சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

மிதுனம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்  2023

மிதுனம்
பிரீமியம் ஸ்டோரி
News
மிதுனம்

ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

அஷ்டமத்துச் சனியிலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய பொன்னான காலம் இது. உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். பாக்கியத்தில் வரக்கூடிய சனிபகவான், உங்களுக்குப் பல ஆசீர்வாதங்களைக் கொடுக்கப் போகிறார்.

மிதுனம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்  2023
மிதுனம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள்  2023

திருமண யோகம், வீடு - பூமி வாங்குவது அல்லது மாற்றுவது உங்களுக்குச் சாதகமாக அமையும். உங்களில் பலருக்கும் வாகன யோகம் அமையும். வெகுநாள்களாகக் காத்திருந்து தடைப்பட்டுப் போன பிரயாண வாய்ப்புகள் மீண்டும் அமையும்.

நீண்ட நாள்களாக உங்களை மனக் கலக்கத்துக்கு ஆளாக் கிய வழக்குகள் யாவும் முடிவுக்கு வரும்; முடிவு உங்களுக்கு ஆறுதல் தரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இந்த ராசிக்காரர்களில் குழந்தை வரம் வேண்டி எதிர்பார்த்திருந்த அன்பர்களுக்குத் தித்திப்பான தகவல் உண்டு. அதேபோல், பிள்ளைகளின் போக்கைக் கண்டு வருத்தத்தில் இருந்த அன்பர்களுக்கு, இந்தச் சனிப்பெயர்ச்சி நிம்மதியை அளிக்கும். எண்ணிய காரியங்கள் முறையே நடக்கும். சகோதர, சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை பலப் படும். தீராத கடன் மற்றும் குடும்பச் சண்டைகள் முடிவுக்கு வரும். பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு: மனக்குழப்பத்திலிருந்து வெளிவருவீர்கள். சிந்தித்துச் செயல்படும் காலம் இது. காரிய வெற்றி கைகூடும். மனதில் நிம்மதி பிறக்கும். திருமண வாழ்வில் இருந்த கசப்புகள் விலகும். வேலைக்குப் போகும் பெண்களுக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படும். பணியில் கடினநிலை மாறும்.

மாணவர்கள்: படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெண் குழந்தை களுக்குச் சிந்தனை வளம் அதிகரிக்கும். படிப்பிலும் போட்டிக ளிலும் கவனம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கனவுகள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்கள்: அரசு வேலையில் பணி மாற்றம் மற்றும் இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு, மாற்றங்கள் கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி மற்றும் சம்பள உயர்வு உண்டு.

வியாபாரிகளுக்கு: புதிய தொழில் தொடங்கும் முயற்சி, கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வியாபார விஸ்தரிப்பில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் கோயில்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யுங்கள். திருவோண நட்சத்திரத்தில் ஏழுமலையானை வணங்க துன்பங்கள் தீரும். ஏகாதசி தினத்தில் பசுக்களுக்கு உணவு அளியுங்கள்; காரிய வெற்றி உண்டாகும்.