Published:Updated:

சாதிக்கவைக்கும் சதயம்!

நட்சத்திர குணாதிசயங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்

நட்சத்திர குணாதிசயங்கள்

சாதிக்கவைக்கும் சதயம்!

நட்சத்திர குணாதிசயங்கள்

Published:Updated:
நட்சத்திர குணாதிசயங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர குணாதிசயங்கள்

ராகு பகவானின் மூன்றாவது நட்சத்திரம் சதயம். இது அதிக ஒளி கொண்ட நட்சத்திரம் என்றும், நூறு நட்சத்திரங்களின் (சதம் = 100) கூட்டமைப்பு என்றும் சில நூல்கள் கூறுகின்றன.

`ஞானங்கள் பலவும் கற்க வல்லன் நன்பொருள் தேடவல்லன் சாலவே அறிந்து சொல்லும் சதயநாள் தோன்றினானே...’ - என்கிறது, நட்சத்திர மாலை. ஜாதக அலங்காரம், `ஒழுக்கம் அற்றவர்களையும் கோபமுள்ளவர்களையும் வெறுப்பவர்; கடுமையற்ற நோய் உள்ளவர்; அனைவருக்கும் பிரியமானவர்; பொய் சொல்லாதவர்; சம்ஸ்கிருதம், தமிழ் போன்ற மொழிகளில் பண்டிதர்; உடல் வலிமையானவர்; நீர்நிலை விளையாட்டை விரும்புபவர்; பகைவர்களை வெற்றி காண்பவர்’ என்கிறது.

சாதிக்கவைக்கும் சதயம்!

யவன ஜாதகம், `நீங்கள் புத்திசாலி; சுகவாசி; அரசர், அந்தணர், பசு ஆகியவற்றை விரும்புபவர்; சத்தியத்தின் மீது நம்பிக்கை உடையவர்’ என்கிறது. `நீங்கள் தெளிவாகப் பேசும் திறமை கொண்டவர்; எதற்கும் கட்டுப்படாத வர்’ என்கிறது, பிருஹத் ஜாதகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், பல அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கண்டம் விட்டு கண்டம் செல்பவராகவும், திறமைசாலிகளைச் சந்தித்து மகிழ்பவராகவும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பவராகவும், பிரச்னைகளைத் தீர்ப்பவராகவும், எதிரிகளை எளிதில் வெற்றிகொள்ளும் பராக்கிரமசாலியாகவும் திகழ்வீர்கள். பூமியைப் போல் பொறுமையானவர் நீங்கள்.

நந்தி வாக்கியம் என்ற நூல், `நீங்கள் நொறுக்குத் தீனி தின்பவர்; பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவர்; ஆலயம் எழுப்புவீர்கள்; பித்த தேகம் உடையவர்’ என்று கூறுகிறது.

வசிஷ்ட சிந்தாமணி என்ற நூல், `பாமரர், படித்தவர் என்ற பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்; மனிதாபிமானம் உடையவர்’ என்கிறது. கேரளாச்சாரியம் என்ற நூல், `நீங்கள், சொத்தை விற்று செலவு செய்பவர்’ என்கிறது.

நீங்கள் எல்லோர்க்கும் உதவும் குணம் கொண்டவர். உடன்பிறந்தவர்கள்மீது பாசம் உள்ளவர். ஆனால், நீங்கள் வைக்கும் அளவுக்கு அவர்கள் உங்கள்மீது பாசம் வைத்திருப் பார்களா என்பது கேள்விக்குறிதான். சுய சிந்தனையாளராகவும், நேர்மையாளராகவும், கற்றறிந்தவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ப வராகவும் இருப்பீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள்.

18 வயது வரை எந்தக் குறிக்கோளும் இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்வீர்கள். பிறகு பெரிய குறிக்கோளுடன் செயல்பட்டு முன்னேறுவீர்கள். உங்களில் சிலர், கப்பலில் பணியாற்றுவீர்கள். பைலட், தொழிலதிபர், தொழிற்சங்கத் தலைவர் ஆகிய பணிகளிலும் இருப்பீர்கள். உங்களில் பெரும்பாலோர் ஸ்டீல், கார் தொழிற்சாலை, பனியன் கம்பெனி, சாயப் பட்டறை, உணவகம் ஆகியவற்றை வைத்து நடத்துவீர்கள்.

சாதிக்கவைக்கும் சதயம்!

