சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

தனுசு: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023

தனுசு
பிரீமியம் ஸ்டோரி
News
தனுசு

ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

ஏழரை ஆண்டு காலம் சனி பகவானின் பிடியிலிருந்த இந்த ராசிக் காரர்கள், இதுவரையிலும் பல்வேறு இன்னல்கள், பிரச்னைகள், போராட்டங்களுக்கு ஆளாகியிருப்பார்கள். அவை யாவும் விலகப் போகின்றன. நீங்கள் தற்போது ஒரு சுதந்திர பறவையைப் போல் பறக்க லாம். வேலை தேடுவது, வியாபாரம் செய்வது, திருமண முயற்சிகள் அனைத்தும் சாதகமாக அமையும். பெண்கள், குழந்தை களுக்கு ஆரோக்கியம் மேன்படும்.

தனுசு: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023
தனுசு: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023

ன லாபம், குடும்ப ஒற்றுமை, கடன் பிரச்னைகளுத் தீர்வு என எல்லாமே நன்மையாக நடக்கும். கோர்ட்டு வழக்குகள், சொத்துத் தகராறு போன்றவற்றில் உங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். மனதில் தைரியமும், உறுதியும் வரக்கூடிய காலம் என்று சொல்லலாம். அலுவலகம் மற்றும் உறவினர்கள் தொடர்பாக இருந்த மனப் பிரச்னைகள், குழப்பங்கள் யாவும் நீங்கும். மொத்தத்தில் இந்த ராசி நேயர்களுக்கு சந்தோஷமும் புதிய உற்சாகமும் ஏற்படும் அற்புதமான காலம் இது எனலாம்.

பெண்களுக்கு: ஆரவாரம் இல்லாத அமைதியான எதிர்காலம் காத் திருக்கிறது. மனதில் உறுதியோடு வேலைகளைக் கவனிக்கலாம். திருமணம் முதலான சுபகாரியங்கள் நீங்கள் நினைத்தபடி நடந்தேறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்; ஒற்றுமை பெருகும். குழந்தை களால் மேன்மை உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடந்தேறும்.

மாணவர்களுக்கு: நல்ல காலம் பொறந்தாச்சு. படிப்பில் ஆர்வம் பிறக் கும். தேர்வுகளில் வெற்றி, உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டு. வெளி நாடு சென்று மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள், அதன் பொருட்டு முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டு. விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு விருதும், அங்கீகாரமும் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: தனியார் மற்றும் அரசுப் பணியில் உள்ளவர் களுக்கு இடமாற்றம் பதவி உயர்வோடு காத்திருக்கிறது. இதுவரையிலும் வேலை இல்லாமல் தவித்த இந்த ராசி அன்பர்களுக்கு, நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மூலம் முயற்சி செய்யும் வெளிநாட்டு வேலை தொடர்பான விஷயங்களும் சாதகமாகும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் இருந்த குழப்பங்கள், பணி தொடர்பான வழக்குப் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

வியாபாரிகளுக்கு: முன்னேற்றமான காலம். கடன் தொல்லைகள், கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியால் புதிய வியாபாரம் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட், இரும்புத் தொழில், பஞ்சு ஆலைகள், ஜவுளித் தொழில் சிறப்ப டையும். பங்குச்சந்தை, தங்கம், வெள்ளி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள், சற்றுக் கவனத்துடன் இருப்பது நல்லது.

பரிகாரம்: வியாழன் மற்றும் அமாவாசை தினங்களில் அன்னதானம் செய்வது சிறப்பு. சனி வாரம் கருட பகவான் ஸ்துதி சொல்லவும். நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாற்றி வழிபட்டால், தடங்கல் நிவர்த்தி ஆகும்.