Published:Updated:

`எல்லோருக்கும் இனியவர்!’ - ரேவதி நட்சத்திர குணாதிசயங்கள்

ரேவதி நட்சத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி நட்சத்திரம்

நட்சத்திர குணாதிசயங்கள்

`எல்லோருக்கும் இனியவர்!’ - ரேவதி நட்சத்திர குணாதிசயங்கள்

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
ரேவதி நட்சத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
ரேவதி நட்சத்திரம்

ரேவதி நட்சத்திரம் குறித்து `மிகு செல்வம், பாதிநாள் விளங்கும் நல்லவன், பிறர் சொல் கேட்பன், நல் குணவான்...’ என்கிறது ஜாதக அலங்காரம். அதாவது நீங்கள் ஆயுட்காலத்தில் பாதி வரை மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்பவர்; நல்லவர்; மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்; குணவான் என்று கூறுகிறது.

யவன ஜாதகம், `நீங்கள் தனமுள்ளவர்; பளிச்சென்ற தோற்றமுள்ளவர்; பண்டிதன்; கோட்டைகளைக் கைப்பற்றுபவன்; பயணப் பிரியர்’ என்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நினைப்பீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல உங்களை மாற்றிக்கொள்வீர்கள். உள்ளுணர்வால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பெற்ற அனுபவ அறிவை, கற்ற தத்துவங்களைச் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி எடுத்துக் கூறுவீர்கள். தோழமைப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுபவர். மூலதனம் இல்லாமல் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். சட்டத்திட்டங்களுக்கும் நீதிநெறிகளுக்கும் கட்டுப் பட்டவர். அந்நியர்களிடம் அதிகம் பழகுவீர்கள். பல மொழிகளில் பண்டிதர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜீவகாருண்யம் உடையவர். எல்லோருக்கும் இனியவர். எப்போதும் சிரித்த முகத்துடனும் அழகிய பல் வரிசையுடனும் காட்சி தருபவர். பொதுவாக உங்களுக்கு 21 வயது வரை சளித் தொந்தரவு இருக்கும். 24-வது வயதில் எல்லா இன்பங்களும் உண்டாகும். 40 வயதானாலும் 32 வயதைப்போல் தோற்றம் இருக்கும். ஆதலால் உங்களுடைய உண்மையான வயதைக் கண்டறிவது மிகவும் கடினம். மனைவிமீது பிரியமுள்ளவர். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் தருபவர். மூடக்கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். சபை நாகரிகம் தெரிந்தவர். உங்களில் பலர் ஓவியர், எழுத்தாளர், படைப்பாளி ஆகியோராக இருப்பீர்கள். ஏரோனாட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியியல், மேலாண்மை, குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்.

`எல்லோருக்கும் இனியவர்!’ - ரேவதி நட்சத்திர குணாதிசயங்கள்

லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல கிளப்புகளில் பெரிய பதவியை வகிப்பீர்கள். உடன்பிறந்தவர் களுக்காகப் பூர்வீகச் சொத்தை விட்டுக் கொடுப்பீர்கள். வஞ்சகமாக யோசிக்கத் தெரியாதவர். தாராள மனமும் அளவுக்கு அதிகமான இளகிய மனமும் உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். நீங்கள் தைரியசாலிதான். ஆனால், நோயுற்றால் கலவரம் அடைவீர்கள். உங்களில் பலர் அமைச்சர், அறங்காவலர் ஆகியோராக இருப்பீர்கள். சமூகத்தில் ஒரு வி.ஐ.பி-யாக விளங்குவீர்கள்.

முதல் பாதம்

(புதன் + மீன குரு + தனுர் குரு)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி குரு பகவான். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் புது முயற்சிகளிலும் புது எண்ணங்களிலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். தேனைப் போல இனிய பேச்சால் சுற்றியிருப்பவர்களை சொக்கவைப்பார்கள். பெண் நண்பர்கள் அதிகம் இருப்பார்கள். பொன், பொருள் சேர்க்க விரும்புவார்கள். எடுத்த முடிவுகளில் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். உயர் சிந்தனையும் நல்ல பண்பும் உடையவர்கள். தாங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பதுடன், சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது மற்றவர்களைவிட ஆடம்பரமான ஆடை, ஆபரணங்களை உடுத்திச்செல்வதென்றால் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். புத்தி கூர்மையும் திறமையும் இருக்கும்.

கட்டட உதிரி பாகம், மாத்திரை மருந்து, அரிசி, தேங்காய் மண்டி போன்றவற்றை மொத்தமாக விற்பனை செய்பவர்களாக இருப்பார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். வழக்கறிஞர், நீதிபதி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோராக இருப்பார்கள். வறுமையில் இருப்பவர்களைக் கண்டால், தானாகப் போய் உதவுவார்கள். மற்றவர்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். 31 வயதிலிருந்து இவர்கள் வாழ்வில் தென்றல் காற்று வீசும்.

பரிகாரம்: உத்திரமேரூரில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குதல் நலம்.

`எல்லோருக்கும் இனியவர்!’ - ரேவதி நட்சத்திர குணாதிசயங்கள்

இரண்டாம் பாதம்

(புதன் + மீன குரு + மகர சனி)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சனி பகவான். இதில் பிறந்தவர்கள் தளராத மனமும் தடுமாறாத சிந்தனையும் கொண்டிருப்பார்கள். மெல்லிய தேகமும் பளபளக்கும் பற்களும் உடையவர்கள். எப்போதும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு உலா வருவார்கள். சுற்றியிருப்பவர்களுக்கும் அள்ளி வழங்குவார்கள். கொஞ்சம் முன்கோபிகள். வகை வகையான உணவுகளை வயிறார உண்பவர்கள்.

சுறுசுறுப்பு உள்ளவர்கள். இசை, ஓவியம், விளையாட்டு என்று பலவற்றிலும் ஆர்வமிருப்பதால், பள்ளிப் படிப்பை முடிப்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். ஆனால் உயர்கல்வி, பட்டப்படிப்புகளில் சாதிப்பார்கள். கால்பந்து, டென்னிஸ் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம்கூட விஷயங்களைச் சொல்லாமல் மனதுக்குள் மறைத்துவைத்திருப்பார்கள்.

தாய் தந்தைக்கு முக்கியத்துவம் அளித்து அவர் களுடைய இறுதிக்காலம் வரை பாதுகாப்பார்கள். மனைவி, பிள்ளைகளின் தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுப்பார்கள்; அதேநேரம் அவர்களிடமிருந்து அதிக பாச, நேசத்தை எதிர்பார்ப்பார்கள். இவர்களில் பலர் மருத்துவர், பேராசிரியர், சட்ட ஆலோசகர் ஆகியோராக இருப்பார்கள். உளவு, ராணுவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். எப்போதும் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்படும் இவர்கள், பண விஷயத்தில் நாணயமாக நடந்துகொள்வார்கள். இவர்களுக்கு 21 வயதிலிருந்தே பல திருப்பங்கள் ஏற்படும். 40 வயது முதல் கௌரவப் பதவிகள் தேடி வரும்.

பரிகாரம்: திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தில்லை விளாகத்தில் அருளும் ஸ்ரீசீதாபிராட்டி உடனுறை ஸ்ரீகோதண்ட ராமனையும் ஸ்ரீவினய ஆஞ்சநேயனையும் வணங்குதல் நலம்.

மூன்றாம் பாதம்

(புதன் + மீன குரு + கும்ப சனி)

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சனி பகவான். இதில் பிறந்தவர்கள், ஆரவாரமில்லாமல் எந்த வேலையையும் செய்து முடிப்பார்கள். எதிரியையும் மன்னிக்கும் பெருந்தன்மை கொண்டவர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று தெரியாமல் தடுமாறுவார்கள்.

ராணுவம், காவல், சுற்றுலா, மருத்துவம் போன்ற துறைகளில் பணிபுரிவார்கள். வியாபாரத்தில், போட்டியாளர் களைத் திகைக்கச் செய்வார்கள். சொந்தத் தொழில்தான் இவர்களுக்குப் பிடிக்கும். நாடாளுபவர் முதல் நாடோடி வரை எல்லோருக்கும் நண்பராக விளங்குவார்கள். இவர்களுடைய ஆழ்மனதுக்குள் இருக்கும் ரகசியங்களை எவரும் கண்டறிய முடியாது.

விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்தாரின் ஆதரவைப் பெற்றிருப்பார்கள். விரும்பியபடி வாழ்க்கைத் துணை அமையும். பிள்ளைகளைச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துக்குக் கொண்டு வருவார்கள். தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். ஆன்றோர், சான்றோரிடம் அடிபணிவார்கள். 24 வயதிலிருந்து பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவார்கள். வீடு, வாகன வசதி பெருகும்.

பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசீதாபிராட்டி உடனுறை ஸ்ரீராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயனை வணங்குதல் நலம்.

நான்காம் பாதம்

(புதன் + மீன குரு + மீன குரு)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி குரு. இதில் பிறந்தவர்கள் நியாயத்துக்காகப் போராடுவார்கள். சுற்றியிருப்பவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளல்கள், மனதில் அவ்வப்போது குழப்பங்கள் வந்தாலும், தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். குடும்பத்தில் பற்றும் பாசமும் வைத்திருந்தாலும் அதை பகிரங்கமாக வெளிக்காட்ட மாட்டார்கள். அதிக தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

வறுமையில் வாடுபவர்களுக்கு உதவ முன்வருவார்கள். அன்பாகப் பரிமாறினால் பழைய சாதத்தையும் பசியாற உண்பார்கள். நொறுக்குத் தீனியில் அதிக நாட்டம் இருக்கும். கட்டுமானம், எலெக்ட்ரிகல், மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். சிலர் பேராசிரியர், சமய அறங்காவலர் போன்றோராக இருப்பார்கள். அறக்கட்டளைகள் போன்றவற்றில் பதவி வகிப்பார்கள்.

