நிகழும் மங்கலகரமான சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயனப் புண்ணிய காலம் நிறைந்த திங்கள்கிழமை 13.04.2020 இரவு 7.20-மணிக்கு கிருஷ்ணபட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் தனுசு ராசி, துலாம் லக்னத்திலும், நவாம்சத்தில் கடகம் ராசி, கும்ப லக்னத்திலும், புதன் ஓரை, கேது மகா தசை - சனி புத்தியில், சார்வரி ஆண்டு பிறக்கிறது.

இந்த வருடத்தின் ராஜாவாக புதன் வருகிறார். ஆகவே, சூறைக்காற்றுடன் மழை பொழியும். மத்திய மாநில அரசுகளுக்கு அனைத்தும் சாதகமாக அமையும். மந்திரியாக சந்திரன் வருவதால், நன்செய் பயிர்கள் அபிவிருத்தி அடையும். பூமிக்கு அடியில், நடுக்கடலில் அரசுக்குப் புதையல் கிடைக்கும்.

சந்திரனே இந்தப் புத்தாண்டின் அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும், சேனாதிபதியாகவும் வருகிறார். ஆகவே, மக்களிடம் கற்பனைத் திறன் அதிகரிக்கும். சுற்றுலா, சினிமா போன்ற விஷயங்களில் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவார்கள். அதேநேரம் மன இறுக்கம் மற்றும் மனநோயால் அதிகமானோர் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. யோகா, தியானம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். அதேபோல், பிரச்னைகளை மனத்துக்குள் போட்டுவைக்காமல், நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்வதன் மூலம் நல்ல தீர்வுகளைப் பெற முடியும்.

பால் உற்பத்தி பெருகும். ஆடை, ஆபரணங்களின் விலை உயரும். வெண்மை மற்றும் பழுப்பு நிற மேகங்கள் அதிகம் உற்பத்தியாகி, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும். ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்படும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் புற்று நோய்களுக்கு புது மருந்துகள் கண்டறியப்படும்.

வியாபாரத்தில் லாபம் நிலையில்லாமல் அமையும் சூழல் நிலவும். உணவு விடுதிகள் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. விஞ்ஞானத் துறையில் இந்தியா சாதனை படைக்கும். போர்த்தளவாட உற்பத்தி, விண்வெளி ஆய்வுகளில் முன்னிலை வகிக்கும். அதேநேரம் நம் தேசத்துக்கு எல்லைகளில் பிரச்னைகள் எழும். இந்தியாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு அண்டை நாடுகள் அச்சமடையும்.

ரஸாதிபதியாக சனி வருவதால் புளி, வெல்லம், இனிப்புப் பண்டங்களின் விலை உயரும். தொழில் விருத்தி அடையும். இரும்பு, பித்தளை உலோகங்களின் விலை சற்றே குறையும். தான்யாதிபதியாக புதன் வருவதால் பச்சைப் பயறு, வேர்க்கடலை ஆகியவற்றின் விலை உயரும். நீரஸாதிபதியாக குரு வருவதால் மண்வளம் பெருகும், ஆர்க்கானிக் காய்கனிகள் உற்பத்தி வரவேற்கப்படும்.

ஸஸ்யாதிபதியாக குரு வருவதால் புதிய மருத்துவ, சட்டக்கல்லூரிகள் திறக்கப்படும். இந்தியா உலக அளவில் கல்வியில் சாதனை படைக்கும். வேதம் படித்தவர்கள், சிலை வடிப்பவர்களுக்குப் புது சலுகை கிடைக்கும்.

சார்வரி வருட பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் 8-ம் வீட்டில் நிற்பதால், ஆன்மிகம் வளர்ச்சி அடையும். தன சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் கரும்பு அதிகம் விளையும். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். நதிகள் இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

திருதிய சஷ்டமாதிபதியாக குரு வருவதால் மின் விபத்துகள் அதிகரிக்கும். வங்கிகள் பாதிப்படையும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அங்கே பெரிய பதவிகளில் அமர்வார்கள். சுக பஞ்சமாதிபதியாக சனி வருவதால் ஜவுளி, இரும்பு, கெமிக்கல் நிலக்கரி ஆகிய தொழில் சம்பந்தப்பட்டவர்கள் அதிக லாபம் அடைவார்கள். கலைத்துறை சூடு பிடிக்கும். அதிக அளவில் திரைப்படங்கள் வெளிவரும்.

புதன் பாக்ய, விரயாதிபதியாக வருவதால் பல நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள். புதிய கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறையும். அங்கீகாரமில்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும்.

இந்த சார்வரி வருடம், மக்களிடையே தன்னம்பிக்கையையும், வைராக்கிய உணர்வையும், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற மனப்போக்கையும் அதிகரிக்கும்.

சார்வரி வருடத்திய வெண்பா பலன்

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே

தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை

பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்

ஏமமன்றிச் சாவார் இயம்பு.

- எல்லா இன மக்களும் வலிமையிழந்து நோயுடன் அலைவார்கள். மழை குறையும், விளைச்சல் குறையும் என்கிறது, சித்தர்பிரான் இடைக்காடரின் பாடல்.

எனினும், மூலம் நட்சத்திரத்தில் இந்தச் சார்வரி வருடம் பிறப்பதால் திங்கள்கிழமை வருவதாலும் நல்ல மழை உண்டு. விவசாயம் தழைக்கும். விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல சலுகைகள் கிடைக்கும். வங்காள விரிகுடா கடலின் கிழக்குப் பகுதியில் புதிய புயல்கள் உருவாகி மழை பொழியும். மரம், செடி, கொடிகள் தழைக்கும்.

புதன் - ராஜா

சந்திரன் - மந்திரி, அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

குரு - ஸஸ்யாதிபதி, நீரஸாதிபதி.

சுக்கிரன் - ரஸாதிபதி

புதன்- தான்யாதிபதி

சனி - ரசாதிபதி

சூரிய கிரகணம்: சார்வரி வருடம், ஆனி மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.06.2020, அமாவாசை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், 4-ம் பாதம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் காலை மணி 10.22 மணிக்கு சூரியனை வடமேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து, நண்பகல் 12.02 மணிக்கு அதிகமாகி மதியம் மணி 1.42 மணிக்கு, கிழக்குத் திக்கில் விடுகிறது.

பரிகாரம்: ஆனி மாதம் உத்தராயணம், கிரிஷ்ம ருதுவில் அமாவாசை திதியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று ஸ்ரீபைரவரை விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

குருப்பெயர்ச்சி: நிகழும் சார்வரி வருடம் ஆனி மாதம் 24-ம் தேதி (8.7.2020) குரு பகவான் தனுசு ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார். ஐப்பசி மாதம் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.11.2020 இரவு மணி 9.36 மணிக்கு மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். பங்குனி மாதம் 23-ம் தேதி திங்கட்கிழமை 5.4.2021 கும்ப ராசிக்கு வக்ர பெயர்ச்சி அடைகிறார்.

சனிப்பெயர்ச்சி: நிகழும் சார்வரி வருடம் மார்கழி மாதம் 11-ம் தேதி (26.12.2020) சனிக் கிழமை மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார்.

ராகு - கேது பெயர்ச்சி: நிகழும் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16-ம் தேதி (1.9.2020) செவ்வாய்க்கிழமை ராகு பகவான் ரிஷப ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.