Published:Updated:

பித்ரு தோஷம்... பரிகாரம் என்ன?

பித்ரு தோஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
பித்ரு தோஷம்

தாய் - தந்தை, தாத்தா - பாட்டி, முப்பாட்டன் - முப்பாட்டி என்னும் இந்த வரிசைச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே சென்றால், அது ஆதி முதல்வரான பரம் பொருளிடம் போய் நிற்கும்.

இந்து மதத்தில் மட்டும்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசை உள்ளது.

இதில் தெய்வத்துக்கு நான்காவது இடமே வழங்கப்படுகிறது. இந்தப் பூமிக்கு நாம் வருவதற்கு ஆதாரமாக இருந்து, நமக்கு உடல் கொடுத்த தாயையும் தந்தையையும் தெய்வத்தைவிட உயர்ந்த நிலையில் வைத்து முதல் வணக்கம் செய்யச் சொல்கிறது.

உடலும் உயிரும் கொடுத்த தாய், தந்தையை உயிருடன் இருக்கும்போது மதித்து வணங்கி, அவர்கள் உலகை விட்டுச்சென்ற பிறகும் ஆண்டுதோறும் அவர்களின் நினைவு நாளில் போற்றி, பசியாற்ற வேண்டியதே ஒவ்வோர் இந்துவின் தலையாயக் கடமையாகிறது.

பித்ரு தோஷம்... பரிகாரம் என்ன?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தாய் - தந்தை, தாத்தா - பாட்டி, முப்பாட்டன் - முப்பாட்டி என்னும் இந்த வரிசைச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே சென்றால், அது ஆதி முதல்வரான பரம் பொருளிடம் போய் நிற்கும்.

இந்துமதத்தில் மட்டுமே உள்ள சிறப்பான ஒரு வழிபாடு, ‘குலதெய்வ வழிபாடு’. உண்மையில் நம் குலத்துக்கு, குடும்பத்துக்கு எல்லாமுமாக இருந்து, நமக்கு உடல் கொடுத்த முப்பாட்டன் முப்பாட்டி வணங்கிய தெய்வத்தை வழிபடுவதுதான் குலதெய்வ வழிபாடு; அவர்கள் நமக்குத் தந்த வாழ்க்கைக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.

ஜோதிட சாஸ்திரப்படி ‘பித்ரு தோஷம்’ என்றால் என்ன என்று பார்ப்போம். பித்ருக்கள் என்றால் முன்னோர்கள். தோஷம் என்றால் குற்றம். இதைத்தான் நம் முன்னோர்கள் பித்ரு தோஷம் என்று கூறுகின்றனர்.

நவகிரகங்களில் சூரியன் தந்தை, சந்திரனே தாய். சூரியன் ‘பித்ருக்காரகன்’ என்றும் சந்திரன் ‘மாத்ருக்காரகன்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மூல ஒளியான சூரியனாலேயே நாம் வாழும் பூமியும் தழைத்து வாழ்கிறது. சூரியன் எனும் செம்பொருளையே ‘சிவசூரியன்’ என்றும் `சூரிய நாராயணன்’ என்றும் நம் ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன.

பித்ரு தோஷம்... பரிகாரம் என்ன?

ஒளி கிரகங்களான சூரியனும் சந்திரனும் ஒருவரின் ஜாதகத்தின் முதன்மையானவர்கள். ஜாதகத்தில் சூரிய, சந்திரர்களின் வலிமை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த இருவரில் எவருடனாவது இருள் கிரகங்களான ராகு, கேது, சனி ஆகியவை இணைந்து அவர்களைப் பலமிழக்கச் செய்யும் நிலையே பித்ரு தோஷம் எனப்படுகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனை வைத்து ‘லக்னம்’ என்பதும், அந்த உயிர் இயங்கத் தேவைப்படும் உடலான சந்திரன் இருக்கும் இடத்தை வைத்து `ராசி’ என்பதும் கணிக்கப் படுகின்றன.

