Published:Updated:

சுபச்செலவும் பணவரவும் பெறப்போகும் கும்ப ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ஏழரைச் சனி என்ற உடன் மனதுக்குள் ஒரு பயம். ஏழரைச் சனி எந்தவிதமான கெடுதலை, எந்தவிதமான தடைகளை உருவாக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. 

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் ஜனவரி மாதம் 24-ம் தேதி (24.1.2020), தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள், கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்

Aquarius
Aquarius

கும்ப ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11-ம் இடத்திலிருந்த சனி பகவான் இப்போது விரயஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12-ம் இடத்துக்கு மாறுகிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாக இந்த சனிப் பெயர்ச்சி அமைகிறது.

ஏழரைச் சனி என்ற உடன் மனதுக்குள் ஒரு பயம். ஏழரைச் சனி எந்தவிதமான கெடுதலை, எந்தவிதமான தடைகளை உருவாக்குமோ என்று பயப்படத் தேவையில்லை. 

எந்த ஒரு கிரகமும் சொந்த வீட்டுக்குக் கெடுதலைச் செய்யாது. நாமே நம்மைத் தண்டித்து கொள்வோமா? நாம் தவறு செய்தால்கூட நம்மை நாமே திருத்திக்கொள்ள முயல்வோம் தவிர, நம்மை நாமே தண்டித்துக்கொள்ள மாட்டோம் அல்லவா? அந்தவிதத்தில் இந்த சனிப் பெயர்ச்சியை எண்ணி, கும்ப ராசிக்காரர்கள் பயப்படத் தேவையில்லை.

ஏழரைச் சனியில் கடுமையான காலம் என்று சொன்னால், அது ஜன்மச் சனியாக வரக்கூடிய ஒரு காலகட்டம்தான் கடுமையான காலகட்டமாக இருக்கும். அதற்கு, இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. இது ஏழரைச்சனியின் தொடக்க காலம் என்பதால், உங்களின் ராசிக்கு 12-ம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். 

12-ம் இடத்துக்கு சனி பகவான் வரும்போது விரயச்சனியாக வருகிறார். ஏராளமான செலவுகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். அப்படியென்றால், கடனை வாங்கி அவ்வளவாகச் செலவு செய்துவிட முடியாது அல்லவா? செலவுகளுக்கு ஏற்ப உங்களுக்குப் பணவரவும் மிகுதியாக இருக்கும். வருகின்ற பணம் கையில் தங்காது, அவ்வளவுதானே தவிர, உங்கள் செலவுகளுக்கேற்ற அளவு பணம் வரவு நிச்சயம் இருக்கும்.

Aquarius
Aquarius

செலவுகளை சுபசெலவுகளாக மாற்றுவது நம்முடைய கையில்தான் இருக்கிறது. காலிமனை ஒன்று வாங்கிப் போடலாம். புதிதாகச் சொந்த வீடு வாங்கலாம். இல்லத்தில் திருமண வயதிலிருப்பவர்களுக்குத் திருமணம் செய்வித்துச் செலவுகளை செய்யலாம். இப்படிச் செலவுகள் சுபச்செலவுகளாக மாற்றினால் இந்த ஏழரைச் சனியின் தாக்கத்திலிருந்து கும்ப ராசிக்காரர்கள் விடுபடுவார்கள்.

இவ்வளவு பெரிய அளவில் பணம் வந்தும் நம்மால் சேர்த்து வைக்க முடியவில்லையே என்கிற மன ஆதங்கத்தைத் தருவதுதான் ஜன்மச்சனியின் நோக்கமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் உங்களுடைய வருமானத்தைச் சரியான வழிகளில் முறையாகச் சேமித்து வைத்தீர்களென்றால், பிற்காலத்தில் நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இருக்காது.

கும்ப ராசிக்காரர்களுக்கு நிறைவான அளவு பணவரவு இருக்கும் அதற்கேற்ப செலவும் இருக்கும் என்பதுதான் இந்த சனிப் பெயர்ச்சியின் பலன். கும்ப ராசிக்காரர்கள் பிள்ளைகளை மேல்படிப்பு படிக்க வைப்பது, சுபச் செலவுகள் செய்வது, நிலத்தில் முதலீடு செய்வது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

Saturn
Saturn

கும்ப ராசிக்காரர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துதான் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது ஒரு முறைக்கு 10 முறை யோசித்துச் செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்குத் தொட்டது தொடங்கும். தொழில் அமைப்புகளில் இதுவரை இருந்த தேக்க நிலை மாறி, புதிய வகையில் லாபம் கிடைக்கக்கூடிய வகையில் தொழில் மாற்றம் நிகழும்.

கும்ப ராசியில் பிறந்தவர்களில் ஜாதகம் வலுத்திருந்தால் அவர்கள் இப்போது புகழின் உச்சியை அடைவார்கள். ஏழரைச் சனியின் காலகட்டத்தில்தான் சிலருக்குத் திருமணமாகும். சிலருக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். எவை எவை இதுவரை மறுக்கப்பட்டு வந்ததோ அவை எல்லாம் உங்களுக்கு இப்போது கிடைக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் எதையும் நெகட்டிவாக யோசிக்காமல் நேர்மறையாகச் சிந்தித்துச் செயல்பட்டால், வாழ்க்கையில் எல்லா விதங்களிலும் வெற்றிபெறலாம். குறிப்பாக, இந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் உங்களை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ஓர் அருமையான காலகட்டமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

பரிகாரம்: கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று இரவு 8 - 9 மணிக்கு சனி ஹோரையில், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தால் அது சிறந்த பரிகாரமாக அமையும்.

பின் செல்ல