Published:Updated:

இன்று ஆவணி அமாவாசை; அதன் சிறப்பு என்ன? கூடுதல்பலன்கள் பெற 12 ராசிக்காரர்களுக்குமான பரிகாரங்கள் எவை?

அமாவாசை

இன்றைய ஆவணி அமாவாசை கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த நாளில் செய்யும் சில பரிகாரங்கள் பன்மடங்கு நற்பலன்களைத் தரும் என்றும் சொல்கிறார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்.

இன்று ஆவணி அமாவாசை; அதன் சிறப்பு என்ன? கூடுதல்பலன்கள் பெற 12 ராசிக்காரர்களுக்குமான பரிகாரங்கள் எவை?

இன்றைய ஆவணி அமாவாசை கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்றும் இந்த நாளில் செய்யும் சில பரிகாரங்கள் பன்மடங்கு நற்பலன்களைத் தரும் என்றும் சொல்கிறார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்.

Published:Updated:
அமாவாசை

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை தினம் என்பது முன்னோர்களை வழிபடும் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று நம் முன்னோர்களை நினைத்துக் குறைந்தபட்சம் எள்ளும் தண்ணீரும் வார்த்து வழிபட்டால் நம் துன்பங்கள் தீர்ந்து இன்பங்கள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

அதிலும் குறிப்பாக ஆடி, புரட்டாசி, தை, மாசி மாத அமாவாசைகள் மிகவும் விசேஷமாகக் கடைப்பிடிக்கப்படுவன. இந்த ஆண்டு ஆவணி மாதம் 10 ம் தேதி (ஆகஸ்ட் 26) அன்று வரும் அமாவாசையும் அந்த அளவுக்குப் புண்ணியபலன்களைத் தருவதுவே என்கிறார் ஜோதிடர் பாரதி ஸ்ரீதர். அவரிடம் இந்த அமாவாசைக்கு அப்படி என்ன சிறப்பு என்றும் இந்த நாளில் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன என்று கேட்டோம்.
முருகப் பெருமான்
முருகப் பெருமான்

இன்று ஆவணி அமாவாசை ஜோதிட ரீதியில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் ஐந்து கிரகங்கள் ஆட்சி பலம் பெற்றும் அமர்ந்திருக்கும் நிலையில் இந்த அமாவாசை நிகழ்கிறது. சனிபகவான் மகர ராசியிலும் (அதிலும் அவிட்ட நட்சத்திரம்) குரு பகவான் மீன ராசியிலும் சந்திரபகவான் கடக ராசியிலும் சூர்ய பகவான் சிம்ம ராசியிலும் புதபகவான் கன்னி ராசியிலும் அமர்ந்து சஞ்சாரம் செய்கிறார்கள். இவை அந்தத்த கிரகங்களின் சொந்த வீடும் ஆட்சி வீடும் ஆகும். செவ்வாய் பகவான் ரிஷபராசியில் சஞ்சரித்தாலும் அவருக்குரிய கிருத்திகை நட்சத்திரத்திலேயே சஞ்சாரம் செய்வது சிறப்பு. சுக்கிரன் சந்திரனோடு இணைந்து காணப்படுகிறார். எனவே இந்த நாளில் நிகழும் அமாவாசை மிகவும் முக்கியமானது. இந்த நாளில் வழக்கமான அமாவாசைபோன்று முன்னோர்களை வழிபடுவதோடு கூடுதலாக சில தானங்களைச் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அப்படி 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேஷம் : மேஷ ராசியில் ராகு பகவான் சஞ்சாரம் செய்கிறார். அதிலும் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். பரணி சுக்கிரனின் நட்சத்திரம். எனவே மேஷ ராசிக்காரர்கள் கட்டாயம் சிவாலயம் சென்று வழிபடுவது அவசியம். மேலும் மொச்சை தானம் செய்வது, நாகர் சந்நிதிகளில் வழிபடுவது, வஸ்திர தானம் கொடுப்பது ஆகியன மிகவும் சிறப்புவாய்ந்த பரிகாரங்கள் ஆகும். இதனால் செல்வ வளம் சேரும்.

ரிஷபம் : செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். எனவே ரிஷப ராசிக்காரகள் இந்த நாளில் முருகப்பெருமான் சந்நிதிக்குச் சென்று வழிபட வேண்டியது அவசியம். குறிப்பாகத் திருமணத் தடை இருப்பவர்கள் வள்ளி தேவயானை சமேதராக இருக்கும் முருகப்பெருமானை இன்று தரிசனம் செய்து வழிபடுவது விசேஷம். பெருமாள் கோயில்களில் தாயாருக்குத் தாமரை மலர் வாங்கி சமர்ப்பித்து வழிபடுவதும் நல்ல பரிகாரமாகும்.

மிதுனம் : உங்களின் ராசிநாதன் புதன் ஆட்சி பலம் பெற்றுக் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். எனவே இது மிகவும் அதிர்ஷ்ட கரமான நாளாகத் திகழும். இந்த ராசிக்காரர்கள் இன்று தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்கப் பொருள்களை வாங்கினால் விருத்தியாகும். சிலருக்குக் கடந்த நாள்களில் சில காரியத் தடைகள் ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் இன்று அன்னதானம் செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக சந்நியாசிகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது. இதன் மூலம் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்
ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

கடகம் : கடக ராசியிலேயே சுக்கிரனும் ராசிநாதனான சந்திரனும் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான அம்சம். பள்ளிகொண்ட ரங்கநாதர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது நற்பலன்களைக் கொடுக்கும். கூடுதலாக இந்த நாளில் நீங்கள் செய்யும் தானமும் வேண்டுதலும் பன்மடங்கு பலனைக் கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் இன்று பச்சரிசி தானம் கொடுப்பது சிறப்பு. பச்சரிசியோடு வெல்லமும் சேர்த்துக்கொடுத்தால் மிகவும் நல்லது. எப்போதும் தானம் தரும்போது பதினோரு பேருக்குக் கொடுப்பது என்பது விசேஷம். இயலாதவர்கள் சர்க்கரைப் பொங்கலாகச் செய்து அதைப் பெருமாளுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம் : ராசிநாதனான சூரிய பகவான் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நாளில் முன்னோர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும். காரணம் சூரியனை பித்ருகாரகன் என்று சொல்வோம். அப்படிப் பட்ட நம் சூரியபகவானே நம் ராசியில் சஞ்சரிக்கும் நாளில் முன்னோர்களுக்குப் படையல் போட்டு வழிபாடு செய்வது விசேஷம். மேலும் இந்த நாளில் விநாயகப்பெருமானுக்குத் தேங்காய் மாலை சாத்தி வழிபடுவதும் நற்பலன்களை அதிகப்படுத்தும்.

கன்னி : கன்னிராசியில் உத்திர நட்சத்திரத்தில் புதபகவான் சஞ்சாரம் செய்கிறார். உத்திர நட்சத்திரமும் சூரியனுக்குரிய நட்சத்திரமே. எனவே கன்னி ராசிக்காரர்கள் இன்று சிவ வழிபாடு செய்வது ரொம்ப விசேஷம். கன்னி ராசிக்காரர்களில் திருமணத் தடை இருப்பவர்கள் இன்று வழிபாடு செய்வது விசேஷம். குறிப்பாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று மாலை சாத்தி வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். மேலும் சுமங்கலிகளுக்கு வஸ்திரமும் மஞ்சளும் தானம் செய்வதும் நற்பலன்களை அதிகரிக்கும்.

துலாம் : துலாம் ராசியில் கேதுபகவான் சஞ்சாரம் செய்கிறார். நான்காம் வீட்டில் சனிபகவானும் அமர்ந்து கடன் பிரச்னைகளை அதிகப்படுத்தி வருகிறார். இப்படிப் பட்ட சிக்கல்கள் விலக இந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது விசேஷம். முருகப்பெருமானுக்கு மாதுளை சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு. கோயில்களில் மாதுளை அபிஷேகம் செய்வார்கள். எப்போது மாதுளை அபிஷேகம் செய்வார்கள் என்று விசாரித்து அந்த நாளில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொள்ளுங்கள். மாதுளைப் பழ தானம் செய்வதும் நற்பலன்களை அதிகப்படுத்தும்.

