
ஜோதிடர் பாரதிஶ்ரீதர்
இதுவரை லாபத்தில் இருந்த சனிபகவான், இப்போது ஏழரைச் சனியாக விரயத்தில் வருகிறார். எனினும் இயன்றவரையிலும் விரயங்களைச் சுப விரயமாக நாம் மாற்றிக்கொள்ளலாம். வீடு, நிலம், மனை வாங்குவது, வாகனங்கள் வாங்குவது என்று செயல்படலாம். விரயச் சனி நிகழும் காலத்தில், திட்டமிட்டு செயல்பட்டால் மன அழுத்தமோ, பொருளாதார இழப்போ ஏற்படாது.

இந்தச் சனிப் பெயர்ச்சிக் காலத்தில் உங்களுன் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்; குதூகலம் கூடும். இதுவரை இருந்துவந்த மருத்து வச் செலவுகள் குறையும். சகோதர, சகோதரிகளுடன் உறவுகள் மேம்படும். புதிய வியாபார முயற்சிகளில் வெற்றி உண்டு. எந்த வேலையில் ஈடுபட்டாலும், முதலில் குலதெய்வப் பிரார்த்தனை செய்வது நல்லது. அப்போது காரியங்களில் ஜெயம் உண்டாகும். எனினும் அவ்வப் போது மனக்குழப்பங்கள் வந்துபோகும். ஆகவே, நண்பர்கள் மற்றும் பெரியவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது சிறப்பு. கலைத்துறை, அரசுப் பணிகளில் உள்ளோருக்கு முன்னேற்றம் உண்டாகும்.
பெண்களுக்கு: ஆரோக்கியம் மேம்படும். குழந்தைப்பேறு வேண்டி சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கு, நல்ல பலன் கிடைக்கும். எனினும் இந்தச் சனிப்பெயர்ச்சி, பணியிடத்திலும் குடும்பத்திலும் அதீத வேலைகளை, பொறுப்புகளைத் தருவதாக அமையும். புதியவர் களிடம் எச்சரிக்கை தேவை. வாகனங்களில் வெளியூர்ப் பயணம் மேற் கொள்ளும்போது கவனம் தேவை. கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். எனினும் வீட்டில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
மாணவர்களுக்கு: படிப்பு, ஆரோக்கியம் இரண்டிலுமே அதீத கவனம் தேவை. சோம்பலைத் தவிர்க்கவும். புதிய நட்புக்களைச் சற்றுத் தள்ளி வைப்பது நல்லது. எவ்விதப் பிரச்னைகள் என்றாலும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளவும். தினமும் விநாயகர் அகவல், சரஸ்வதிக் கவசம், ஹயக்ரீவர் காயத்ரீ ஜபித்தால் நல்ல பலன்கள் வாய்க்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: பணியிடத்தில் பேரும் புகழும் கிடைக்கும். அதேநேரம், பணியில் அதீத கவனம் தேவை. உயர் அதிகாரிகள், சக ஊழியர்களால் பிரச்னைகள் வரலாம். பேசும்போது கவனம் வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்குச் சற்று சோதனை காலம் இது. அதை சாதனையாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.
வியாபாரிகளுக்கு: இரும்பு, எண்ணெய், தாவரங்கள் மற்றும் மரத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய தொழில்களில் இப்போது இறங்கவேண்டாம். ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங் கல் தொழிலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை அவசியம். ஆபரணத் தொழில் செய்வோர் கடன் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது அவசியம். கூட்டுத் தொழிலில் புதிய முயற்சி வேண்டாம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கலாம். அனுமன் சாலிசா படிப்பது நல்லது. இயன்றவரையிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்; நன்மைகள் தேடி வரும். அன்னதானம், வஸ்திர தானம் செய்வதால், காரிய ஜெயம் உண்டாகும்.