Published:Updated:

நீங்கள் தைரியசாலிதான்... ஆனால்? - ரேவதி நட்சத்திர குணாதிசயங்கள்!

ரேவதி நட்சத்திரம்
ரேவதி நட்சத்திரம்

மூடக்கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். சபை நாகரிகம் தெரிந்தவர். உங்களில் பலர் ஓவியர், எழுத்தாளர், படைப்பாளி ஆகியோராக இருப்பீர்கள்.

ரேவதி நட்சத்திரம் குறித்து 'மிகு செல்வம், பாதிநாள் விளங்கும் நல்லவன், பிறர் சொல் கேட்பன், நல் குணவான்...' என்கிறது ஜாதக அலங்காரம். அதாவது நீங்கள் ஆயுட்காலத்தில் பாதி வரை மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்பவர்; நல்லவர்; மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவர்; குணவான் என்று கூறுகிறது. யவன ஜாதகம், 'நீங்கள் தனமுள்ளவர்; பளிச்சென்ற தோற்றமுள்ளவர்; பண்டிதன்; கோட்டைகளைக் கைப்பற்றுபவன்; பயணப் பிரியர்' என்கிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2m8HI4Y

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று நினைப்பீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல உங்களை மாற்றிக்கொள்வீர்கள். உள்ளுணர்வால் பெரிய சாதனைகளை நிகழ்த்துவீர்கள். பெற்ற அனுபவ அறிவை, கற்ற தத்துவங்களைச் சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி எடுத்துக் கூறுவீர்கள். தோழமைப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். நீங்கள் எல்லோராலும் விரும்பப்படுபவர். மூலதனம் இல்லாமல் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். சட்டத்திட்டங்களுக்கும் நீதிநெறிகளுக்கும் கட்டுப் பட்டவர். அந்நியர்களிடம் அதிகம் பழகுவீர்கள். பல மொழிகளில் பண்டிதர்.

மூடக்கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். சபை நாகரிகம் தெரிந்தவர்

ஜீவகாருண்யம் உடையவர். எல்லோருக்கும் இனியவர். எப்போதும் சிரித்த முகத்துடனும் அழகிய பல் வரிசையுடனும் காட்சி தருபவர். பொதுவாக உங்களுக்கு 21 வயது வரை சளித் தொந்தரவு இருக்கும். 24-வது வயதில் எல்லா இன்பங்களும் உண்டாகும். 40 வயதானாலும் 32 வயதைப்போல் தோற்றம் இருக்கும். ஆதலால் உங்களுடைய உண்மையான வயதைக் கண்டறிவது மிகவும் கடினம். மனைவிமீது பிரியமுள்ளவர். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் தருபவர். மூடக்கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். சபை நாகரிகம் தெரிந்தவர். உங்களில் பலர் ஓவியர், எழுத்தாளர், படைப்பாளி ஆகியோராக இருப்பீர்கள். ஏரோனாட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், பயோடெக், இயற்பியல், வேதியியல், மேலாண்மை, குழந்தை மருத்துவம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவீர்கள்.

லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட பல கிளப்புகளில் பெரிய பதவியை வகிப்பீர்கள். உடன்பிறந்தவர் களுக்காகப் பூர்வீகச் சொத்தை விட்டுக் கொடுப்பீர்கள். வஞ்சகமாக யோசிக்கத் தெரியாதவர். தாராள மனமும் அளவுக்கு அதிகமான இளகிய மனமும் உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்.

ரேவதி நட்சத்திரம்
ரேவதி நட்சத்திரம்

நீங்கள் தைரியசாலிதான். ஆனால், நோயுற்றால் கலவரம் அடைவீர்கள். உங்களில் பலர் அமைச்சர், அறங்காவலர் ஆகியோராக இருப்பீர்கள். சமூகத்தில் ஒரு வி.ஐ.பி-யாக விளங்குவீர்கள்.

- 'ரேவதி' நட்சத்திரக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள், குணாதிசயங்கள் என்னென்ன? - பலன்கள், பரிகாரங்களுடன் முழுமையாக அறிய https://www.vikatan.com/spiritual/astrology/revathi-star-characteristics

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |

அடுத்த கட்டுரைக்கு