விருச்சிகம் : விருச்சிக ராசியில் தற்போது கிரகங்கள் ஏதும் இல்லை. என்றாலும் ராசி அதிபதி செவ்வாய் பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டிய அவசியம். அதிலும் கடந்த சில நாள்களாக உடல் ஆரோக்கியத்தில் உபாதைகளை சந்தித்துவரும் விருச்சிக ராசிக்காரர்கள் இன்று துவரம் பருப்பு தானம் செய்வது சிறப்பும். அதிலும் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று கோயில் வளாகத்துக்குள் வைத்து துவரம் பருப்பு தானம் செய்தால் ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும் என்று சொல்லலாம்.

தனுசு : உங்கள் ராசிநாதனான குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இது சனிபகவானின் நட்சத்திரம். கடந்த சில ஆண்டுகளாக ஏழரைச் சனியினால் பாதிக்கப்பட்டு வரும் தனுசு ராசிக்காரர்கள் இந்த நாளில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது சிறப்பு. பஞ்சாம்ருதம் அல்லது அது செய்யப்பயன்படும் வாழைப்பழம், தேன், கற்கண்டு போன்ற பொருள்களை தானமாகக் கொடுப்பது விசேஷம். ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் ஏழரைச் சனியின் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும் என்று சொல்லலாம்.

மகரம் : மகர ராசியிலேயே சனிபகவான் ஜன்ம சனியாக அமர்ந்திருக்கிறார். எட்டாம் இடத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் இதுவரை அனுபவித்துவரும் துன்பங்களிலிருந்து சிறு ஆறுதலைத் தரும். பலருக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள், தந்தை வழி உறவுகளால் பிரச்னைகள் ஆகியன இருந்துவரும். கணவன் மனைவி உறவிலும் தேவையற்ற மோதல் காணப்படும். இவை அனைத்தும் நீங்க, சூரிய பகவானை வேண்டி வஸ்திர தானம் செய்வது நல்லது. ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்கள் குழந்தைகளுக்கும் கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் இருப்பவர்கள் தம்பதிகளுக்கும் வஸ்திர தானம் செய்வது நல்லது. மேலும் முருகப்பெருமானை வழிபாடு செய்வது விசேஷம்.

கும்பம் : கும்ப ராசியின் அதிபதி சனிபகவான். அவர் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். எனவே சனிபகவானுக்குரிய ப்ரீதிகளைச் செய்வது நல்லது. அவிட்ட நட்சத்திரம் செவ்வாய் பகவானுக்குரியது. எனவே முருக வழிபாடு செய்வதும் மிகவும் பலன் தரும். இந்த ராசிக்காரர்கள் ஆஞ்சநேய வழிபாடு செய்வதும் ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் கொடுப்பதும் மிகவும் சிறப்பு. இதன் மூலம் விரைய சனியின் பாதிப்புகள் குறையும் என்று சொல்லலாம்.

மீனம் : ராசியிலேயே ராசிநாதன் ஆட்சிபலம்பெற்று அமர்ந்திருக்கிறார். மீன ராசிக்கு ஐந்தாம் வீடான கடகத்தில் சந்திரன் ஆட்சிபலம் பெற்று அமர்ந்திருக்கிறார். ஆறாம் வீடான சிம்மத்தில் சூரியன் அமர்ந்திருக்கிறார். இந்த சஞ்சாரம் அமைந்திருக்கும் இந்த நாளில் குல தெய்வப் பிரார்த்தனை செய்வது மிகவும் விசேஷம். குலதெய்வக் கோயில் அருகே இருந்தால் நேரில் சென்று பொங்கல்வைத்து வழிபாடு செய்தால் நற்பலன்கள் இரட்டிப்பாகும். அப்படி நேரில் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் செய்து குலதெய்வத்தை நினைத்துப் பூஜை அறையில் வைத்து வழிபட்டுப் பின் அதை பிறருக்கு விநியோகம் செய்தால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.