Published:Updated:

லாபஸ்தான சனி பகவானால் பலன் பெறப்போகும் மீனராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனி பகவான் ஆட்சி நிலையுடன் வலிமையாக இருப்பதால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நல்ல தன லாபத்தை வழங்குவார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் ஜனவரி மாதம் 24 - ம் தேதி (24.1.2020), தை மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு, தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசித்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்கள், மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்குமென ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

Pisces
Pisces

மீன ராசிக்காரர்களுக்கு ஒரு வசந்த காலமாக இந்த சனிப் பெயர்ச்சி அமையப்போகிறது. பொதுவாக, பாவ கிரகங்கள் 3, 6, 11-ம் இடங்களில் வரும்போதுதான் லாபத்தை ஒருவருக்கு வாரி வழங்குவார். சனி பகவான் உங்களுக்கு லாபஸ்தானத்தில் அதாவது 11-ம் இடத்துக்கு வருகிறார். அதனால், உங்களுக்குப் பொருள், தனலாபம், உடல் ஆரோக்கியம், மனத்தெளிவு  இவற்றையெல்லாம் வழங்குவார்.

சனி பகவான் ஆட்சி நிலையுடன் வலிமையாக இருப்பதால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு நல்ல தன லாபத்தை வழங்குவார். மீனராசிக்காரர்களுக்குப் பொற்காலத்தின் கதவுகள் திறக்கப் போகின்றன என்றால் அது மிகையல்ல.

ராசிநாதன் குரு பகவான் தனுசு ராசியில், சொந்த வீட்டில் ஆட்சி பெற்று இருக்கிறார். இதனால்தான் கொடுக்கின்ற பெரிய பலனையும் அதைப் பெறுவதற்குரிய பக்குவத்தையும் உங்களுக்கு வழங்குவார். இன்னும் ஓராண்டுக்குப் பிறகு அவர் 11-ம் இடமான லாபஸ்தானத்துக்கு வந்து அமர்கிறார். அப்போது சுபத்துவ சூட்சுமப் பலனாக மேலும் பல நல்ல பலன்களை மீன ராசிக்கு வழங்குவார்.

Saturn
Saturn

மீன ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும் சனிப்பெயர்ச்சியாகவும் எதையும் சாதிக்கும் வல்லமையைத் தரக்கூடியதாகவும் இந்தப் பெயர்ச்சி அமையும். உங்களின் பிறந்த ஜாதகம் வலிமையானதாகவும் அதற்குரிய தசா புத்திகள் நடப்பதாக இருந்தால், உங்களின் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் இப்போது ஈட்டுவீர்கள்.

எதிலும் தயங்காமல் ஈடுபட்டு வெற்றி கொள்ளுங்கள். இதுவரை இருந்த தடைகள், தாமதங்கள் யாவும் விலகும். கலைத்துறையைச் சார்ந்தவர், தொழில்துறையினர், வியாபாரத் துறையினர், சமூகத்தின் கீழ்த்தட்டு நிலையில் இருப்போர் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்தச் சனிப்பெயர்ச்சி மேலான பலன்களை வழங்கும்.

மீன ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையோடும் துணிச்சலுடனும் மன உறுதியோடும் எந்தச் செயலிலும் ஈடுபட்டு வெற்றி பெறக்கூடிய ஒரு காலகட்டம். மனதிலிருக்கும் தயக்கத்தையும் பயத்தையும் விட்டொழித்துவிட்டு எல்லாம் வல்ல பரம்பொருளின் மீது உங்களை ஒப்படைத்து முயற்சி செய்தீர்களென்றால், உங்களுக்குப் புகழின் உச்சிக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு அமையும். அதற்காக 'எல்லா யோகமும் நமக்கு இருக்கிறது', என்று வீட்டுப் பிள்ளையாக நீங்கள் இருந்தீர்களென்றால், அப்போது எந்த யோகமும் உங்களுக்கு வேலை செய்யாது. உங்களின் உழைப்பைவிட அதிர்ஷ்டமும் இணைந்து கூடுதலான பலன்கள் இப்போது கிடைக்கும்.

Pisces
Pisces
சுபச்செலவும் பணவரவும் பெறப்போகும் கும்ப ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video

குறிப்பாகப் பெண்களுக்கு, இவ்வளவு காலமாகக் கல்வி, கேள்விகளிலும் வேலைவாய்ப்பிலும் ஒதுங்கியிருந்த நிலை இப்போது மாறிவிடும். அதற்கு இந்த சனிப்பெயர்ச்சி உறுதுணை அளிக்கும் விதமாக இருக்கும்.

25 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும், வாழ்க்கைத் துணை எப்படி இருப்பார் என்ற பயமெல்லாம் நீங்கி உங்களுக்குச் சாதகமாக மனதுக்குப் பிடித்தவிதமாக அமைவார். திருமண விஷயத்தில் தாய் தந்தைக்கு மனம் மகிழ்ச்சி அடையும் வண்ணம் நடந்துகொள்வீர்கள்.

ஒரு வீட்டில் மீன ராசிக்காரர் ஒருவர் இருந்தாலே அந்த வீட்டில் சுபிட்சம் நிலவக்கூடிய அளவு இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் இருக்கும். மீன ராசிக்காரர்கள் உழைப்பையும் அறிவையும் ஆற்றலையும் முழுமூச்சாகச் செலுத்தி செயல்பட்டால், இம்முறை வானம் வசப்படும்.

வாழ்க்கையின் முன்னேற்றப் பாதைக்கு இருந்த தடைகள், தாமதங்கள் யாவும் இப்போது விலகும். மீன ராசிக்காரர்கள் சகல விஷயத்திலும் மேன்மையாக இருக்கக்கூடிய ஒரு காலகட்டம் இது. உங்களின் சொந்த உழைப்பை மட்டுமே நீங்கள் முதலீடாக்கி முன்னேறுவீர்கள்.

4-மிடத்திலிருக்கும் ராகு, உங்களுக்குச் சில தொழில்களைக் கொடுத்திருந்தாலும், அவர் செப்டம்பர் மாதத்தில் மூன்றாம் இடத்துக்கு வரப்போகிறார். அப்படி வரும்போது மேலும் சிறப்பான பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

3-மிடத்திலிருக்கும் ராகு, 11-மிடத்திலிருக்கும் சனி, குரு என 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு வித்தியாசமான ஒரு கிரக அமைப்பு இவர்களுக்கு வரப்போகிறது. அப்போது இவர்கள் தொட்டது துலங்கும், வைத்தது விளங்கும் என்கிற ரீதியில் இவர்களுக்குப் பலன்கள் அமையும். வெற்றியைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி மீன ராசிக்கு இருக்கும்.

பரிகாரம்: மீன ராசிக்குப் பரிகாரம் தேவையில்லை. வீட்டை விட்டுக் கிளம்பும்போது `எந்த உயிருக்கும் என்னால் கெடுதல் நிகழக்கூடாது என்று பரம்பொருளை வேண்டிவிட்டுச் செல்லுங்கள், எல்லாம் சுபமாக நடக்கும்.

வித்தியாச அனுபவங்களை பெறப்போகும் மகர ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video
இருள் நீங்கி, புதியவிடியல் பெறப் போகும் தனுசு ராசியினரின் திருக்கணித சனிப்பெயர்ச்சி பலன்கள்! #Video
அடுத்த கட்டுரைக்கு