சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

விருச்சிகம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023 

விருச்சிகம்
பிரீமியம் ஸ்டோரி
News
விருச்சிகம்

ஜோதிடர் பாரதிஶ்ரீதர்

விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார். கொஞ்சம் கவனமுடன் செயல்படவேண்டிய காலம் இது. புதிய நட்புகள் மூலம் பிரச்னைகள் வரலாம். எவரையும் அதிகம் நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

விருச்சிகம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023 
விருச்சிகம்: திருக்கணித சனிப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2023 

லுவலகம், சொந்தக்காரர்கள் நண்பர்கள், நமக்குத் தெரியாத வர்கள்... என சகல தரப்பினரிடமும் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பயணங்களில் உடைமைகளை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளவும். இளம் வயதினருக்கு எதிர்பார்க்கும் விஷயங்களில் ஏமாற்றங்கள் உண்டாகலாம்.

பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தன லாபம் உண்டு. வியாபாரம் மற்றும் திருமண யோகங்கள் கைகூடும். வாகன மாற்றம் வீடு மாற்றம் சாதகமாக அமையும். சிலருக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும். கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமாத் துறையினருக்குப் பொற்காலம்தான்.

பெண்களுக்கு: மனக்குறைகள் தீரும் காலம். அலுவலகம், குடும்பம் இரண்டுமே சமமான சந்தோஷத்தைக் கொடுக்கும். புதிய வேலைக்கான முயற்சிகள் இப்போது வேண்டாம். திருமணத் தடை விலகும். நின்றுபோன திருமண விஷயங்கள் இப்போது கூடிவரும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. எதன் பொருட்டும் பதற்றம் இல்லாமல் செயல்பட வேண்டும். வீண் குழப்பங்கள் தேவையில்லை.

மாணவர்களுக்கு: சற்று மனக்குழப்பம் ஏற்படும் காலம். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு: பணியிடத்தில் நிதானம் அவசியம். மனப் போராட்டங்கள் இருக்கும். சிந்தனை, செயல் இரண்டிலும் கவனம் தேவை. அரசுப் பணி, வங்கி மற்றும் தனியார் பணியில் இருப்பவர்களுக் குப் பண விவகாரங்களில் அதீத கவனம் தேவை. ஆவணங்களைச் சரிபார்த்துக் கையெழுத்து இடுவது நல்லது. வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள், முயற்சியைச் சற்று தள்ளிப்போடலாம்.

வியாபாரிகளுக்கு: செய்யும் தொழிலில் அதிக கவனம் செலுத்தவும். வணிகம் தொடர்பான சில பணிகளை நீங்களே முன்னின்று முடிக்கவும். வியாபார கணக்குவழக்குகளை அவ்வப்போது சரிபார்த்து வைக்கவும். மேலும் புதிய வியாபாரம், வியாபார விஸ்தரிப்பு இப்போது வேண்டாம். எண்ணெய், மரம், தாவரங்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டு. ரியல் எஸ்டேட், வாகனம் வாங்குவது - மாற்றுவது ஆகிய தொழிலில் எச்சரிக்கை தேவை. வரவு, செலவு சுமாராகவே இருக்கும்.

பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விநாயகரை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும். குரு வாரத்தில் ஆஞ்சநேயருக்குத் தீபம் ஏற்றி துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்யவும். சனிக்கிழமை காக்கைக்கு எள் சாதம் இடுவதால் தோஷ நிவர்த்தி உண்டு.