Published:Updated:

கவனமாக காய் நகர்த்த வேண்டிய கடக ராசிக்காரர்களுக்குரிய திருக்கணித சனிப்பெயர்ச்சிப் பலன்கள்!

சனிப் பெயர்ச்சி
சனிப் பெயர்ச்சி

கண்டகச் சனி, வாழ்வில் சில சிக்கல்களை பிரச்னைகளை உருவாக்குவார் என்பது பொதுவான ஜோதிட விதி. ஆனால், இந்த முறை அப்படி நிகழ வாய்ப்பில்லை. காரணம், சனி பகவான் சொந்த வீடான மகர ராசியில் சுபத்துவ சூட்சும பலம் பெறுகிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24.1.2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியின் பலன்கள் கடக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

Cancer
Cancer

கடக ராசியினருக்கு 6-ம் இடமான தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்கிறார் சனிபகவான். ஏழாம் வீட்டுச் சனியை 'கண்டகச் சனி காலம்' என்று அழைப்பார்கள். 

கண்டகச் சனி, வாழ்வில் சில சிக்கல்களை பிரச்னைகளை உருவாக்குவார் என்பது பொதுவான ஜோதிட விதி. ஆனால், இந்த முறை அப்படி நிகழ வாய்ப்பில்லை. காரணம், சனி பகவான் சொந்த வீடான மகர ராசியில் சுபத்துவ சூட்சும பலம் பெறுகிறார். அதனால், கடக ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான கெடுபலனையும் சனி பகவான் செய்ய மாட்டார்.

6-ம் இடத்தில் இருந்தபோதும், சனி பகவான் கடக ராசிக்காரர்களுக்கு பெரிதாக ஒன்றையும் கொட்டிக் கொடுத்துவிடவில்லை. இப்போது இருக்கும் 7-ம் இடத்தில் பெரிதாக எதையும் கொடுக்கவில்லையென்றாலும் ஓரளவு நீங்கள் திருப்தி அடையும் அளவு நிச்சயம் நற்பலன்களைத் தருவார்.

 7-ம் இடத்து சனி, வாழ்க்கைத் துணையுடன் தேவையற்ற வீண் வாக்குவாதங்கள், சர்ச்சைகளை உருவாக்கி, ஒருவருக்கொருவர் பிரிந்திருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவார். வியாபாரத்திலிருப்பவர்களுக்குப் பங்குதாரர்கள் உங்களை விட்டுப் பிரிந்துசெல்வார்கள்.

Cancer
Cancer

நண்பர்கள், பங்குதாரர்கள், மனைவி, கணவன் எனத் தோழமையோடு இருக்கக்கூடிய உறவுகளைப் பிரிந்து மீண்டும் இணையும் சூழ்நிலையை ஏற்படுத்துவார். 

ஏழாமிடத்தில் இருக்கும் சனி, ராசியைப் பார்ப்பார். அவர் ராசியைப் பார்க்கும்போது எதிலும் மந்தத்தன்மை, சோம்பேறித்தனம், தாழ்வு மனப்பான்மை இவற்றையெல்லாம் ஏற்படுத்துவார். எந்த ஒரு செயலையும் நாம் செய்வதாக இருந்தால், அதைத் தள்ளிப்போட வைப்பார். `அப்புறம் செய்து கொள்ளலாமே, நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாமே' என்கிற சிந்தனையை மனத்தில் தோற்றுவிப்பார். தியானமும் தெய்வ வழிபாடும் மிகச் சிறந்த வழிகளாகும்.

ஜோதிட சாஸ்திரம் என்பது சாலை விதியைப் போன்றது. எதையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்ப நம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொண்டால், நம் பயணம் சிறப்பாக இருக்கும். நேர காலத்துக்கேற்ப திட்டமிட்டுக் கொண்டு வழக்கத்தைவிட கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் முறையாகத் திட்டமிட்டுக்கொண்டும் செயல்பட்டோமென்றால், இது போன்ற சாதகமற்ற பலன்களை நம்மால் தவிர்க்க முடியும்.

கண்டகச் சனி விட்டேத்தியான மனப்பான்மையையும் அலட்சியப் போக்கையும் தருவாரே தவிர, பெரிதாக எந்தக் கெடுபிடியும் செய்ய மாட்டார். கடக ராசிக்கு ஏழாமிடமான மகர ராசி, சர ராசியாக இருப்பதால் வெளிநாட்டு வாழ் கடக ராசிக்காரர்களுக்குப் பெரிய யோகத்தைத் தரக்கூடியவராக இருப்பார்.

Planets
Planets

வெளிநாடுகளுக்குச் செல்ல விசா கிடைக்காமல் இருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும். வெளிநாட்டிலேயே குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக மனு செய்திருந்தவர்களுக்குக் குடியுரிமை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். வளைகுடா நாடுகளுக்குச் செல்ல விரும்பிய இளைஞர்களுக்கு அங்கு செல்வதற்குரிய வாய்ப்புகள் இப்போது பிரகாசமாகத் தெரிகின்றன.

கறுப்புத் தங்கம் எனப்படும் பெட்ரோலுக்கு சனி பகவான் அதிபதியாக இருப்பதால், வளைகுடா நாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிரகாசமான அளவில் வருமானங்கள் இருக்கும்.

பெண்களுக்கு இந்தக் கண்டகச் சனி ஏராளமான நன்மைகளை வழங்கும் ஏழாமிடத்தில் சனி பகவான் ஆட்சியாக இருப்பதால், இதுநாள்வரை திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். 

ஏழாமிடத்திலிருக்கும் சனி ராசியைப் பார்ப்பதால் வயதானவர்களுக்கு உடல்ரீதியான சில தொந்தரவுகளைத் தருவார். அவர்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்று சிறு உடல் உபாதையாக இருந்தால்கூட உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கான சிகிச்சையைப் பெற்றால் நிம்மதியான வாழ்வை வாழலாம்.

Planets
Planets

வியாபாரிகள், மாணவர்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பினருக்கும் இந்த ஏழாமிடத்து சனி சில பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தினாலும் உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலனை வழங்குவதில் எந்தவிதத் தாமதமும் இருக்காது என்பது உறுதி.

எனவே, ஏழாமிட சனியைக் குறித்து கடக ராசிக்காரர்கள் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை.

பரிகாரம்: கடக ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி சந்திரன் என்பதால் சந்திரன் உச்சம் அடையக்கூடிய திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை வணங்கி வந்தால், வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுதலையாகி சுபமான பலன்களைப் பெற்று சுபிட்சமாக வாழ்வார்கள் என்பது திண்ணம்.

அடுத்த கட்டுரைக்கு