சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

மேஷம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023

மேஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
மேஷம்

ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

புத்தாண்டில் ஜனவரி - 17 அன்று நிகழும் சனிப்பெயர்ச்சி, மேஷ ராசி நேயர்களுக்கு எதிர்பாராத சந்தோஷம், வாழ்க்கையில் ஒரு ஏற்றம், தன லாபம் மற்றும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக அமையப்போகிறது. கடந்த இரண்டரை வருட காலம் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேஷம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023
மேஷம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023

ங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி அமர்கிறார். உங்கள் அந்தஸ்து உயரும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய கனவுகள் பலவும் நிறைவேறும் காலம் இது. புது வீடு, வாகனம், பதவி உயர்வு அனைத்தும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். எனினும் உணவு விஷயத்தில் சற்றுக் கவனம் தேவை. நல்ல நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். பெரியோர்களின் சந்திப்பு கிட்டும். ஆன்மிகத் தலைவர்களின் ஆசி, பித்ருக்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். கல்யாணத்தை எதிர்நோக்கியுள்ள பெண்களுக்குத் திருமண யோகம் கூடிவரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். அடுத்து வரும் இரண்டரை ஆண்டுகளில் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், ஏணிப்படிகளாகவே திகழும்.

பெண்களுக்கு: வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பொற்காலம் இது. இழுபறியில் இருந்த வேலைகள் முடிவடையும். பணியிட மாற்றம், அரசு வேலை வாய்ப்பு முதலானவை திருப்திகரமாக அமையும். திருமண யோகம் கைகூடும். குழந்தைப் பேற்றுக்காக சிகிச்சையில் இருக்கும் பெண்கள் நல்லதொரு செய்தியை எதிர்பார்க்கலாம். பிறந்த வீட்டால் லாபங்கள் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

மாணவர்களுக்கு: படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் தடைப்பட்ட மேல் படிப்பைத் தொடர வாய்ப்பு உண்டு. தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். கலைத் துறை மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:
பணியில் உயர்வு உண்டு. புதிய வேலைக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனியார் பணியில் வேலை செய்பவர்களுக்கு லாபம் ஏற்படும். வழக்குகள் சுமூகமாக முடியும். அரசு வேலை செய்பவர்களுக்குப் பணி மாற்றம் உண்டு. அதுவும் நல்ல விதமாகவே அமையும்.

வியாபாரிகளுக்கு: இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு வியாபார வளர்ச்சியைக் கொடுக்கும். தங்கம், வெள்ளி, தாமிரம், உழவுத் தொழில், மாட்டுத்தீவனம் இதுபோன்ற வியாபாரம் சிறப்பளிக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் சற்றுக் கவனம் வேண்டும். ஜவுளி, ரியல் எஸ்டேட் மற்றும் கல்வித்துறை மேம்படும். புதிய வியாபார முயற்சி வெற்றி அடையும். கூட்டுத்தொழில் முயற்சி, புதிய கடன் முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றவும். அனாதைக் குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கும் முதியோர்களுக்கும் அன்னதானம், வஸ்திர தானம் செய்யலாம்.