நம்முடைய அனைத்து இன்னல்களுக் கும் அடிப்படைக் காரணம், நம்மில் உறங்கிக் கிடக்கும் ரஜோ மற்றும் தமோ குணங்கள்தாம்! அவற்றைக் கட்டுக்குள்வைத்திருக்க, ஸத்வ குணம் வலுப்பெற்றிருக்க வேண்டும். காரத்தையும் கசப்பையும் கட்டுப்படுத்த, இனிப்பும் உப்பும் உதவும். அதேபோல் இனிய வாழ்க்கைக்கு மூன்று குணங்களும் தேவை. வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதைத் தந்து அருள்பவர், குரு பகவான்.
அவர், வாழ்க்கையுடன் என்றைக்கும் நம்முள் இணைந்திருப்பவர். எதிர்பாராத இன்னல்களின்போது, அந்தச் சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிப்பவர், ஸத்வ குணத் தின் குன்றெனத் திகழும் குரு பகவான்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமற்ற கிரகங்களுடன் குரு பகவான்...
சந்திரனுடன் குரு இணையும்போது, மனமானது அறிவுடன் இணைகிறது. அறிவின் உதவியில், செயலானது சிறப்புற்று, செல்வத்தில் திளைக்கச் செய்கிறது. இதனால் இது, கஜகேஸரி யோகம் எனும் பெருமையைப் பெறுகிறது.

சூரியனுடன் குரு இணையும் வேளையில், ஆன்மாவுடன் அறிவு இணைகிறது; அவன், ஆன்மிக அறிவைப்பெற்று வீடு பேறு எனும் நிலையை அடைகிறான். சீடரான சூரியன் வீட்டுக்கு அதாவது சிம்ம ராசிக்கு குரு விஜயம் செய்யும்போது, ஆன்மாவும் அறிவும் சந்திக்கின்றன. அப்போது, சிற்றின்பமான திருமணம் முதலானவற்றைத் தவிர்த்து, குருவுக்குப் பெருமையளிப்பார்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
செவ்வாய் மற்றும் சனியுடன் இணையும் போது, இரண்டு குணங்களின் தாக்கங் களைக் கட்டுப்படுத்தி, ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் வாழ்வின் உயர்வுக்குச் சாதகமாக மாற்றியமைப்பார் குரு. அவரின் பார்வைபட்டாலே, இரண்டு கிரகங்களும் தனது இயல்பை மாற்றிக்கொண்டுவிடும்.
குருவின் பார்வை, பிரச்னைகள் பலவற்றை யும் அழித்துவிடும். குருவின் சேர்க்கை அல்லது பார்வை, கிரகங்களுக்கு இருக்கும் நல்லது கெட்டது என்கிற இரு தன்மைகளில், கெட்டதை அழித்து, நல்லதைப் பெருக்கி உதவும்.
மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக் கொண்டு விடும். இப்படியொரு பெருமை குருவுக்கு மட்டுமே உண்டு.
கோச்சாரப்படியும் குருவின் நகர்வுக்கு முக்கியத்துவம் உண்டு!
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி 11-ம் தேதி - திங்கள்கிழமை, (விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019, சுக்லபட்சம் பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திர தினம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜீவனம் மறைந்த மந்தயோகத்தில், சந்திர ஓரையில்... பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்தில், தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷ ருதுவில், அதிகாலை 3:40 மணிக்கு, சூரிய உதயம் நாழிகை 54.09-க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில்... குரு பகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார்.
குருவின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். கல்வித்துறை நவீனமாகும். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர் தளவாடங்களுக்குரிய வீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். ஆன்மிகத் தலங்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டியிருக்கும். ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை அதிகரிக்கும்.
2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இந்தியாவில் கோவா, குஜராத், மும்பை பகுதிகளில் வியாபாரம் பாதிக்கப்படலாம். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற் சாலைகள் உருவாகும். காப்பீட்டுத் துறை அதிக லாபம் ஈட்டும்.
கச்சா எண்ணெய் விலை அதிகமா கும். சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயரும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்படலாம்.

இந்தப் பெயர்ச்சி காலத்தில் 7.7.20 முதல் 30.7.20 வரையிலும் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். அதேபோல், 31.7.20 முதல் 10.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்ரகதியில் செல்கிறார். குறிப்பிட்ட இந்தக் காலத்தில் 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னென்ன... அறிவோமா!
மேஷம்
பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும்!
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைகிறார். ஆகவே, தீர்க்கமான முடிவுகள் எடுப்பதில் தயக்கமும் தடுமாற்றமும் வந்து நீங்கும். இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்; பொறுமையுடன் வழிநடத்துவது அவசியம். பணத்தட்டுப்பாடு வந்து நீங்கும். 31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள்; இல்லம் பொலிவு பெறும். உள்ளத்தில் புதிய உற்சாகம் பிறக்கும்.
ரிஷபம்
அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு!
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். 31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், நீண்ட நாள்களாகத் தடைப்பட்டிருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். விலையுயர்ந்த மின்சாதனங்களை வாங்குவீர்கள். தம்பதிக்கு இடையே பனிப்போர் விலகும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய, குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
மிதுனம்
தடைகள் நீங்கும்!
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். ஆகவே, அரசாங்க காரியங்கள் இழுபறியாகும். எனவே, அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் திட்டமிடலுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்கிறார். ஆகவே, வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. ஓரளவு பணவரவு உண்டு. அதேபோல், எடுத்த காரியங்களிலும் முயற்சிகளிலும் முன்னேற்றம் தடைப்படாது.
கடகம்
மதிப்பு மரியாதை அதிகரிக்கும்!
7.7.2020 முதல் 30.7.2020 வரையிலான காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். ஆகவே, அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உங்களுக்கு ஆதாயம் உண்டு. வீடு கட்டுவதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும்; விரும்பியபடி புது வீடு கட்டுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்; பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் வீண் அலைச்சல், தர்மசங்கடமான சூழ்நிலைகள் உருவாகும்; முன்னெச்சரிக்கை அவசியம். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.
சிம்மம்
இல்லத்தில் திருமணம் கூடிவரும்!
7.7.2020 முதல் 30.7.2020 வரையிலும் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைகிறார். ஆகவே, பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், பிரபலங்களின் உதவியுடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் திருமணம் கூடி வரும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும்.
கன்னி
புதியவர்களால் பண வரவு உண்டு!
7.07.2020 முதல் 30.7.2020 வரையிலும் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைகிறார். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். 31.7.2020 முதல் 10.9.2020 வரை, பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்கிறார். ஆகவே, சில விஷயங்களில் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.உடல்நலனில் கவனம் செலுத்துங்கள். புதியவர்களால் பணவரவு உண்டு. வீண் செலவுகளைத் தவிர்த்து சேமிக்கத் தொடங்கினால், எதிர்காலம் சிறப்பாகும்.
துலாம்
தெளிவான சிந்தனை பிறக்கும்!
7.7.2020 முதல் 30.7.2020 வரையிலும் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அரசாங்க விவகாரங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். 31.7.2020 முதல் 10.09.2020 வரை, பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிரகதியில் செல்கிறார். ஆகவே, உங்களின் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். சுற்றுலா தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்
தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்!
7.7.2020 முதல் 30.7.2020 வரையிலும் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். ஆகவே, வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் தடைபட்ட காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். 31.7.2020 முதல் 10.9.2020 வரை, பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்கிறார். ஆகவே, சமயோஜித புத்தியால் எதையும் சாதிப்பீர்கள். வீட்டில் கலகலப்பான சூழல் அமையும். வாழ்க்கைத் துணைவருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். அவர் வழியிலான சொத்து கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.
தனுசு
வழக்குகளில் வெற்றி உண்டு!
7.07.2020 முதல் 30.7.2020 வரை, உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரம் அடைகிறார். உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஊர்ப் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை, பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்கிறார். ஆகவே கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பேச்சில் நிதானம் தேவை. புதிய பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.
மகரம்
பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்!
7.7.2020 முதல் 30.7.2020 வரை, உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால், பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனத்தை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். எந்தவொரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிவரும். 31.7.2020 முதல் 10.09.2020 வரை, பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்கிறார். மின்னணு - மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் நிறைகளைப் பாராட்டத் தயங்காதீர்கள்.
கும்பம்
புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு!
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால், வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள், சில தவணைகளைச் செலுத்த முடியாத அளவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்படும். முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். 31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. சகோதரர் குடும்பத்துத் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
மீனம்
இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்!
7.07.2020 முதல் 30.7.2020 வரை உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைகிறார். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 31.7.2020 முதல் 10.09.2020 வரை, பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்குத் திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.