Published:Updated:

செல்வ யோகம் கைகூடும்!

வீட்டில் அனுதினமும் மகாலட்சுமியைப் பூசித்து வழிபடுவது விசேஷம்

பிரீமியம் ஸ்டோரி
செல்வ யோகம் கைகூடும்!

ருவருக்கு ஜாதகத்தில் கிரகநிலைகள் எப்படியிருந் தாலும், இந்தப் புவி வாழ்க்கைக்குத் தேவையான செல்வ வளத்தைப் பெறவும் அனுபவிக்கவும் ஸ்ரீமகாலட்சுமியின் அருளும் கருணையும் தேவை. சகலவிதமான வசதிகள், வீடு-மனை, கால்நடை முதலான சொத்துகள், பெயர், புகழ் ஆகிய அனைத்தையும் தருவது அன்னை மகாலட்சுமியே. அந்த அன்னையின் அருளைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஞான நூல்கள் பலவும் விவரிக்கின்றன.

வீட்டில் அனுதினமும் மகாலட்சுமியைப் பூசித்து வழிபடுவது விசேஷம். அன்னையின் திருவுருவப்படத்தை அலங்கரித்து, மலர்கள் சூட்டி, விளக்கேற்றிவைத்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இவ்வாறு திருமகளை வழிபடும் இல்லத்தில் எப்போதும் செல்வகடாட்சம் நிறைந்திருக்கும். அதேபோல், கீழ்க்காணும் மந்திரங்களையும் குறைந்தது ஆறு முறையா வது தொடர்ந்து ஜபித்து தியானித்து வணங்கவேண்டும்.

செல்வ யோகம் கைகூடும்!

மகாலக்ஷ்மி மூல மந்திரம்:

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே

ப்ரஸீத ப்ரஸீத ஸ்ரீம் ஹ்ரீம்

ஓம் மகாலக்ஷ்ம்யை நமோநம:

மகாலக்ஷ்மி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை சவித்மஹே

விஷ்ணுபத்ந்யைச தீமஹி

தந்தோ லக்ஷ்மி: பிரசோதயாத்

இந்த வழிபாடுகளுடன் மகாலட்சுமி யந்திரத்தையும் தூய வெள்ளியில் செய்துவைத்து வழிபட்டு வரலாம். அதைச் சிறிய டாலராகச் செய்து மார்பிலும் அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் லட்சுமிகடாட்சம் பொங்கிப் பெருகும். வீட்டிலிருந்து வறுமையும், பசிப்பிணியும், கடன் தொல்லைகளும் விலகும்; சகல சுபிட்சங்களும் வந்துசேரும்.

- ஜோதிடர் சுப்ரமணியன், சென்னை-33

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு