திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

நாகதோஷத்தால் திருமணத் தடையா?

நாகதோஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாகதோஷம்

வழிகாட்டலும் பரிகாரங்களும்

திருமணத்துக்கு வரன் தேடும் பெற்றோர் பலர், `நாகதோஷத்தால்தான் திருமணத்தடை ஏற்பட்டிருக்கு’ என்று சொல்வதைக் கேட்கலாம்.

அதென்ன நாகதோஷம்... தீர்க்க முடியாத தோஷமா அது... இல்லை, அதற்குப் பரிகாரங்கள் உண்டு. அதுபற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

நாகதோஷத்துக்குரிய கிரகங்கள் ராகு - கேது. ஜோதிட சாஸ்திரத்தில் தொடக்கத்தில் ஏழு கிரகங்கள்தான் இருந்தன. பிற்காலத்தில்தான் ராகுவும் கேதுவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சில ஜோதிட நூல்கள் `சனியைப் போல் ராகு; செவ்வாயைப் போல் கேது’ என்று கூறுகின்றன.

நாகதோஷம்
நாகதோஷம்

சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன. அப்படிச் சுற்றும்போது, சனி கிரகத்தால் ஏற்படக்கூடிய புழுதிப் புயலை `ராகு’ என்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி ஏற்படும் புழுதிப்புயலை `கேது’ என்றும் கூறுகிறார்கள். இவற்றை ‘சாயா கிரகங்கள்’, ‘நிழல் கிரகங்கள்’ என்றும் சொல்வார்கள்.

இந்த நிழல் கிரகங்கள், நிஜ கிரகங்களான சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்களின் தன்மையையும் வேகத்தையும் குறைக்கச் செய்கின்றன. அதனால்தான் இந்த ராகு - கேது தோஷம் பெரிய அளவில் பேசப்படுகிறது.

படம் - அடையிலும் இங்கும்: மஹி தங்கம்
படம் - அடையிலும் இங்கும்: மஹி தங்கம்

ராகு, அது நம் பாட்டன் பாட்டியின் கிரகமாகும்! நம் பாட்டன் பாட்டி ஏதாவது தவறு, பாவம் செய்திருந்தால், அதனால் ஏற்படும் தோஷமானது நம்மைத் தொடர்கிறது. கணவன் மனைவியின் தாம்பத்திய வாழ்க்கையில், இயற்கையாகக் கரு கலைந்துபோவது பாவம் அல்ல. ஆனால், அடிக்கடி நாமாகக் கருக்கலைப்பு செய்வது, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்துவிட்டுக் கருகலைப்பு செய்வது பாவமாகும். இந்தப் பாவம் அடுத்த சந்ததிக்கும் தொடரும். வாரிசுகளுக்கு ராகு - கேது தோஷம் ஏற்படும்.

ராகு, பெண்கள் ஆதிக்கம் உள்ள கிரகம். ஆக, பெண்களுக்குத் துரோகம் செய்தாலும் தோஷம் ஏற்படும். ‘கல்யாணம் செய்துகொள்கிறேன்’ எனக் கூறி காதலித்துவிட்டு பிறகு அவர்களைக் கைவிடுவது, சிறிது நாள்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிறகு விலகுவது இதெல்லாம் பாவமாகும். இந்தப் பாவங்களைச் செய்வோரின் வாரிசுகளுக்கு ராகுவால் தோஷம் ஏற்படும்.

கேது, ஆன்மிக கிரகம். ஞானக்காரகன் என்றே கேதுவைச் சொல்வார்கள். குருவை நிந்தனை செய்யும்போது, நமக்கு ஆசானாக இருப்பவர் களுக்குக் கெடுதல் செய்யும்போது, வழிபாட்டுத் தலங்களைச் சிதைக்கும்போது, வழிபாட்டுக்கு உரியவர்களை வசைபாடும்போது... அப்படிச் செய்பவர்களின் சந்ததிகளுக்குக் கேது தோஷம் ஏற்படுகிறது.

புதையல் பொருள்கள், அடுத்தவர்களின் பொருள்கள், கோயில் சொத்துகள் ஆகியவற்றை எல்லாம் எடுத்துக்கொள்ளும்போது, பிறருக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆலய பொருள்களை கவர்ந்துகொள்ளும்போது ராகு - கேது தோஷம் ஏற்படுகிறது. அதேபோல், அடுத்தவர்களை ஏமாற்றினாலும், நம்பிக்கைத்துரோகம் செய்தாலும் இந்த ராகு - கேது தோஷம் ஏற்படும்.

நாகதோஷம்
நாகதோஷம்

அவசியம் இல்லாமல் நாகங்களைக் கொல்வ தாலும் ராகு-கேது தோஷம் ஏற்படும். அதேபோல், பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும். அவற்றைப் பாழ்படுத்தக் கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்விக அடையாளம்.

சரி, ராகு-கேதுவால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாக என்ன செய்யலாம்.

முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற வர்களுக்கு அன்னதானம், பொருளுதவி செய்வ தால் இந்த தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கலாம். உறவுகளோ, ஆதரிப்பவர்களோ எவரும் இல்லாத நிலையில் இறந்துபோகும் அன்பர்களின் சவ அடக்கத்துக்கு உதவுவதன் மூலமாகவும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம் தேடலாம்.

கேது தோஷம் விலக, ஆலயங்களைப் புதுப்பிக்க உதவலாம். வாராவாரம் நடக்கும் உழவாரப் பணிகளில் கலந்துகொண்டால், கேது தோஷம் விலகும்.

ஆதரவற்ற பெண்களுக்கு உகந்த உதவிகள் செய்வதன் மூலம் ராகு தோஷத்துக்குப் பரிகாரம் தேடலாம். மாற்றுத் திறனாளிகள், பேச முடியாதவர்கள், பார்வையற்றவர்களுக்குப் பொருளுதவி செய்யலாம்.

ராகு, கேதுவை ஆணுமற்ற, பெண்ணுமற்ற கிரகங்கள் என்று சொல்வார்கள். அதனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவலாம். இதுபோன்ற பரிகாரங்களை எல்லாம் நாம் செய்து வந்தால் ராகு - கேது தோஷம் விலகி விரைவில் திருமணம் நடைபெறுவதுடன் சுகமான வாழ்க்கையும் அமையும்.