரார்த்தனை!

கல்யாணம் வாழ்வைப் பூரணமாக்கும் வைபவம். ஆண் - பெண் இருவரின் மனங்களை ஒன்றிணைக்கும் இல்லற தர்மத்தின் ஆரம்பம்; இறைவன் அளிக்கும் வரம். ஆனால் சிலருக்கு இத்தகைய வரம் அமைவதில் தடைகளும் சிரமங்களும் ஏற்படுகின்றன. அத்தகைய தடைகளுக்குக் காரணமாக, ஜாதகத்தில் கிரக அமைப்புகளின் அடிப்படையில் சில விளக்கங்களையும், உரிய பரிகாரங்களையும் சொல்லி வழிகாட்டுகிறது ஜோதிடம்.

கல்யாண மாலை தோள் சேரும்!
RomeoLu

ஜாதகத்தில் ஏழாம் இடம் களத்திர ஸ்தானம். இந்த 7-ம் இடத்துக்கு உடையவன் 12-ல் விரயமாகும்போதும், 7-ஆம் பாவத்தில் சனி, சூரியன், ராகு, கேது ஆகியோர் தனியாக அமர்ந்திருந்தாலும் திருமணம் தாமதப்படும்.

3, 6, 7, 8, 9 மற்றும் 12-ம் இடங்களில் அசுபர்கள் அமர்ந்தாலும் திருமணம் தாமதமாகும். அதேபோல், பூராட நட்சத்திரத்தில் பூப்படைந்த பெண்ணுக்கு திருமண யோகம் அரிது என்பர்.

இப்படியான தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடிட சில எளிய பரிகார வழிபாடுகளைச் செய்து பலன் அடையலாம். திருமணத் தடையால் பாதிக்கப்பபட்டோர் செவ்வாய்க் கிழமைகளில் பிள்ளையாருக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வளர்பிறை நாள்களில் வரும் செவ்வாய் அன்று ஆரம்பித்து தொடர்ந்து 11 வாரங்கள் பிள்ளையாரை வழிபட்டு வந்தால், விரைவில் கல்யாணம் கைகூடும். சர்ப்ப தோஷங்கள் நீங்கும்

ஜாதகத்தில் 3, 6, 10, 11-ல் ராகு அல்லது கேது அமர்ந்திருந்தால் எல்லா தோஷங்களும் மறைந்து திருமணம் நல்லபடியாக நடந்துவிடும் என்று ஜோதிட விதி ஒன்று கூறுகிறது. ஆனால், ஜாதகத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கு இடையே மற்ற கிரகங்கள் இருக்கும் அமைப்பு நாக தோஷமாகும். இதைக் காலசர்ப்ப தோஷம் என்றும் சொல்வார்கள். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புகள் ஜாதகருக்குத் தாமதமான திருமணம், திருமண வாழ்வில் மணமுறிவு போன்ற அனுகூலமற்ற பலன்களைத் தரும்.

இங்ஙனம் நாக தோஷம் உள்ளவர்கள் திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று பரிகார பூஜை செய்து வழிபட்டு வரலாம்.

ராகு கிரகத்தால் தடைகள் எனில், ஆலயங்களுக்குச் சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்வதும் உளுந்து தானம் செய்வதும் சிறப்பு. கேதுவால் தோஷம் எனில், கணபதி ஹோமம் செய்யலாம். கொள்ளு தானியம் தானம் அளிப்பதும் சிறப்பாகும்.

சனிக்கிழமை கிரிவலம்: சனி பகவான் மேஷத்தில் பலம் இழந்தாலும், விரயம் (12-ல்) ஆனாலும் திருமணம் தாமதமாகும். இத்தகைய கிரக அமைப்பு உள்ளோர், சனிப் பிரதோஷ தினத்தில் சிவாலய வழிபாட்டில் கலந்துகொண்டு வழிபட்டால் நன்மைகள் உண்டு. மேலும் மலைத் தலங்களுக்குச் சென்று சனிக்கிழமைகளில் கிரிவலம் வந்து வழிபடுவதால், பிரச்னைகள் நீங்கி விரைவில் கல்யாண மாலை தோள்சேரும்.

குருவருள் கைகூடும்: குரு பகவான் மேஷம், விருச்சிகம், கும்பத்தில் அமர்ந்திருந்தால் 28 வயதுக்கு மேல்தான் திருமணம் நடக்கும். இதுபோன்றும் இன்னும்பல காரணங்களாலும் குரு கிரகத்தின் அமைப்பு பலம் இழந்து, அதன் காரணமாக கல்யாணத் தடை ஏற்பட்டால், வியாழக்கிழமைகளில் இந்திரனையும் பிரம்மதேவரையும் வழிபடுவது நல்லது.

மேலும் சிதம்பரம் நடராஜரைத் தரிசிப்பதும், ஆலங்குடிக்குச் சென்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்வதும் சிறப்பாகும். வியாழக்கிழமைகளில் குருவின் ஸ்தானத்தில் உள்ளவர்களையும், வேத விற்பன்னர்களையும் வணங்கி, அவர்களுடைய நல்வாழ்த்துகளைப் பெறுவது மிகவும் சிறப்பான பரிகாரமாகும். கொண்டைக்கடலை தானம் செய்யலாம்.

சுக்கிரனால் தோஷமா?: ஜாதகப்படி சுக்கிரனால் தடைகள் பாதிப்புகள் உண்டாகின்றன எனில், வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசிதேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம். மொச்சை தானமும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு மங்கலப் பொருள்களைத் தானமாக வழங்குவதும் சிறப்பு. திருவரங்கம் சென்று ரங்கநாதரை வழிபடுவதால் கூடுதல் நன்மை உண்டு.

மூன்று நட்சத்திரங்கள்!

சில நட்சத்திரங்களைச் சுபகாரியங்களுக்கு விலக்கி வைப்பார்கள். குறிப்பாக பரணி, கிருத்திகை, பூரம் ஆகிய நட்சத்திர நாள்களைச் சொல்லலாம்.

பரணிக்கு ஆதியில் `அப பரணி’ என்றே பெயர். அது யம தருமனின் நட்சத்திரம். ஆயுள் நிறைவில் ஜீவராசிகளை ஒடுக்குவது அவன் வேலை. பரணி என்றதுமே காலதேவனின் சிந்தனை தோன்றும்; மனநெருடல் ஏற்படும் என்ற நோக்கில் பரணியைத் தவிர்ப்பது உண்டு.

கிருத்திகை நட்சத்திரம் என்பது நெருப்பு. ஆக்கம் கொடுப்பதோடு அழிவும் கொடுக்கவல்லது நெருப்பு என்பதால், கிருத்திகையை விட்டுவிடலாம் என்றார்கள்.

மற்றொன்று பூரம். பூர்வ பல்குனி நட்சத்திரம். இதிலும் நட்சத்திர தேவதைகள் நமக்கு நன்மை செய்பவையாக இல்லை. ஆக, இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த மூன்று நட்சத்திரங்களையும் சுபகாரியங்களுக்கு விலக்குவது உண்டு.

-கே.ராஜு, முசிறி