Published:Updated:

சூரிய முகமா, சந்திர முகமா? உங்கள் குணாதிசயங்கள் எப்படி? - பகுதி - 1 #Video

சாமுத்ரிகா லட்சணம்

ஒரு மனிதனின் முகம் எவ்வாறு அமைகிறதோ அதைக்கொண்டு அவர் குறித்த தகவல்களை அவர் சொல்லாமலேயே அறிந்துகொள்ள முடியும் என்கிறது இந்த நூல். ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக லட்சண சாஸ்திரம்!

சூரிய முகமா, சந்திர முகமா? உங்கள் குணாதிசயங்கள் எப்படி? - பகுதி - 1 #Video

ஒரு மனிதனின் முகம் எவ்வாறு அமைகிறதோ அதைக்கொண்டு அவர் குறித்த தகவல்களை அவர் சொல்லாமலேயே அறிந்துகொள்ள முடியும் என்கிறது இந்த நூல். ஜோதிட சாஸ்திரம் சொல்லும் முக லட்சண சாஸ்திரம்!

Published:Updated:
சாமுத்ரிகா லட்சணம்

ஜோதிட சாஸ்திரம் என்பது வெறும் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் அறிவியல் என்பதுபோன்ற கருத்து பலரிடம் உள்ளது. மக்களும் அவற்றை மட்டுமே அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரம் என்பது கடல் போன்றது. பரந்துவிரிந்த அதன் ஞானம், நவீன காலத்துக்கும் தேவையான பல விஷயங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளது. உதாரணமாக உடல்மொழி (Body Language) குறித்து இன்று பலரும் பேசுகிறார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரம் இதுகுறித்து விரிவாகப் பேசுகிறது.

• ஜோதிட சாஸ்திரம் ஆதியில் பரமேஸ்வரனால் பார்வதிதேவிக்கு உபதேசிக்கப்பட்டு, பின்னர் ரிஷி பரம்பரை மூலம் இந்த சாஸ்திரம் உலகுக்கு அருளப்பட்டதாக ஞானநூல்கள் கூறும். நாரதர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, வாமதேவர், ரோமர், மரிசி முதலான மஹரிஷிகள் மூலம் ஜோதிடம் குறித்த ஞானம் உலகுக்கு அருளப்பட்டது என்பர். இவர்களில் பிருகு முனிவர் அருளியது பிருகு சம்ஹிதை. இது நமது எதிர்காலத்தை தெரிவிக்கும் ஜோதிட சாஸ்திர நூல் எனில், மனிதனின் அவயவங்களின் லட்சணத்தைக் கொண்டு அவனது குணநலன்களை விரிவாக விளக்கும் வகையில் பிருகு முனிவர் அருளிய நூல், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் ஆகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமுத்திர தேவனாகிய வருண தேவனின் மைந்தர் பிருகு முனிவர். இவர், மனித வள மேன்மையைக் கருதி தன் தந்தையிடம் இருந்து சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தைக் கேட்டறிந்து, உரிய முறையில் இந்த உலகுக்கும் அளித்தார் என்கின்றன புராணங்கள். மனித அங்க லட்சணத்தை விவரிக்கும் மிக அற்புதமான சாஸ்திர நூல் இது.

இந்த நூலின் துணைகொண்டு ஒரு மனிதனின் அங்க லட்சணங்களைக் கண்டு அவரின் குணத்தையும் வாழ்க்கையையும் அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள். அப்படிப்பட்ட அரிய ஞான நூலான சாமுத்ரிகா லட்சணம் கூறும் முக லட்சணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

சந்திர முகம்
சந்திர முகம்
ஒரு மனிதனின் முகம் எவ்வாறு அமைகிறதோ அதைக்கொண்டு அவர் குறித்த தகவல்களை அவர் சொல்லாமலேயே அறிந்துகொள்ள முடியும் என்கிறது இந்த நூல். ஒவ்வொரு முக அமைப்பாக எடுத்துச்சொல்லி விரிவாக விளக்குகிறார் காழியூர் நாராயணன். அதன் முதல் பாகத்தினை கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism