Published:Updated:

இருள் நீங்கி, புதியவிடியல் பெறப் போகும் தனுசு ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video

தனுசு ராசி
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தரக்கூடியதாக இந்த சனிப் பெயர்ச்சி இருக்கும். குறிப்பாக இந்த சனிப்பெயர்ச்சி, தன்னம்பிக்கையூட்டும் புதிய உலகத்துக்குள் உங்களை அழைத்துச்செல்லும்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24.1.2020), தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள், தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

தனுசு ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தரக்கூடியதாக இந்த சனிப் பெயர்ச்சி இருக்கும். குறிப்பாக இந்த சனிப்பெயர்ச்சி, தன்னம்பிக்கையூட்டும் புதிய உலகத்துக்குள் உங்களை அழைத்துச்செல்லும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜன்ம சனியின் தாக்கத்தால் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வந்தீர்கள். அவையெல்லாம் விலகி, ஒரு ரிலாக்ஸான மனநிலைக்கு இப்போது செல்வீர்கள்.

தனுசு ராசியில் பிறந்தவர்களில், குறிப்பாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், 2018-ம் ஆண்டிலும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 2019-ம் ஆண்டிலும் அளவற்ற துன்பங்களையும் துயரங்களையும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கான சில சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்தித்தீர்கள். அவற்றிலிருந்து இப்போது விடுபடுவீர்கள். மனதளவில் உற்சாகம் தரக்கூடியதாக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இருக்கும்.

12 ராசிகளில் சனி பகவான் ஜன்மத்தில் வரும்போது, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைப் புரியவைத்திருப்பார். நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பது தெரிந்திருக்கும். பணத்தின் அருமை உங்களுக்குப் புரிந்திருக்கும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் கற்ற பாடங்களிலிருந்து புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, இந்த மூன்று ஆண்டுகளில் வாழ்க்கையில் வெற்றிபெறுவீர்கள்.

Sagittarius
Sagittarius

எப்போதெல்லாம் ராசிநாதன் வலுவாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த ராசிக்காரர்களுக்கு கெடுபலன்கள் இருக்காது என்பது விதி. உங்களின் ராசிநாதன் குரு பகவான், உங்களின் சொந்த ராசியிலேயே ஆட்சிபெற்று அமர்ந்திருக்கிறார். இது மிகச்சிறந்த பலனை வழங்கக்கூடிய காலகட்டம். குரு பகவான் உங்களுக்கு தைரியத்தையும் சோதனைகளைச் சாதனைகளாக்கும் வலிமையையும் தருவார்.

வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுவந்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். நடுத்தர வயதில் இருப்பவர்கள், சொந்த வீட்டைக் கட்டிவிட்டு கடன் சுமையால் தவித்துவந்தீர்கள் அல்லவா? அந்த நிலையெல்லாம் இப்போது மாறும். சுப காரியங்களால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

வெளிப்படையான குணமுள்ள தனுசு ராசி நேயர்களுக்கு, இந்த சனிப்பெயர்ச்சி மேலும் பல சுப பலன்களை வாரி வழங்கக் காத்திருக்கிறது. அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கு அஸ்திவாரமாக சில சுப நிகழ்வுகள், உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் நடைபெறும்.

Sagittarius
Sagittarius

தனுசு ராசிக்காரர்களுக்கு, குரு பகவான் சொந்த ராசியிலிருந்து 5-ம் இடத்தையும் 7 -ம் இடத்தையும் பார்க்கிறார். 5 -ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைபாக்கியம் கிடைக்காமலிருந்தவர்களுக்குக் குழந்தைபாக்கியம் கிடைக்கும். திருமணமாகாமல் திருமணம் தடைப்பட்டு வந்தவர்களுக்கும் தள்ளிப் போய்க்கொண்டிருந்தவர்களுக்கும் இப்போது திருமணம் நடைபெறும்.

10-ம் இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்த சனியின் பார்வை இனி விலகுவதால், தொழில் அபிவிருத்தி சிறப்பாக இருக்கும். வெளி மாநிலம், வெளிநாடுகளில் அவஸ்தைப்பட்டுவந்த தனுசு ராசி நேயர்கள், குறிப்பாக மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்லவிதமான மாறுதல்கள் இருக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு, இருளை நீக்கி புதிய விடியலைத் தரும் சனிப்பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி இருக்கும்.

பரிகாரம்:

தனுசு ராசிக்காரர்கள் பரிகாரமாக, சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து 9 மணிக்குள் சபரிமலைக்கு மாலையிடும் ஐயப்ப பக்தர்கள் 4 பேருக்கு, கறுப்பு வேட்டி, கறுப்புத் துண்டு இரண்டையும் வாங்கி அன்பளிப்பாக அளித்தால், மேலும் சிறப்பான பலன்களை அடைவார்கள்.

அடுத்த கட்டுரைக்கு