வரும் ஜூன் 21-ம் நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது.

அதாவது, நிகழும் சார்வரி வருடம், ஆனி மாதம் 7-ம் தேதி, அமாவாசை திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், 4-ம் பாதம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் காலை மணி 10.22 மணிக்கு சூரியனை வடமேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து, நண்பகல் 12.02 மணிக்கு அதிகமாகி மதியம் மணி 1.42 மணிக்கு, கிழக்குத் திக்கில் விடுகிறது.

கிரகணம் ஆரம்பிக்கும் வேளையில் நீராட வேண்டும். மாற்றுடை அணிந்து திலகமிட்டு, தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானம் செய்ய இயலாதவர்கள் ஏழை எளியவர்களுக்கு கொடை வழங்கி வழிபடலாம். முன்னோரை ஆராதனம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் முன்னோரை எண்ணி, கொடை வழங்கலாம். ஒன்றும் இயலாதவர்கள் கடவுள் நாமத்தை ஜபிக்கலாம். பிறகு, திரும்பவும் சிறப்பு நீராடி உணவு உட்கொள்ளலாம்.

பரிகாரம்: ஆனி மாதம் உத்தராயனம், கிரிஷ்ம ருதுவில் அமாவாசை திதியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. ஆகவே ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

வீட்டில் பால்கனி அமைப்பதாக இருந்தால் கூரையின் சென்ட்ரிங் அமைக்கும்போதே, வீட்டுக்கு வடக்கிலும் கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும்.

தெற்கிலும், மேற்கிலும் போர்டிகோ அமைத்தால் கூரை மட்டத்துக்கு அமைக்கவும்.

செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்க வேண்டும்.

மனையின் ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் ‘சம்ப்’ (தண்ணீர்த் தொட்டி) அமைக்கலாம்.

மதிலின் உயரம் குறைந்தது 11 அடி அளவுக்கு இருப்பது சிறப்பு (கொடைக்கானல், ஊட்டி முதலான மலைவாழிடங்கள் நீங்கலாக).

சமையலறையில் சமையல் மேடை வடக்குச் சுவரைத் தொடக்கூடாது. வடக்குச் சுவருக்கும், ‘சிங்’க்கும் (பாத்திரம் கழுவும் இடம்) குறைந்தது முக்கால் அடி அல்லது ஓர் அடி இடைவெளி விட்டு கட்டவும். இப்படி வாஸ்து சொல்லும் விதிமுறைப்படி நமது வீடு அமைந்தால், சகல சுபிட்சங்களும் அங்கே பல்கிப் பெருகும்.

- கே.ராமநாதன், மதுரை-2