மறைமுக எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்பார்கள். பணத்தைப் பெரிதென எண்ண மாட்டார்கள். கிளப்புகள், விளையாட்டுச் சங்கங்கள் ஆகியவற்றில் சேர்ந்து உயர்ந்த பதவிகளை அடைவார்கள். 13 வயதிலிருந்து திடீர்த் திருப்பங்கள் ஏற்படும்.

பரிகாரம்: திருக்காவலூரில் (காவலூரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமானை வணங்குதல் நலம்.

ரேவதி நட்சத்திர திருநாளில்...

திருமணம், பூ முடித்தல், மஞ்சள் நீராட்டுதல், பெயர் சூட்டுதல், சீமந்தம், மாங்கல்யம் செய்தல், சிகை நீக்கிக் காது குத்துதல், உபநயனம், தொட்டிலில் குழந்தையை இடுதல், பட்டாபிஷேகம், புதிய ஆடை ஆபரணங்கள் அணிதல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல், வாகனம் வாங்குதல், ஊஞ்சல் ஏறுதல், விதை விதைத்தல், குளம், கிணறு வெட்டுதல், ஆழ் குழாய்க் கிணறு அமைத்தல், மருந்து செய்தல், மருந்துண்ணல், உபதேசம் பெறுதல், கரும்பு நடுதல், சங்கீத, நாட்டியம் கற்றல், மனைக்கு அடிகோலுதல், பொதுச்சபை கூட்டுதல், பதவி பெறுதல், கல்வி பயிலுதல், விருந்துண்ணுதல், வங்கிச் சேமிப்புத் தொடங்குதல், புது வேலையில் சேருதல் போன்ற செயல்களை ஆரம்பித்தாலும் செய்தாலும் நன்மையும் வெற்றியும் உண்டாகும்.

பரிகார ஹோம மந்திரம்

பூஷா ரேவத்யன்வேதி பந்த்தாம்

புஷ்டிபதீ பசுபாவா ஜபஸ்த்யௌ

இமானி ஹவ்யா ப்ரயதா ஜுஷாணா

ஸுகைர்நோ யானை ருபயதாம் யஜ்ஞம்

க்ஷூத்ரான் பசூன் ரக்ஷது ரேவதீ ந:

காவோ நோ அச்வாஹும் அன்வேது பூஷா

அன்னஹும் ரக்ஷந்தௌ பஹுதா விரூபம்

வாஜஹும் ஸநுதாம் யஜமானாய யஜ்ஞம்

ரேவதி நட்சத்திரம்

நட்சத்திர தேவதை : ஆதித்தர்களில் ஒருவரான பூஷா.

வடிவம் : மீன் வடிவத்தில் 32 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.

எழுத்துகள் : தே, தோ, ச, சீ.

ஆளும் உறுப்புகள் : கால்கள்.

பார்வை : சமநோக்கு.

பாகை : 346.40 - 360.00

நிறம் : தாமரை மலரின் நிறம்.

இருப்பிடம் : நீருள்ள இடம்.

கணம் : தேவ கணம்.

குணம் : மென்மை.

பறவை : வல்லூறு.

மிருகம் : பெண் யானை.

மரம் : பாலுள்ள இலுப்பை மரம்.

மலர் : மந்தாரை.

நாடி : வாம பார்சுவ நாடி.

ஆகுதி : மாம்பழம்.

பஞ்சபூதம் : ஆகாயம்.

நைவேத்யம்: எள் பொடி கலந்த அரிசி மாவு.

தெய்வம் : ஸ்ரீரங்கநாதர்.

சொல்ல வேண்டிய மந்திரம்

பூஷணம் பரமம் வந்தே ரேவதீசம் ச ம்ருத்யே

வராபயோஜ்வயகரம் ரத்ன சிம்ஹாசனே ஸ்திதம்

அதிர்ஷ்ட எண்கள் : 1, 5, 9.

அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூன், ரோஸ்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : திங்கள், வியாழன்.

அதிர்ஷ்ட ரத்தினம் : அபடைட்.

அதிர்ஷ்ட உலோகம் : தங்கம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

அபிமன்யு, ஏயர்கோன் கலிக்காம நாயனார், கலிக்கம்ப நாயனார், வாயிலார் நாயனார், குரு கோவிந்த சிங்.