Published:Updated:

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்

தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் ரிஷப ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் கணித்த தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்

சுபகிருது தமிழ் வருட ராசிபலன் ரிஷப ராசி - 14.4.22 முதல் 13.4.23 வரை

Published:Updated:
தமிழ்ப் புத்தாண்டு ராசிபலன் - ரிஷபம்

எல்லோரையும் நேசிக்கும் ரிஷப ராசி அன்பர்களே! சந்திரன் 4-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில், சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. உங்களின் வருமானம் உயரும். வாய்ப்பு வசதிகள் கூடும். புதிய சிந்தனைகள் உதயமாகும்.

வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டிற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் பண வரவு உண்டு. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்ரன் 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புது முயற்சிகள் வெற்றியடையும். பழைய கடன் தீரும். குடும்ப வருமானம் உயரும்.

சுபகிருது ஆண்டு முழுக்க சனிபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை அதிகமாகும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். வேற்று மொழியினரால் சில உதவிகள் கிடைக்கும். ஆனால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். `நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே’ என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்

புத்தாண்டில் கிரகங்களும் பலன்களும்:

வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி, 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவருடனான மோதல்கள் நீங்கும்.

அவரின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். மனக்கசப்பால் விலகியிருந்த வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம், அதிர்ஷ்டம் உண்டாகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையால் நீங்கள் புதிய பாதையில் செல்வீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து செலவுகளைக் குறைக்க திட்ட மிடுவீர்கள்.

19.10.2022 முதல் 12.11.2022 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால், இந்தக் காலக்கட்டத்தில் வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் வந்து போகும். இறுமல், சளி தொந்தரவு வந்து நீங்கும்.

வியாபாரிகளுக்கு...

சோர்வு நீங்கும்; உற்சாகம் அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கணிசமாக ஆதாயம் உண்டாகும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களைப் பகிரவேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். தை, மாசி, பங்குனி மாதங்களில் புது ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். மதிப்பு - மரியாதை கூடும். இரும்பு, கெமிக்கல், ரியல்எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

வெகுநாட்களாக எதிர்பார்த்தும் வராமல் போன பதவியுயர்வு ஆனி, ஆடி மாதங்களில் கிடைக்கும். அவ்வப்போது `உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே’ என்று ஆதங்கப்படுவீர்கள். எனினும் சம்பளம், சலுகைகள் உயரும். கணினித் துறையினருக்கு மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். உடன் பணி புரிபவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். மாசி, பங்குனி மாதங்களில் புதிய வாய்ப்புகள் வரும். எனினும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்வது நல்லது.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறுசிறு பிரச்னைகளைக் கொடுத்தாலும், காரிய வெற்றியைப் பெற்றுத் தருவதாகவும் உங்களைச் சாதிக்கவைப்பதாகவும் அமையும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism