Published:Updated:

மாயமந்திரங்கள்... சித்துவேலைகள்... ஆன்மிகத்துக்கும் இவற்றுக்கும் தொடர்பு உண்டா? - அதிகாலை சுபவேளை!

ஆன்மிகம்
ஆன்மிகம்

மாயமந்திரங்கள்... சித்துவேலைகள்... ஆன்மிகத்துக்கும் இவற்றுக்கும் தொடர்பு உண்டா? - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

25. 5. 21 வைகாசி 11 செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தசி இரவு 7.56 வரை பிறகு பௌர்ணமி

நட்சத்திரம்: விசாகம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

சந்திராஷ்டமம்: ரேவதி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

மாயமந்திரங்கள்... சித்துவேலைகள்... ஆன்மிகத்துக்கும் இவற்றுக்கும் தொடர்பு உண்டா?

தமிழ் சித்தர்கள் மரபு பற்றிப் பேசும்போது ஸித்திகள் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் சித்தர்கள் அஷ்டமா ஸித்திகள் பெற்று வாழ்ந்தனர் என்கின்றன சித்த நூல்கள். அப்படிப்பட்ட சித்துவேலைகள் இன்றும் உள்ளனவா? சில சாமியார்களை சித்துவேலைகள் அறிந்தவர்கள் என்று குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறோம்.சிலர் காற்றிலேயே மலர்கள் கொண்டுவருவார், மிட்டாய் கொண்டுவருவார், லிங்கம் எடுப்பார் என்றெல்லாம் மக்கள் பேசக்கேட்டிருக்கிறோம். உண்மையில் இப்படிப்பட்ட சித்துவேலைகள் எல்லாம் இன்றும் இருக்கின்றனவா? இப்படிப்பட்ட சித்துவேலைகளுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பு உண்டா? இதற்கான விடையை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

தாமதம் : எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலருக்குப் பணவரவைவிடச் செலவுகள் அதிகரிக்கும். சமாளித்துவிடுவீர்கள். - சவாலே சமாளி!

ரிஷபம்

வெற்றி : முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். கருத்துவேறுபாடுகளை நேரடியாக மோதி வெற்றி காண்பீர்கள். தொடங்கும் செயல்கள் நன்மையாகும் முடியும். - நல்லதே நடக்கும்!

மிதுனம்

தடை : செயல்களில் சின்னச் சின்னத் தடைகள் ஏற்படும். குடும்பத்தினர் கோபமாகப் பேசினாலும் விட்டுக்கொடுத்துப்போங்கள். சிந்தித்துச் செயல்படுவது நல்லது. -தடை அதை உடை!

கடகம்

நற்செய்தி : எதிர்பார்த்த நற்செய்திகள் வந்துசேரும். செயல்களும் அனுகூலமாக முடியும். பணவரவும் கிடைத்துவிடும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். - ஆல் தி பெஸ்ட்!

சிம்மம்

ஆதாயம் : சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும் நாள். நினைத்த வேலையை நினைத்தபடி முடிப்பீர்கள். செலவுகளில் மட்டும் கட்டுப்பாடு தேவை. - செலவே சமாளி!

கன்னி

உற்சாகம் : தயக்கங்கள் நீங்கும். புதிய சிந்தனையும் உற்சாகமும் பிறக்கும். ஆனாலும் புதிய முயற்சிகளில் அவசரம் வேண்டாம். விவாதங்களை தவிருங்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

துலாம்:

செலவு : செலவுகள் அதிகரிக்கும் நாள். சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்தாலும் உங்கள் சாமர்த்தியத்தால் சமாளித்துவிடுவீர்கள். மனதில் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். - ஆல் இஸ் வெல்!

விருச்சிகம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டால் இந்த நாள் இனிய நாள். - என்ஜாய் தி டே

தனுசு:

நன்மை : மனதிலும் உடலிலும் புதிய தெம்பு பிறக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் தருவார்கள். ஆரோக்கியம் மேம்படும். - நாள் நல்ல நாள்!

மகரம்

நிதானம் : பேச்சில் நிதானம் அவசியம். மற்றப்படிப் பணவரவுக்குக் குறைவில்லை. அவசரம் ஏற்பட்டால் தவிர வெளியே செல்ல வேண்டாம். வீண் அலைச்சலாகும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கும்பம்

தெளிவு : குழப்பங்கள் தீரும். அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டாம். பதற்றத்தைத் தவிர்ப்பதன் மூலம் செயல்களில் வெற்றி கிடைக்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மீனம் -

கவனம் : சந்திராஷ்டமம் தொடர்ப்வதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் செலுத்த வேண்டிய நாள். முடிந்தவரை பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும். - டேக் கேர் ப்ளீஸ்!

அடுத்த கட்டுரைக்கு