Published:Updated:

வித்தியாச அனுபவங்களை பெறப்போகும் மகர ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ஆட்சி நிலையில் வருகின்ற ஒரு பாபக் கிரகம், கெடு பலன்களைச் செய்ய மாட்டார் என்பது ஒரு பொதுவான விதி. பொருளாதாரச் சிக்கல்களைத் தடைகளை வேண்டுமானால் ஏற்படுத்துவார்.

(24.1.2020) தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

Capricorn
Capricorn

சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் சொந்த வீட்டில் ஆட்சியாகவும் ஜன்மச் சனியாகவும் வந்து அமர்கிறார். கோச்சார ரீதியாக நடைபெறுகின்ற இந்த மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

ஏழரை சனி, அஷ்டம சனி என்றாலே எல்லோர் மனத்திலும் ஒருவித பயம் வருவது இயற்கை. ஆனால், 12 ராசிகளில் எல்லா ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் ஒரேவிதமான பலன்களைத் தருவார் என்று சொல்லிவிடமுடியாது.

ரிஷபம், துலாம், மகரம், கும்பம் ராசிகளுக்குப் பெரிதாக அவர் சாதகமற்ற பலன்களை எப்போதும் செய்வதில்லை. அதிலும் குறிப்பாக மகரமும் கும்பமும் அவருக்கு ஆட்சி வீடு என்பதால் இந்த ராசிக்காரர்களை தங்களைத் தாங்களே உணரச் செய்வாரே தவிர, அவர்களுக்குக் கெடுபலன்களைச் செய்ய மாட்டார்.

மகர ராசி சனி பகவானுக்குச் சொந்த வீடாகவும் ஆட்சி வீடாகவும் வருவதால் மற்ற ராசிகளுக்கும் செய்வதைப் போன்ற கெடுபலன்களை இவருக்குச் செய்யமாட்டார். நம் கையை எடுத்து நாமே கண்ணைக்  குத்திக் கொள்வதில்லை அல்லவா? அதுபோல்தான் ஆட்சியாக இருக்கும் வீடுகளுக்குச் சாதகமற்ற பலன்களைச் செய்யமாட்டார்.

மேலும் ஆட்சி நிலையில் வருகின்ற ஒரு பாபக் கிரகம், கெடு பலன்களைச் செய்ய மாட்டார் என்பது ஒரு பொதுவான விதி.  பொருளாதாரச் சிக்கல்களைத் தடைகளை வேண்டுமானால் ஏற்படுத்துவார்.

Zodiac Signs
Zodiac Signs

பணத்தின் அருமையையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் அருமையையும் உங்களுக்கு இப்போது புரியவைப்பார். பணத்தில் சிக்கல்கள் வரலாம். உங்கள் தொழிலில் சில இட மாறுதல்கள் தொழிலில் சில தடைகள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதனால் இந்தக் கஷ்டங்கள், உங்களுக்கு வாழ்க்கையின் புரிதலை ஏற்படுத்தப் பயன்படும்.

வேலை, தொழில், ஜீவனம் ஆகிய விஷயங்களில் மகர ராசிக்காரர்கள் திடுதிப்பென அகலக்கால் வைக்காமல் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. இன்னும் சொல்லப்போனால், உங்களின் நலம் விரும்பிகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரைக் கலந்தாலோசித்த பிறகு எதையும் செய்யுங்கள். அப்படிச் செய்வதால் உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.

'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று எதையும் செய்யாதீர்கள். குறிப்பாக இந்த மூன்றாண்டுக் காலம் ஜன்மச் சனி நடைபெறுவதால், எதையும் நன்கு திட்டமிட்டு, குறிப்பிடப்பட்ட நேரத்தில் அவற்றைச் செய்து பழகுங்கள். கால நிர்வாகம் உங்களுக்கு மிகச்சிறந்த பலனை அளிக்கும்.

இளைஞர்களுக்குக் காதல் போன்ற விஷயங்களில் மனச் சலனங்களை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஆகவே, படிப்பில் முழுகவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. இதற்குத் துணையாக தியானத்தையும் தெய்வ வழிபாட்டையும் இவர்கள் மேற்கொள்ளலாம்.

Saturn Transition
Saturn Transition

உடனிருக்கும் நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்களுக்கு எதிராக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், ஜன்மச் சனியின் காலகட்டத்தில் துரோகங்களைச் சந்திக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. அதனால் எல்லோரிடமும் வெளிப்படையாக இருக்காதீர்கள். மனத்தில் தோன்றுவதையெல்லாம் பேசிச் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

எவருக்கும் சாட்சிக் கையொப்பம் போடுவது, ஜாமீன் கையொப்பம் போடுவது, பணப் பரிவர்த்தனைகள் இவற்றிலெல்லாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய ஒரு காலகட்டமாகும்.

மத்தியதர வயதிலிருப்பவர்கள் வேலையை அவசரப்பட்டு விடவேண்டாம். உங்களின் வேலையை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ளப் பாருங்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். அவர்கள் கூறும் பணிகளை உடனுக்குடன் செய்து உங்களின் அலுவலகத்தில் தவிர்க்க முடியாத நபராக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

நீங்கள் இருபத்தைந்து வயதிலிருப்பவராக இருந்தால், உங்களுக்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத் தேவையான அனுபவங்கள், நீங்கள் 50 வயதிலிருப்பவராக இருந்தால், இன்னும் 25 ஆண்டுகளில் நகர்த்திச் செல்வதற்கான அனுபவங்கள், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அமையும். இந்த அனுபவ அறிவு உங்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். பல சரிவுகளில் நீங்கள் விழாமல் உங்களைக் காப்பாற்றும்.

எவரையும் நம்ப வேண்டாம்.நேர்மை, உண்மை, உழைப்பு, இறைவழிபாடு ஆகியவற்றின் துணைகொண்டு இந்தக் காலகட்டத்தை நீங்கள் கடப்பது மிகவும் நல்லது. முறைகேடான வழிகளில் கிடைக்கக்கூடிய எதையும் ஏற்காதீர்கள். அது ஆபத்தாக உங்களுக்கு முடியும்.

மகர ராசிக்காரர்கள் எதிலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட்டால், இந்த ஜன்ம சனியைப் பற்றிச் சிறிதும் கவலைப் படத்தேவையில்லை.

2020-ம் ஆண்டு மட்டுமே சில சிரமங்களை உங்களுக்குத் தரும். 2021-ம் ஆண்டு, அதாவது 2020-ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே குரு பகவான் உங்களின் ராசிக்கு வந்துவிடுவதால், குருவின் சுபத்துவ பலன்கள் மிகுதியாக இருக்கும். சனியின் தாக்கம் குறைந்துவிடும். 2021, 2022 ஆகிய ஆண்டுகள் உங்களுக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்: பரிகாரமாக சனியின் காரகத்துவம் பெற்ற தானியமான எள்ளைத் தலையணை அடியில் வைத்துத் தூங்கி, மறுநாள் காலையில் சாதத்துடன் கலந்து காகத்துக்கு வைத்தால் மிகச்சிறந்த சனி பரிகாரமாக இது திகழும். சிறப்பான பலன்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும்.

இருள் நீங்கி, புதியவிடியல் பெறப் போகும் தனுசு ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video
தொட்டது துலங்கப் பெறும் விருச்சிக ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சிப் பலன்கள்! #Video
அடுத்த கட்டுரைக்கு