Published:Updated:

சூரிய கிரகணம் 2022 | எந்த நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பரிகாரம்? Solar Eclipse | Bharathi Sridhar

சூரிய கிரகணம் 2022 | எந்த நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பரிகாரம்? Solar Eclipse | Bharathi Sridhar

வானியல் நிகழ்வுகளில் முக்கியமானவை கிரகணங்கள். இவற்றில் சந்திர கிரகணம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வு ஆகும். அதேபோன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட ரீதியில் சொல்வதாக இருந்தால் சூரியன் கேதுவோடு இருக்கும்போது வரும் பௌர்ணமி சந்திர கிரகணமாகவும் சூரியன் கேதுவோடு இருக்கும்போது வரும் அமாவாசை சூரிய கிரகணமாகவும் விளங்கும். அதேபோன்று சூரியன் ராகுவோடு சஞ்சரிக்கும்போதும் சந்திர சூரிய கிரகணங்கள் ஏற்படும் என்பதைப் பல்லாயிடம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் கணித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு அக்டோபர் 25 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த கிரகணத்தின் போது துலா ராசியில் 5 கிரக சேர்க்கையும் அமைந்துள்ளது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பலன்கள் என்னென்ன? அதன் பரிகாரங்கள் யாவை என்பது குறித்து விளக்குகிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்.