சூரியனும் சந்திரனும் தாய் தந்தையரைக் குறிப்பிடுவது போல ராகு தந்தையின் முன்னோர்களையும், கேது தாயின் முன்னோர்களையும் குறிக்கும் கிரகங்களாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுவோ, கேதுவோ உயிராகிய சூரியனுடனோ, உடலாகிய சந்திரனுடனோ இணைந்து பலவீனப் படுத்துவதே பித்ரு தோஷமாகும்.

ஒருவரின் ஜாதகத்தில், சென்ற பிறவி நன்மை தீமைகளை வைத்து இப்பிறவி பாக்கியங்களைக் குறிப்பிடுபவை ஐந்து மற்றும் ஒன்பதாம் இடங்கள். சாயா கிரகங்கள் இவற்றில் அமர்வதும் பித்ரு தோஷம்தான் பித்ருதோஷ விளக்கங்களைப் பொறுத்தவரை, பயமுறுத்தல்களும், பரிகாரங்களுமே அதிகமாகத் தென்படுகின்றன.

பித்ரு தோஷம் எனப்படுவது சூரிய சந்திரனுடன் ராகு இணைவதால் உண்டாகும் தோஷம் என்று சொல்லப்படுவதன் மறைமுகமான காரணம், சூரியன் தன்னுடைய சுபத்துவத்தையும் அந்த ஜாதருக்கு நன்மைகள் தரும் கிரகங்கள் தங்களின் வலுவையும் இழப்பதும்தான்.

பித்ரு தோஷம்... பரிகாரம் என்ன?

அதேநேரம், ஒளிகிரகங்களான சூரிய, சந்திரர்களுடன், ராகு -கேது இணைவதாலேயே ஒரு மனிதனுக்கு நல்லவை நடக்காமல் போய்விடும் என உறுதியான முடிவாகக் கூறிவிடக் கூடாது. இதற்கு உதாரணமாக சூரியனும், ராகுவும் இணைந்த எத்தனையோ ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும், அரசாங்கத்தில் உயர்நிலையில் இருப்பவர்களும் உள்ளனர். அதேபோல், சர்ப்ப கிரகங்கள் ஐந்தாமிடத்தில் இருப்பதாலேயே ஒருவருக்குக் குழந்தை பிறக்காமல் போய்விடுவதும் இல்லை.

ஆகவே, ராகு - கேது எத்தனை டிகிரியில் அவர்களை நெருங்கி வலுவிழக்கச் செய்திருக்கிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கணித்த பிறகே பித்ரு தோஷம் கணக்கிடப்பட்டுச் சொல்லப்பட வேண்டும்.

ஒரு ஜாதகத்தில், எந்த அமைப்பால் திருமணம், புத்திர பாக்கியம், வேலைவாய்ப்பு போன்றவை நடக்கவில்லை என்பதைக் கணிக்கத் தடுமாறும் ஒருசிலருக்குப் பரிகாரம் சொல்லப் பயன்படும் ஆயுதமாகவே இந்த பித்ரு தோஷம் உபயோகப்படுகிறது.

கிரகங்களின் அமைப்பையும் ஜாதகத்தில் உள்ள தடைகளையும் தெளிவாகக் கணக்கிட்டு, அதற்குரிய முறையான தெய்வ ஸ்தலங்களுக்கு அந்த ஜாதகரை அனுப்பி, பரம்பொருளின் அருள் கிடைக்கச் செய்தாலே போதுமானது.

எந்த தோஷமாக இருந்தாலும், அனைத்தும் பரம்பொருளின் கருணைக்கு உட்பட்டதே. அவரின் திருத்தலங்களுக்குச் சென்று மனமுருகி வேண்டினாலே அனைத்தும் நலமாகும்.

அதேபோல், முன்னோர் கடன்களையும் முறைப்படி செய்து வந்தால், நம் குலம் சிறக்கும்.