ஆரம்பத்தில் தனியார் துறையில் வேலை பார்த்தாலும், 39 வயதுக்குப் பிறகு உங்களில் பலரும் சுயதொழில் செய்பவர்களாகவே இருப்பார்கள். கனரக வாகன வியாபாரம், மேம்பாலம் கட்டுவது, சாலை அமைத்தல், அனல் மின் நிலையம் கட்டுவது, விமான நிலையம் கட்டுவது, கடலுக்குள் பாலம் கட்டுவது போன்ற பிரமாண்டப் பணிகளைச் செய்பவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் மனைவி சொல்லை ஏற்பவராகவும், அவருடைய வழிகாட்டலைப் பின்பற்றுபவராகவும், பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் தருபவராகவும் இருப்பீர்கள். 51 வயது முதல் பெரிய பதவிகள் தேடி வரும். சமூக அந்தஸ்தும் உயரும்.

முதல் பாதம்

(ராகு + கும்ப சனி + தனுசு குரு)

முதல் பாதத்துக்கு நவாம்ச அதிபதி தனுசு குரு. இதில் பிறந்தவர்களுடைய அகராதியில் முடியாது என்ற வார்த்தைக்கே இடமில்லை. எதையும் முயன்று பார்த்து சாதித்துவிடுவார்கள்.

யார் எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்கா மல் தைரியமாக பதிலளிப்பார்கள். பணிவு உள்ளவர்கள். நாஸ்திகரையும் மாற்றும் அளவுக்கு தெய்வ பக்தி இருக்கும். தாய், தந்தை, குரு ஆகியோரை மதிப்பார்கள். ஏழை எளியவர்க்கு இயன்றதைக் கொடுத்து உதவும் இரக்க குணம் கொண்டவர்கள்.

கெட்டவர்களை ஒதுக்கிவிடாமல் அவர்களை நல்லவர்களாக ஆக்குவார்கள். நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நன்றி மறவாதவர்கள். பசு, பூனை, மீன் போன்ற ஜீவன்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

சிறு வயதிலிருந்தே கல்வி, விளையாட்டு ஆகிய எல்லாவற்றிலும் சிறந்து விளங்கு வார்கள். எவ்வளவு கற்றிருந்தாலும் தன்னடக்கத்துடன் இருப்பார்கள். மற்றவர்கள் ஏற்கும்படி அறிவுரை கூறுவர்.

சர்க்கரை ஆலை, பெட்ரோல் பங்க், கார் ஷோரூம், செல்போன் கம்பெனி, சூப்பர் மார்க்கெட் போன்றவற்றை நடத்துவார்கள். மனைவியை நேசிப்பவர்கள். பிள்ளைகள் எதையும் கேட்பதற்கு முன்பே அவர்கள் மனதைப் புரிந்துகொண்டு, வேண்டியதைச் செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.

24 வயதிலிருந்து வாழ்க்கையில் புதிய பாதை தெரியும். 33 வயதிலிருந்து வசதியான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

பரிகாரம்: சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்க ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள்; நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.

இரண்டாம் பாதம்

(ராகு + கும்ப சனி + மகர சனி)

ரண்டாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மகர சனி. இதில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகள். துணிச்சல் மிகுந்தவர்கள். எவர் குறித்தும் புறம்பேச மாட்டார்கள். முகத்துக்கு நேராகப் பேசக் கூடியவர்கள். சிலர், கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் ஏமாற்றங் களையும் இழப்புகளையும் அவ்வப்போது சந்திப்பார்கள்.

சிறு வயதில் படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தா லும் விளையாட்டில் பரிசுகளும் பாராட்டுகளும் பெறுவார்கள். வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அவ்வப்போது சின்னஞ்சிறு தடைகள் இருக்கும்.

தாய் தந்தையருக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் கல்வி தடைப்பட்டுப் பிறகு தொடரும். கல்லூரியில் நுழைவதற்கு முன்பே குடும்பப் பொறுப்புகளை ஏற்கவேண்டிய சூழ்நிலை சிலருக்கு உருவாகும். சில நேரங்களில் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல் சில நேரங்களில் இருப்பார்கள்.

இவர்களுக்கென்று தனி ஆசையோ லட்சியமோ இருக்காது. பெற்றோர், உடன்பிறந்தவர்களின் ஆசை களை நிறைவேற்றுவதே இவர்களுடைய ஆசையாக, குறிக்கோளாக இருக்கும். முன்கோபத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் இவர்கள் ஒதுக்கித் தள்ளினால் வெற்றி நிச்சயம்.

இவர்கள் பழைய இரும்புக் கடை, ஈஸ்ட் தயாரிப்பு, கோழிப் பண்ணை, இரால் பண்ணை, ஆட்டோமொபைல் ஆகியவற்றை நடத்துவார்கள். மனைவி, குழந்தைகளிடம் கொஞ்சம் கறாராகவே நடப்பார்கள். பாசம் இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார்கள். 26 வயதுக்குப் பிறகு சாதிக்கும் எண்ணமும் துடிப்பும் உண்டாகும். 31 வயது முதல் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம் : உத்தரகோசமங்கையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீமங்களேஸ்வரியம்மை உடனுறை ஸ்ரீமங்களநாதரை வணங்கி வழிபட்டு வாருங்கள்; எதிர்காலம் சிறக்கும்.

மூன்றாம் பாதம்

(ராகு + கும்ப சனி + கும்ப சனி)

தில் பிறந்தவர்கள் பல போராட்டங்களைச் சந்தித்து முன்னேறுவார்கள். தனக்கென வாழாத பெருந்தகைகள் இவர்கள். நல்லதே செய்து நலிந்தவர்கள். மற்றவர்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் எப்போதும் பாடுபடு வார்கள். துளியும் சுயநலம் இருக்காது.

சமூகச் சீர்கேடுகளையும் மூடநம்பிக்கை களையும் களைய முற்படுவார்கள். எது முடியும் என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வார்கள். மற்றவர்களின் ஆலோசனையை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் சூழ்நிலை காரணமாகப் பொய் சொல்ல நேரிடும்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் யாரிடமும் கைநீட்ட மாட்டார்கள். சில நேரங்களில் எதிர்மறையாகப் பேசுவார்கள்.

இவர்களில் பலருக்கு, எட்டு வயதுக்குள் இளம்பிள்ளை வாதம், மூளைக் காய்ச்சல், சளித் தொந்தரவு, வயிற்று உப்புசம், தோல் நோய் போன்றவை வந்து நீங்கும். 19 வயதுக்குப் பின் நல்ல ஆரோக்கியம் உண்டு.

இவர்களில் பலருக்குப் பித்தத்தின் காரணமாக சிறு வயதிலேயே முடி நரைக்கும். கட்டடம் கட்டுதல், கட்டடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட பழைய பொருள்களை விற்பனை செய்தல், ஃபர்னிச்சர், ஹார்ட்வேர், பழைய வாகனங்களை வாங்கி விற்பது, நட்சத்திர உணவகம், மசாஜ் சென்டர், அழகு நிலையம், முடி திருத்தகம், லெதர் ஷோரூம், மீன் கடை, பீடா ஸ்டால், ஆயில் மில் ஆகியவற்றை வைத்து நடத்துவார்கள். 28 வயதிலிருந்து எல்லாவற்றையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும்.

பரிகாரம் : தஞ்சாவூரில் அருள்புரியும் ஸ்ரீபெரிய நாயகியம்மை உடனுறை ஸ்ரீபிரகதீஸ்வரரையும், ஸ்ரீகருவூர்தேவரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்; தடைகள் அனைத்தும் நீங்கி உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றிமேல் வெற்றி பெறுவீர்கள்.

நான்காம் பாதம்

(ராகு + கும்ப சனி + மீன குரு)

நான்காம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி மீன குரு. இதில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு தெய்விகமாக இருப்பார்கள். யாரையும் அவ்வளவு எளிதாக நம்பமாட்டார்கள். எந்த வேலையையும் தாங்களே செய்யவேண்டும் என்று நினைப்பார்கள்.

மிகவும் சாந்தமானவர்களே என்றாலும் கோபம் வந்தால் பொங்கி எழுவார்கள். படிப்பில் முதலிடம் பிடிப்பார்கள். தன்மானம் அதிகம் உள்ளவர்கள். இலவசமாக எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பல பிரபலங்களின் அறிமுகம் இவர்களுக்கு உண்டு.

அறக்கட்டளை வைத்து நடத்துவார்கள். இவர்களில் சிலர் ஐ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ்., துப்பறிவாளர், வேதியியல் அறிஞர், ஆங்கிலப் பேராசிரியர்... என்று பணிபுரிவார்கள்.

பாரம்பரியப் பண்பாட்டை மறக்கமாட்டார்கள். தங்கம், வைரம் மற்றும் ரத்தின ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள். தாய், தந்தையைத் தெய்வமாக நினைப்பார்கள். சகோதரிகளுக்காக எல்லா உதவிகளையும் செய்வார்கள். எப்போதும் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக சவாலான காரியங்களில் இறங்கி சாதிப்பார்கள்.

சிலருக்குத் தாமதமாகத் திருமணம் நடக்கும். சரியான வயதில் திருமணம் முடிந்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் தாமதமாக ஏற்படும். காதலை நம்பமாட்டார்கள். பள்ளி, கல்லூரி, வேத பாடசாலை, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு, யோகா - தியான மையம் ஆகியவற்றை நடத்துவார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் 23 வயதிலிருந்து மகிழ்ச்சி தங்கும். 39 வயதுக்குள் அரிய சாதனைகளைச் செய்வார்கள். 42, 46, 47, 51 ஆகிய வயதுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உண்டு.

பரிகாரம் : தஞ்சாவூருக்கு வடக்கே உள்ள தென்குடித்திட்டையில் அருள்புரியும் ஸ்ரீஉலக நாயகியம்மை உடனுறை ஸ்ரீவசிஷ்டேஸ்வரரையும் பசுபதீஸ்வரரையும் தரிசித்து, வணங்கி வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.

சதயம்!

நட்சத்திர தேவதை : வருணன்.

வடிவம் : கோள வடிவத்தில் தோன்றும் 100 நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டம்.

எழுத்துகள் : கோ, ஸ, ஸீ, ஸு.

ஆளும் உறுப்புகள் : முழங்கால், கணுக்கால்.

பார்வை : மேல்நோக்கு.

பாகை :306.40 - 320.00

நிறம் : சிவப்பு.

இருப்பிடம் : வெட்டவெளி.

கணம் : ராட்சத கணம்.

குணம் : உறுதி.

பறவை : அண்டங்காக்கை.

மிருகம் : பெண் குதிரை.

மரம் : பாலில்லாத கடம்பு மரம்.

மலர் : தாமரை.

நாடி : தட்சிண பார்சுவ நாடி.

ஆகுதி : பூசணித் துண்டு.

பஞ்சபூதம் : ஆகாயம்.

நைவேத்தியம் : நெய் கலந்த பட்சணங்கள்.

தெய்வம் : ஆஞ்சநேயர்.

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்

ஊர்வாருகமிவபந்தனான் ம்ருத்யோர் முக்ஷீயமாம்ருதாத்

அதிர்ஷ்ட எண்கள் : 4, 6, 8.

அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர்ச் சாம்பல், கிளிப் பச்சை.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.

அதிர்ஷ்டக் கிழமைகள் : வெள்ளி, சனி.

அதிர்ஷ்ட ரத்தினம் : லேபரோடைட்.

அதிர்ஷ்ட உலோகம் : இரும்பு, பித்தளை.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

பிருகு மகரிஷி, ராஜராஜசோழன், குன்றக்குடி அடிகளார், அப்பூதி அடிகள், கோச்செங்கட்சோழன், தண்டியடிகள்.

சதய நட்சத்திரத்தில்...

விவாகம், வித்யாரம்பம், குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், தான்யம் வாங்குதல், விதை விதைத்தல், மாடு, குதிரை, பூமி வாங்குதல், யாத்திரை, கிரகப்பிரவேசம், மாங்கல்யம் செய்தல், தொட்டிலில் குழந்தையை இடுதல், வீடு கட்டுதல், மருந்துண்ணல் ஆகிவற்றைச் செய்தால் நன்மையும் வெற்றியும் உண்டாகும்.

பரிகார ஹோம மந்திரம்

க்ஷத்ரஸ்ய ராஜா வருணோஅதிராஜ:

நக்ஷத்ராணாஹும் சதபிஷக் வஸிஷ்ட்ட:

தௌ தேவேப்ப்ய: க்ருணுதோ தீர்க்கமாயு:

சதஹும் ஸஹஸ்ரா பேஷஜா நிதத்த:

யஜ்ஞந் நோ ராஜா வருண உபயாது

தந்நோ விச்வே அபி ஸம்யந்து தேவா:

தந்நோ நக்ஷத்ரஹும் சதபிஷக்ஜுஷாணம்

தீர்க்கமாயு: ப்ரதிரத்பேஷஜானி