பிரீமியம் ஸ்டோரி
ராசிபலன்

மேஷம்: ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் சாதிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் வீடு மாற வேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துகொள்வார்கள். பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். சூரியனும் புதனும் சாதகமாக இருப்பதால் புது பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

ராசிக்குள் ராகு நிற்பதால் யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். செவ்வாய் ராசிக்குள் நிற்பதால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது வாடிக்கையாளர் கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் கிட்டும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வேளை இது.

ராசிபலன்


ரிஷபம்: சூரியன் லாப வீட்டில் வலுவாக நிற்பதால் பணவரவு உண்டு. சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிட்டும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் உங்களைப் புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள். பழைய வழக்கில் வெற்றி உண்டு. சுக்கிரனும் புதனும் வலுவாக இருப்பதால் சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, மனை வாங்குவீர்கள். 8-ல் கேது தொடர்வதால் எதிலும் பிடிப்பில்லாமல் போகும். சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய் 2 - ல் நிற்பதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாள்கள் கடமையுணர்வுடன் செயல்படு வார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள்.

தொலைநோக்குச் சிந்தனையால் இலக்கை எட்டிப் பிடிக்கும் தருணம் இது.

ராசிபலன்

மிதுனம்: பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர், வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். சூரியன் 9 - ம் வீட்டில் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள், அவருக்கு உடல் நிலை பாதிப்பு வந்து போகும். உங்கள் ராசிநாதன் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

கேது வலுவாக இருப்பதால் வேற்று மொழி, வெளிநாட்டினரால் திடீர் திருப்பம் உண்டாகும். செவ்வாய் ராசிக்கு 12 - ல் மறைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். சகோதரரால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். கலைத்துறையினர் கௌரவிக்கப்படுவார்கள்.

உங்களின் வெற்றிப் பயணம் தொடரும் காலம் இது.

ராசிபலன்


கடகம்: சுக்கிரனும் புதனும் சாதகமாக இருப்பதால் மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். வி.ஐ.பிகளின் ஆதரவால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தின் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடன் பிரச்னையைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

சூரியன் 8-ல் மறைந்திருப்பதால் அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிணக்குகள் நீங்கும். செவ்வாய் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தன்னம்பிக்கை, பணவரவு அதிகரிக்கும். பாக்கி பணத்தைத் தந்து புதிய சொத்துக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் சிறு இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே, உதாசினப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விட்டதைப் பிடிக்கும் காலம் இது.

ராசிபலன்

சிம்மம்: சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டுமென எண்ணுவீர்கள். நெருங்கிய நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீட்டை அழகு படுத்துவீர்கள்.

செவ்வாய் 10 - ல் நிற்பதால் கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஓடி வந்து உதவுவார்கள். ராசிநாதன் சூரியன் 7 - ல் நிற்பதால் வேலைச்சுமை, வாழ்க்கைத் துணைவருக்கு வயிற்று வலி, அலைச்சல் வந்து போகும். புதன் 6 - ல் நிற்பதால் உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். அலுவலகத்தை விரிவுபடுத்துவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரை மூத்த கலைஞர்கள் பாராட்டுவார்கள்.

வசதி, வாய்ப்புகள் பெருகும் வேளை இது.

ராசிபலன்

கன்னி: சூரியன் 6 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டட வரைபடமும் அனுமதியாகும். தந்தைவழி உறவினர் ஒத்தாசையாக இருப்பார்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

செவ்வாய் 9-ம் வீட்டிலேயே நிற்பதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகமாகும். சுக்கிரன் 6 - ல் மறைவதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனம் பழுதாகும். ராசிநாதன் சாதகமாக இருப்பதால் சோர்வு நீங்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். சாலைகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். கலைத்துறையினரின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வரும்.

கூடா பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டிய வேளை இது.

ராசிபலன்

துலாம்: சூரியன் 5-ல் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மிகப் பணிகளை முன்னின்று செய்வீர்கள். புதனும் சுக்கிரனும் சாதகமாக நிற்பதால் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். நட்பால் ஆதாயம் உண்டு. வாகனத்தைச் சரி செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

செவ்வாய் 8-ல் நிற்பதால் மனைவிக்குச் சிறுசிறு அறுவை சிகிச்சை, ஏமாற்றம், அடிவயிற்றில் வலி வந்து போகும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். பழைய வாடிக்கையாளர்களும் பங்குதாரர்களும் தேடி வருவார்கள். புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை மூத்த அதிகாரி உங்களிடம் பகிர்ந்து கொள்வார். கலைத் துறையினர் வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழ் அடைவார்கள்.

சவால்களைச் சமாளித்து முன்னேறும் நேரம் இது.

ராசிபலன்

விருச்சிகம்: புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய கோணத்தில் யோசித்து பழைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். சுக்கிரன் வலுவாக நிற்பதால் வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வீட்டுக் கடன் கிடைக்கும்.

ராசிக்குள் கேதுவும் 7 - ல் ராகுவும் நிற்பதால் எதிலும் ஈடுபாடற்ற நிலை, மனஇறுக்கம் வந்து செல்லும். திடீர் பயணங்கள் உண்டு. செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. கலைத்துறையினர், மூத்த கலைஞர்களின் நட்பைப் பெறுவார்கள்.

நேர்மறை எண்ணங்களால் ஏற்றம் பெறும் வேளை இது.

ராசிபலன்

தனுசு: சூரியன் 3-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் அமையும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாக அமையும்.

புதனும், சுக்கிரனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். ராகு 6-ம் வீட்டில் வலுவாக உள்ளதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். தொண்டு நிறுவனங்களின் அறிமுகம் கிடைக்கும். செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் புகழ், கௌரவம் உயரும். வியாபாரத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு அதிரடி மாற்றங்கள் உண்டு.

தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது.

ராசிபலன்

மகரம்: புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். புது வேலை கிடைக்கும். சகோதரிக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலம் சீராகும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சூரியன் ராசிக்கு 2-ல் நிற்பதால் கண், காது வலி வந்து நீங்கும்.

செவ்வாய் 5-ல் தொடர்வதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உங்களைத் தாக்கிப் பேசினாலும் பதற்றப்படாதீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். கலைத்துறையினருக்கு நீண்ட நாள் கனவு நனவாகும்.

தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நிறைவேறும் நேரம் இது.

ராசிபலன்

கும்பம்: சுக்கிரன் வலுவாக இருப்பதால் செயலில் வேகம் காட்டுவீர்கள். அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். திருமணப் பேச்சு வார்த்தை கைகூடும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள்.

ராசிக்குள் சூரியன் நிற்பதால் உஷ்ணத்தால் உடல் பாதிப்பு உண்டாகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். 4-ம் வீட்டில் செவ்வாய் செல்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவு வந்து போகும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வேலையாள்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து விலகும். சக ஊழியர்கள் உதவுவார்கள். கலைத்துறையினரின் கற்பனைத் திறன் வளரும்.

பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காணும் வேளை இது.

ராசிபலன்

மீனம்: சுக்கிரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த மனைவிவழி உறவினர்கள் விரும்பி வந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். ராசிக்கு 12-ல் சூரியன் அமர்ந்திருப்பதால் வீண் டென்ஷன், திடீர் பயணம், தூக்கமின்மை வந்து போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.

செவ்வாய் 3-ல் நிற்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ராகு வலுவாக இருப்பதால் வேற்றுமொழி, வெளிநாட்டினாரால் திடீர் திருப்பம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர், புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள்.

பணப் புழக்கமும் லாபமும் உயரும் வேளை இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு