திருத்தலங்கள்
Published:Updated:

விருட்ச ரகசியங்கள்

விருட்ச ரகசியங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
விருட்ச ரகசியங்கள்

ராசிகள் - மரங்கள் - நியதிகள் - ஜோதிடர் ஶ்ரீமுருகப்ரியன் -

`மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்து வான்’ எனச் சாதாரணமாகப் பேச்சுவழக்கில் கேள்விப்பட்டிருப்போம். `அதென்ன... மரம் வெச்சவன் தண்ணீா் ஊற்றாமல், அடுத்த வனா ஊற்றுவான்?’ என்று இதுகுறித்து சிலர் கேலியும் செய்யலாம். ஆனால் இதன் உட்கருத்து வேறு.

விருட்ச ரகசியங்கள்

எவரொருவர் மரங்களை நட்டுப் பராமரித்து வளர்க்கிறார்களோ, அவரே அடுத்த தலைமுறைக்குத் தண்ணீா் ஊற்றுகிறார்; அதாவது, மழையைக் கொடுப்பார் என்பது அதன் உட்பொருள்.

மரத்தை வைத்து வேதமும் ஞானநூல்

களும் பல்வேறு தத்துவங்களைக் கூறி வழிகாட்டுகின்றன. கைவல்ய நவநீதம் எனும் ஞானநூல் என்ன சொல்கிறது தெரியுமா?

`அச்சுவத்தம் என்று ஒரு மரம் அதில்

இரண்டு அரும் பறவைகள் வாழும்

நச்சும் அங்கு ஒரு பறவை அம்மரக்கனி

நன்று நன்று எனத்தின்னும்

மெச்சும் அங்கு ஒரு பறவை தின்னாது

என வியங்கியப் பொருளாக

வைச்ச மாமறை சீவனை ஈசனை

வகுத்தவாறு அறிவாயே!’ என்கிறது.

அரச மரத்தில் இரண்டு அரிய பறவைகள் வாழும். அவற்றில், போகங்களில் ஆசை கொண்ட ஒரு பறவை, ‘இது நல்லது... இது நல்லது’ என்றபடி, அரசமரத்தின் பழங்களைத் தின்னும். அனைவராலும் கொண்டாடப்படும் மற்றொரு பறவையோ, அரச மரத்தின் பழங்களை உண்ணாது’ என்று விவரிக்கிறது.

அத்துடன், `இதன் மூலம் குறிப்புப் பொரு ளாக வேதம் வகுத்துச் சொன்ன வழியை விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்’ என்றும் அறிவுறுத்துகிறது கைவல்ய நவநீதம்.

அதுசரி, வேதம் வகுத்துச் சொல்வது என்ன? விருட்சம் என்பது நம் சரீரம். உள்ளே பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு பக்ஷிகள் இருக்கின்றன. ஜீவாத்மாவுக்கு இந்திரியங்களின் சம்பந்தம் ஏற்படுகிறது; மாயையினால் ஆசைப்படுகிறது. பரமாத்மா கா்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் இவற்றில் அகப்படாமல், சுயம்பிரகாசியாய் இருக்கிறது. இதுதான் உட்பொருள் தத்துவம்!

விருட்ச ரகசியங்கள்

அரச மரத்தை பிப்பலம், போதித்துருமம், ஞானத்தரு என்றெல்லாம் சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். அரச மரம் மட்டுமல்ல வில்வம், ஆலமரம், தென்னை, பனை, மூங்கில், கடம்பமரம் என சகல மரங்களையும் வழிபடும் மரபு நம்மிடம் உண்டு.

பண்டைய தமிழர்கள் விருட்சங்களைப் போற்றி வழிபட்டுள்ளனர். விருட்சத்தின் உச்சியில் பலவிதமான மருந்துப் பொருட்கள் கலந்த நீரால் அபிஷேகித்து, மரத்தில் தங்க ஊசியால் சிறு துளை

செய்வார்கள். அதன் பிறகு, மரத்தின் உச்சிக் கிளையில் அரிசி மாவைத் தடவி, அதன் மீது துணியைச் சுற்றி கட்டுவார்கள். தொடர்ந்து, மரத்தின் கிளைகளில் பூமாலைகளைத் தொங்க விடுவார்கள். இந்தச் சடங்கை நடத்தும் நபருக்கும் அபிஷேகம் செய்வார்கள்.

மரத்துக்கு ஆராதனை முடிந்தபிறகு, ஏழைகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த வைபவத்தின்போது பூமித்தாய், வருணன் முதலான தெய்வங்களைக் குறித்த ஹோமங்களையும் செய்வார்கள்.

இங்ஙனம் நம் முன்னோர் மரங்களைத் தெய்வமாகப் போற்றக் காரணம்... மரங்கள் இல்லையென்றால், மனித இனமே இருக்காது. இதை வலியுறுத்தும் விதமாகத்தான் ஒவ்வொரு கோயிலிலும் ‘ஸ்தல விருட்சம்’ என்ற பெயாில், பல்வேறு மரங்களை வைத் திருக்கிறோம்.

ஜோதிடம், மூலிகை சாஸ்திரம் மற்றும் விருட்ச சாஸ்திரம் சார்ந்தும் மரங்கள் குறித்து எண்ணற்ற தகவல்கள் உண்டு. நாம், ஒவ்வொரு ராசிக்கும் உரிய விருட்சங்கள், அவற்றின் மகத்துவங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

விருட்ச ரகசியங்கள்

ராசிகளும் விருட்சங்களும்!

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கும், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையிலான நாட்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த விருட்சம் சிவப்புச் சந்தனமரம். இவர்களுக்கான கிரக தோஷங்கள் இந்த மரத்தால் நீங்குமாம். சிவப்புச் சந்தனக் கட்டையை எலுமிச்சைப் பழச் சாற்றில் அரைத்துப் பூசினால், சொறி, சிரங்கு, புண், தோல் வெடிப்பு, மருக்கள், பருத்தொல்லை ஆகியவை நீங்கும் என்கின்றன மூலிகை சாஸ்திர நூல்கள்.

ரிஷபம்: சுக்கிர கிரகம் மற்றும் ரிஷப ராசி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றின் நல்ல கதிர் வீச்சுகளைத் தனக்குள் சேமித்து வைத் திருக்கிறது ஏழிலைப்பாலை.

இந்த மரத்தை வீடுகளில் வளர்த்தால், சுக்கிர தோஷம் நீங்கும் என்கின்றனர் சாஸ்திர வல்லு நர்கள். கேரளப் பகுதி களில், இந்த மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டு வந்து நட்ட பிறகே, விழாக்களைத் தொடங்குவார்களாம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள் மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பிறந்தவர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடியது பலா மரம். புதன் கிரகத் தால் ஏற்படும் குறைபாடுகள் நீங்க, பலாமரம் ஸ்தல விருட்சமாகத் திகழும் ஆலயங்களை தரிசித்து வரலாம். குற்றாலம் குரும்பலா ஈஸ்வரர் ஆலயம், சீர்காழி தாடாளன் கோயில் முதலான தலங்களின் விருட்சம் பலா.

கடகம்: இந்த ராசிக்காரர்கள், புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்த வர்கள், ஜூன் 21 முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் திங்கட்கிழமை அன்று பிறந்தவர்கள் ஆகியோருக்குப் பயன் தரும் மரம் - முருக்கன் எனப்படும் பலாச மரம். இந்த மரத்தின் நிழலில் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருந்தால் சந்திர கிரக தோஷம் நீங்கும் என்பர்.

சிம்மம்: இந்த ராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் பலவகை யான நோய்களும் கிரக தோஷங்களும் உண்டா கும் என்பர். அவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு உதவுவது பாதிரி மரம். இந்த மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட ஆலயங்களை இந்த ராசிக்காரர்கள் தரிசித்து வழிபடுவது சிறப்பு.

கன்னி: இந்த ராசியிலும், புதனின் ஆட்சியிலும், ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலும் பிறந்தவர்கள், போற்ற வேண்டிய மரம் - மாமரம். கன்னி ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தின் நல்ல கதிர் வீச்சுகளைத் தன்னுள் நிரப்பிக்கொள்ளும் தன்மை மாமரத்துக்கு உண்டு!

துலாம்: இந்த ராசி, சுக்கிர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள், செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வீட்டுத் தோட்டத்தில் மகிழ மரம் வளர்க்கலாம். தினமும் அரை மணி நேரம் இந்த மர நிழலில் அமர்ந்தால், கிரக தோஷம் விலகும்; தேகத்தில் எதிர்ப்பு சக்தி வளரும்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கும், செவ்வாய்க்

கிழமை, மார்ச் 21 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலான நாட்கள், அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் நலம் தரும் விருட்சம்- கருங்காலி. செவ்வாய் தோஷத்தை நீக்குவதில் கருங்காலிக்கு முக்கிய இடம் உண்டு.

தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கும் உகந்தது அரச மரம். வியாழன் கிரகத்துக்கும் அரச மரத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு. திங்கள் கிழமைகளில் அரசமரத்தைத் தரிசிப்பதாலும் வலம் வந்து வழிபடுவதாலும் மனக்குறைகள் நீங்கும்.

மகரம்: இந்த ராசிக்காரர்களும் சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 19 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களும் போற்ற வேண்டிய மரம் கடுக்காய் மரம். இந்த விருட்சம் குறித்து 2500 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சுராக்கா சம்ஹிதை, சுஸ்ருத சம்ஹிதை முதலான நூல்களிலும் விவரம் உண்டாம்.

கும்பம்: இந்த ராசிக்காரர்களும் சனிக்கிழமை மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரையிலான தினங்களில் பிறந்தவர்களும் போற்றிக் கொண்டாட வேண்டிய விருட்சம் வெள்வேலம். வேல மரத்தை வெள்வேலம், கருவேலம், குடைவேலம் என்று வகை பிரித்துக் கூறுவர்.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கும், பிப்ரவரி 19 முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கும், நன்மைகள் தருவது ஆல மரம். மீன ராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகும் நோய்கள், கெடுதல்கள், தோஷங்கள் ஆகியன ஆல மரத்தால் நீங்கும்.

விருட்ச ரகசியங்கள்

கட்டுமான தேவைக்காக மரம் வெட்டும்போது...

ழிபாடுகளில் மட்டுமன்றி கட்டுமானத்துக்காக மரங்களை வெட்டும்போதும், மரப்பொருள்களை வாங்கும் போதும்கூட சில நியதிகளைக் கவனித்துச் செயல்படவேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

மரம் வெட்டுவதற்கு சர்வ அதோமுக நட்சத்திரத்தில், சுபமான நேரத்தில் கெளது பந்தனம் செய்தபிறகு புறப்பட வேண்டும். அப்போது நல்ல சகுனங்களையும், நிமித்தங் களையும், மங்களகரமான ஓசைகளையும் முறையே கண்டும் கேட்டும் புறப்படுவது சிறப்பானது.

மேலும் கந்தம், மலர்கள், தூபங்கள், எள் மற்றும் வெல்லம் கலந்த சாதம், பாயசன்னம், போன்ற படையலுக்கு உரிய பொருட்களை வைத்து வன தேவதைகளை வணங்கிய பிறகு, மற்ற தெய்வங்களையும் வழிபட்டுவிட்டு, பூதங்களுக்கு உரிய பலிகளைச் சமர்ப்பித்த பின்னர் மரங்களை வெட்டித் தயார் செய்யவேண்டும்.

மரம் வெட்டும்போது, வெட்டுப்பட்ட இடத்தில் பால் போன்று கசிந்தால் நல்ல குழந்தைகளுடன் குடும்பம் வளம்பெறும். செந்நிறத்தில் நீர் கசிந்தால், அந்த மரத்தைத் தவிர்க்கவேண்டும்.

மரம் முறிந்துவிழும் சத்தம் சிம்மம், புலி, யானை ஆகியவற்றின் சத்தத்துக்கு ஒப்பாக இருந்தால், அந்த மரம் நன்மை அளிக்கக் கூடியதாகும்.

மரப் பொருள்கள் வாங்கக் கூடாத நாள்கள்!

சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கும் போதும், சந்திரன் திருவோணம், அவிட்டம், சித்திரை, சுவாதி ஆகிய நட்சத்திரத்தில் இருக்கும்போதும், சுக்கிரன் திருவோணம், அவிட்டம் - 3 மற்றும் 4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் ஆகியவற்றில் இருக்கும்போதும் மரம் வெட்டக்கூடாது. இந்த வேளைகளில் கட்டுமான மரப் பொருட்களை வாங்குவதும், கொண்டு வருவதும் கூடாது.கட்டுமான தேவைக்காக மரம் வெட்டும்போது...

வழிபாடுகளில் மட்டுமன்றி கட்டுமானத்துக்காக மரங்களை வெட்டும்போதும், மரப்பொருள்களை வாங்கும் போதும்கூட சில நியதிகளைக் கவனித்துச் செயல்படவேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

மரம் வெட்டுவதற்கு சர்வ அதோமுக நட்சத்திரத்தில், சுபமான நேரத்தில் கெளது பந்தனம் செய்தபிறகு புறப்பட வேண்டும். அப்போது நல்ல சகுனங்களையும், நிமித்தங் களையும், மங்களகரமான ஓசைகளையும் முறையே கண்டும் கேட்டும் புறப்படுவது சிறப்பானது.

மேலும் கந்தம், மலர்கள், தூபங்கள், எள் மற்றும் வெல்லம் கலந்த சாதம், பாயசன்னம், போன்ற படையலுக்கு உரிய பொருட்களை வைத்து வன தேவதைகளை வணங்கிய பிறகு, மற்ற தெய்வங்களையும் வழிபட்டுவிட்டு, பூதங்களுக்கு உரிய பலிகளைச் சமர்ப்பித்த பின்னர் மரங்களை வெட்டித் தயார் செய்யவேண்டும்.

மரம் வெட்டும்போது, வெட்டுப்பட்ட இடத்தில் பால் போன்று கசிந்தால் நல்ல குழந்தைகளுடன் குடும்பம் வளம்பெறும். செந்நிறத்தில் நீர் கசிந்தால், அந்த மரத்தைத் தவிர்க்கவேண்டும்.

மரம் முறிந்துவிழும் சத்தம் சிம்மம், புலி, யானை ஆகியவற்றின் சத்தத்துக்கு ஒப்பாக இருந்தால், அந்த மரம் நன்மை அளிக்கக் கூடியதாகும்.

மரப்பொருள் கொள்முதலுக்கு உகந்த நாள்கள்

தற்காலத்தில், கட்டுமானத் தேவைகளுக்கான மரத்தாலான நிலைப்படிகள், சாளரச் சட்டங்கள் முதாலனவற்றை கடைகளிலேயே வாங்கிக் கொள்கிறார்கள். கடைகளில் கொள்முதல் செய்வதற்கும் நல்ல நாட்களைத் தேர்வு செய்வது விசேஷம். பஞ்சமி, சஷ்டி, சப்தமி ஆகிய திதிகளிலும், ரோகிணி நட்சத்திர நாளிலும் மரச் சாமான்களை வாங்கிப் பயன்படுத்துவது உத்தமம்.