Published:Updated:

டிசம்பர் - 26 - ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்... பலன்கள்... பரிகாரங்கள்!

பலன்கள்... பரிகாரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
பலன்கள்... பரிகாரங்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் 9 கிரகங்களுக்குச் சொந்தமானவை. சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு ராசி சொந்த வீடாகத் திகழும்.

பிரபஞ்சத்தின் பல ரகசியங்கள் நம் அறிவுக்கு எட்டாதவை. மனித அறிவால் எளிதில் வரையறுக்க முடியாத - எல்லையற்ற இந்த அண்டப்பெருவெளியில் நிகழும் அற்புத நிகழ்வுகள் ஏராளம். அப்படியோர் அற்புதம், வரும் டிசம்பர் 26 அன்று நிகழவுள்ளது. ஆம்! ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் இணைகின்றன.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளும் 9 கிரகங்களுக்குச் சொந்தமானவை. சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு ராசி சொந்த வீடாகத் திகழும். மீதமுள்ளவை 7 கிரகங்கள். இவற்றில் செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி ஆகியவற்றுக்குத் தலா இரண்டு ராசிகள் சொந்த வீடாகச் சொல்லப்பட்டுள்ளன. ராகு, கேது ஆகியவற்றுக்குக் கிரக அந்தஸ்து கிடையாது. எனினும் இந்த இரண்டு கிரகங்களும் விருச்சிக ராசியில் உச்சம் அடைந்து அதிகாரம் பெறுகிறார்கள்; ரிஷப ராசியில் நீசம் அடைந்து தங்களின் பலத்தை இழக்கிறார்கள்.

டிசம்பர் - 26 - ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்... பலன்கள்... பரிகாரங்கள்!

இதுபோன்று பிற கிரகங்களும் சில ராசிகளில் உச்சமும் சில ராசிகளில் நீசமும் அடைகிறார்கள்.

இந்த கிரகங்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணநலன்களைக் கொண்டவை; தனித்தனி காரகத்துவம் பெற்றவை. ஆதலால், ஒவ்வொரு கிரகமும் தனித்தனியே இயங்குவது சிறப்பு. ஒரு கிரகத்துடன் மற்றொன்றின் நல்ல சேர்க்கை அமையும்போது காரகத்துவமும் குணநலன்களும் சிறப்படையும். அதேநேரம் கெட்ட சேர்க்கைகள் நிகழ்ந்தால், காரகத்துவமும் குணநலன்களும் கெட்டுப் போகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்
ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்

`தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். அவன் தெய்வத்தையே வெல்லும் ஜாதக அமைப்புடன் திகழ வேண்டும்’ எனக் கருதிய ராவணன், நவகிரகங்களையும் 11-ம் இடத்தில் நிறுத்தியதாகக் கதை உண்டு. அப்போது, இயற்கை சமநிலை தவறியதாகவும் பிரளயம், பூகம்பம் போன்ற நிகழ்வுகள் நடந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

தற்போது, வரும் டிசம்பர் 26 அன்று... ஏற்கெனவே தனுசு ராசியில் குரு, சனி, கேது ஆகியோர் இருக்க, அவர்களோடு சூரியன், புதன், சந்திரன் ஆகியோர் இணைகிறார்கள். 537 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வம் இது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதனால் பூமியில் ஏற்படப்போகும் விளைவுகள் என்ன, பரிகாரம் செய்வது அவசியமா என்பது பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்
ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்

மேற்சொன்ன ஆறு கிரகங்களும் தனுசு ராசியில் இணைந்திருக்க, செவ்வாய் தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் சிறப்பாக அமைந்துள்ளார். ராகு மிதுன ராசியிலிருந்து வெளியேறி, ரிஷப ராசியில் நீசம் ஆவதற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்.

செவ்வாய் பலம் பெற்றிருப்பதால் பூகம்பம், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை சீற்றங்களோ, பேரழிவுகளோ நிச்சயமாக ஏற்படாது. சனி பகவான் மகர ராசியை நெருங்கிக்கொண்டிருக்கிறார். கேது உச்சம் அடையக்கூடிய விருச்சிக ராசியை நெருங்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார். பங்கத்தை விளைவிக்கக்கூடிய கோள்கள், இந்த நல்ல கிரகங்களிடமிருந்து சற்றுத் தொலைவிலேயே நிற்கின்றனர்.

சந்திரனின் நிலையை அவசியம் கவனிக்க வேண்டும். மற்ற கிரகங்கள் ஒரு ராசியில் நீண்டகாலம் பயணித்துக்கொண்டிருக்க, சந்திரன் மட்டுமே மிகக்குறுகிய காலத்தை எடுத்துக்கொள்வார். அவருக்கு அடுத்தபடியாக சூரியன் ஒரு ராசியில் 30 நாள்கள் பயணிப்பார். புதனுக்கு 77 நாள்கள் தேவைப்படும்.

ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்
ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்

சந்திரன் மனோகாரகன். மனம், எண்ணம், சொல், செயல், சிந்தனைத் திறன் ஆகிய அனைத்துமே சந்திரனை வைத்தே கூறப்பட்டு வருகின்றன. இப்படியிருக்க, ஆட்சிபெற்ற குரு பகவானின் வீட்டில் சந்திரன் இருப்பது மிகவும் சிறப்பு. அதனால் அரசு உயரதிகாரிகள், அரசை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் மிகச் சிறப்பாகவும் துணிச்சலுடனும் சில முடிவுகள் எடுப்பதற்கு இந்த கிரக நிலைகள் காரணமாக இருக்கும். விவசாயமும், கல்வியும், கால்நடை சார்ந்த விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சூரியனும் புதனும் தனுசு ராசியில் பெயர்ச்சியாகி யிருக்கும் நேரம் இது. எப்போதும் சமாதானத்தை விரும்பும் புதன் மற்ற கிரகங்களுடன் இருப்பது சிறப்பான அம்சமே. ஆக, உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி, பங்குச்சந்தை, நிதி சார்ந்த நிறுவனங்கள், காப்பீட்டுத் துறை, ரியல் எஸ்டேட், பத்திரிகைத் துறை மற்றும் கமிஷன் தொழிலில் சற்று தேக்கநிலை ஏற்பட்டாலும் பின்னர் குறிப்பிட்ட துறைகளில் ஏற்றம் உண்டாகும்.

அதேநேரம், சனி சூரியனுடன் இருக்கும்போது சற்று மனக்கசப்பைத் தருகிறார். அதேபோல், சூரியனின் நெருங்கிய நண்பரான புதன், குரு பகவானின் வீட்டிலிருப்பதும் அந்த குரு பகவானுடன் இணைந்து இருப்பதும் சிறப்பல்ல. ஆகவே, கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது அவசியம்.

மேலும், பத்திரப்பதிவுத் துறை, வருவாய்த்துறை, தபால்துறை, வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பணிச்சுமை அதிகம் இருக்கும். இந்தத் துறைகளில் பணிபுரிவோர், மேலதிகாரியுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அரசு அதிகாரிகள், காவல்துறையினர், சட்டத் துறையினர் சுறுசுறுப்பாக இருந்தால் வெற்றி நிச்சயம். இவர்களுக்கு எந்தப் பாதிப்பும் நிச்சயம் கிடையாது. சனி பகவானும் கேது பகவானும் தனுசு ராசியைவிட்டு இருபுறமாக விலகிச் செல்கிறார்கள். இது ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் இந்தத் துறையினருக்குக் கொடுக்கிறது. மொத்தத்தில் டிசம்பர் 26-ம் நாள், சற்று மனச் சஞ்சலத்தையும் மனக்குழப்பத்தையும், சோம்பலையும் தரும் நாளாக அமையும். இந்த நிலை மூன்று நாள்கள் நீடிக்கும்.

ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன்

`ஒரே ராசியில் ஆறு கிரகங்கள்...’ வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகளின் விளக்கத்தை வீடியோ வடிவில் காண...

பரிகாரம் அவசியமா?

12 ராசிகளில், தனுசு ராசியைச் சேர்ந்த நேயர்கள் பரிகாரம் செய்வது அவசியம்.

டிசம்பர் 26, 27, 28 ஆகிய தினங்களில் தனுசு ராசி நேயர்கள், மகான்களின் ஜீவசமாதி தலங்களுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும்.பால், பச்சரிசி, மைதா மாவினாலான இனிப்புப் பொருள்கள் மற்றும் பழங்களை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுப்பது சிறப்பு. பசு வழிபாடும், பசுவுக்கு உணவு தானம் கொடுப்பதும், யானையிடம் ஆசீர்வாதம் பெறுவதும் மேலும் பலம் சேர்க்கும்.

அதிகாலையில் சூரிய வழிபாடு நன்மை பயக்கும். மாலை நேரங்களில் சந்திரனின் அஷ்டோத்திரத்தைப் படிப்பதும் கேட்பதும் மனச் சஞ்சலத்தைத் தவிர்க்க உதவும்.

மற்ற ராசிக்காரர்கள், பெண் தெய்வங்களை வழிபட்டு அருள் பெறலாம். குறிப்பாக மாரியம்மன், பேச்சியம்மன், அங்காள பரமேஸ்வரி போன்ற அம்மன்களை தரிசிப்பதும் வழிபடுவதும் சிறப்பு. அதேபோல், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல்தெய்வங்களின் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நலம்பயக்கும். கருப்பண்ண சாமி, முனீஸ்வரர் போன்ற தெய்வங்களின் திருவருள் நமக்குத் துணை நிற்கும்.