Published:Updated:

வியாபாரத்தில் வெற்றி தரும் ஜோதிட சூட்சுமங்கள்!

வியாபார வெற்றி
பிரீமியம் ஸ்டோரி
வியாபார வெற்றி

ஜோதிடர் செய்யனூர் ரா.சுப்பிரமணியன்

வியாபாரத்தில் வெற்றி தரும் ஜோதிட சூட்சுமங்கள்!

ஜோதிடர் செய்யனூர் ரா.சுப்பிரமணியன்

Published:Updated:
வியாபார வெற்றி
பிரீமியம் ஸ்டோரி
வியாபார வெற்றி

எந்தவொரு புதிய முயற்சியையும் காரியத்தையும் நல்ல நாள் - நேரம் பார்த்துச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்கள். `சரியான ஆரம்பமே வெற்றிக்கு முதல்படி’ என்பது மேல்நாட்டு பழமொழி. நாளும் கோளும் நன்மை அருளும் தருணங்களில் நாம் ஆரம்பிக்கும் எவ்வித காரியமும் நல்லபடியாக துலங்கும். வியாபாரமும் அப்படித்தான்.

வியாபாரத்தில் வெற்றி தரும் ஜோதிட சூட்சுமங்கள்!

புதிதாகத் தொழில் - வியாபாரம் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. தேவைக்குத் தகுந்த பொருளாதார முதலீடு, தக்க இடம், கடின உழைப்பு, பங்குதாரர்கள் ஒத்துழைப்பு சகலத்தையும் கவனித்து பெரும் முயற்சியுடன் களம் இறங்கி நாம் தொடங்கும் தொழில் வெற்றி பெறாவிட்டால், அதனால் ஏற்படும் நஷ்டமும் மனக் கஷ்டமும் மிகுந்த துயரைத் தரும்; நம் வாழ்வைப் பலவருடங்களுக்குப் பின்னோக்கித் தள்ளிவிடும்.

இப்படியான நிலை ஏற்படாமல் வியாபாரத்தில் நாம் தொட்டது துலங்கிடவும் பெரும் வெற்றியைப் பெற்றிடவும் ஜோதிட சாஸ்திர நூல்கள் தகுந்த வழிமுறைகளை விளக்குகின்றன. அதன்படி உரிய கால-நேரத்தில் சாதகமான வேளையில் வியாபாரத்தைத் தொடங்குவது அவசியம். இதன் மூலம் வியாபாரம் செழிக்கும்; அதிர்ஷ்டம் பெருகும்.

அவ்வகையில் வியாபாரத்தில் ஜெயிக்க ஜோதிடம் கூறும் சில சூட்சுமங்கள் உங்களுக்காக...

தொழில் தொடங்க ஏற்ற மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை மற்றும் பங்குனி மாதத்தில் வியாபாரம் தொடங்கலாம். ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி போன்ற மாதங்கள் கடவுள் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

திதிகள்: வியாபாரம் தொடங்க திதிகளையும் கவனிக்கவேண்டும். பெரும்பாலும் வளர்பிறை திதிநாள்களில் வியாபாரத்தைத் தொடங்குவது மிகவும் சிறப்பு. இதன் மூலம் தொழில்கள் மென்மேலும் பெருகி பெரும் வளர்ச்சி ஏற்படும். ஆக சுக்லபட்ச துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, ஏகாதசி, துவாதசி திதிநாள்கள் புதிய தொழில் தொடங்க ஏற்ற நாள்களாகும்.

நட்சத்திர தினங்கள்: அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, திருவோணம் ஆகிய நட்சத்திர நாள்கள் தொழில் தொடங்க ஏற்றவை. உக்கிரமான தீட்சண்யமான நட்சத்திரங்கள் குறிப்பிடப்படவில்லை.

யோகங்கள்: அமிர்த யோகம் மற்றும் சித்த யோகம் கூடிய தினங்களில் தொழில் தொடங்கலாம். மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

லக்னம்: சரம், ஸ்திரம், உபயம் ஆகிய லக்ன நேரங்களில் சரப லக்ன நேரம் ஏற்புடையதாகும். தொழில்-வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் வேண்டும். அந்த குறிக்கோளை அடைய உகந்தது சரப லக்ன நேரம்.

வியாபாரத்தில் வெற்றி தரும் ஜோதிட சூட்சுமங்கள்!
lakshmiprasad S

இவற்றைத் தவிர வேறுசில குறிப்புகளையும் விளக்கிச் சொல்கின்றன ஜோதிட நூல்கள்.

ஜன்ம நட்சத்திர தினம், சந்திராஷ்டம தினம், கரிநாள் ஆகியவை தவிர்க்கபடவேண்டும். அதேபோல் ராகுகாலம் எமகண்ட பொழுதுகளும் விலக்கப்படவேண்டும்.

சில தருணங்களில் மேற்கூரிய பரிந்துரைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். உரிய பரிகாரங்கள் தான - தருமங்கள் செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம்.

எண்கணித சாஸ்திரப்படி 5-ம் எண் ஆதிக்கத்தில் (5, 14, 23-ம் தேதிகளில்) பிறந்தவர்களும், ஜாதகத்தில் புதன் கிரகம் ஆதிக்கம் பெற்றவர்களும் (ஆட்சி, உச்சம், வர்க்கோத்தமம்) வியாபாரத்தில் ஈடுபட அதிகம் தகுதி படைத்தவர்கள் என்கின்றன ஜோதிட நூல்கள்.

குபேர வழிபாடும் நன்மைகளைத் தரும். அஷ்ட திக்குகளையும் அஷ்டதிக் பாலகர்கள் காவல் புரிகிறார்கள். எண் திசைகளில் வடக்கு குபேரனுக்கு உரியது. செல்வங்களை, தன-தான்யங்களை அள்ளித் தருபவரும் இவரே. இவரை முறைப்படி பூஜித்து வழிபட்டும் வியாபாரத்தில் விருத்தி அடையலாம்.

வியாபாரத்தில் வெற்றி அருளும் தாயுமானவர் ஸ்தோத்திரம்!

நமோ பகவதே துப்யம் நமஸ்தே சம்பவேஸதே
நமஸ்தே தேவதேவாய ஜகதாம்பதயே நம:

கருத்து: பகவானாகிய இறைவா போற்றி. சுகத்துக்கு இருப்பிடமான வரும், சத்தான வஸ்துவாக இருப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான இறைவனே உம்மை வணங்குகிறேன்.

ஶ்ரீசார முனிவரால் அருளப்பட்ட ஶ்ரீதாயுமானவர் ஸ்தோத்திரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு துதிப்பாடல் இது. இந்த ஸ்தோத்திரத்தை ஒவ்வொருவரும் தினமும் படித்து வழிபடுவதால் தீர்க்காயுள், மனச்சாந்தி, வியாபாரம் மற்றும் உத்தியோக லாபம் உண்டாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism