Published:Updated:

`என்ன யோகம்?' நீங்களே கணிக்கலாம்!

யோக முகூர்த்தம்
பிரீமியம் ஸ்டோரி
யோக முகூர்த்தம்

ஜோதிடர் முருகப்ரியன்

`என்ன யோகம்?' நீங்களே கணிக்கலாம்!

ஜோதிடர் முருகப்ரியன்

Published:Updated:
யோக முகூர்த்தம்
பிரீமியம் ஸ்டோரி
யோக முகூர்த்தம்

தினசரி காலண்டரில் ஒவ்வொரு நாளும் ஒரு யோகம் அல்லது இரண்டு யோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவை: அமிர்த யோகம், சித்தயோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம். ஒவ்வொருநாளும் யோகத்தைக் கணக்கிடுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

யோகங்களில் சித்தயோகம் சிறந்த யோகம்தான். அன்றைக்குத் தொடங்கும் காரியங்கள் ஸித்தியாகும். ஆனால், சித்தயோகத்தை விடவும் மூன்று மடங்கு சிறப்பானது அமிர்தயோகம். மரணயோகம் மற்றும் பிரபலாரிஷ்டயோகம் அசுப யோகங்களாகும். அன்றைக்கு புதிய முயற்சிகள் எதுவும் தொடங்காமல் இருப்பது உத்தமம். இனி ஒவ்வொருநாளும் யோகத்தைக் கணக்கிடுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வோம்.

யோகம் என்பது அன்றைய கிழமை மற்றும் அன்றைக்கு இருக்கும் நட்சத்திரத்தைப் பொறுத்து அமையும். ஒரு கிழமையில் இன்னின்ன நட்சத்திரங்கள் இருந்தால் இந்த யோகம் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமைகளில் அசுவினி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால், அன்று அந்த நட்சத்திரம் இருக்கும் நேரம் வரையிலும் சித்தயோகம் ஆகும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் உத்திரம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அந்த நட்சத்திரம் இருக்கும் நேரம் வரை அமிர்தயோகம் இருக்கும்.

ஞாயிறன்று மகம், விசாகம், அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால், அன்று மரணயோகம் ஆகும். பரணி நட்சத்திரம் இருந்தால் அன்று அமைவது யோகம் பிரபலாரிஷ்ட யோகம் ஆகும்.

திங்கள்: திங்கள்கிழமைகளில் அசுவினி, பரணி, மிருக சீரிடம், திருவாதிரை, பூசம், ஆயில்யம், பூரம், உத்திரம், அஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் சித்தயோகம் கூடிவரும்.

ரோகிணி, புனர்பூசம், சுவாதி மற்றும் திருவோணம் வந்தால் அன்று அமிர்தயோகம் ஆகும்.

கிருத்திகை, மகம், விசாகம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் திங்கள்கிழமைகளில் வந்தால் அன்று மரண யோகம். திங்களன்று சித்திரை நட்சத்திரம் வந்தால், அன்று பிரபலாரிஷ்ட யோகம் ஆகும்.

செவ்வாய்: அசுவினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இருந்தால் அன்று சித்தயோகம்

ரோகிணி, உத்திரம், மூலம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் அன்று அமிர்தயோகம்.

திருவாதிரை, விசாகம், சதயம், கேட்டை, பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் மரண யோகம். அன்று உத்திராடம் நட்சத்திரம் வந்தால் அன்று பிரபலாரிஷ்ட யோகம் ஆகும்.

புதன்: பரணி, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.

கிருத்திகை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் கூடி வந்தால் அன்று அமிர்தயோகம்.

அசுவினி, அஸ்தம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் இருந்தால் மரணயோகம். அவிட்டம் இருந்தால் பிரபலாரிஷ்ட யோகம்.

வியாழன்: வியாழக்கிழமைகளில் பரணி, பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, விசாகம், அனுஷம், மூலம், பூராடம், உத்திராடம் திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் இருந்தால் அன்றைய யோகம் சித்தயோகம்.

அசுவினி, புனர்பூசம், மகம், சுவாதி இருந்தால் அமிர்தயோகம்.

கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, உத்திரம், சதயம் நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம். கேட்டை நட்சத் திரம் வந்தால் பிரபலாரிஷ்ட யோகம்.

வெள்ளி: பரணி, கிருத்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.

அசுவினி, அஸ்தம், மூலம் நட்சத்திரங்கள் வந்தால் அமிர்தயோகம்.

ரோகிணி, பூசம், ஆயில்யம், மகம், கேட்டை, திருவோணம் நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம். பூராடம் நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்ட யோகம் ஆகும்.

சனி: சனிக்கிழமைகளில் அசுவினி, பரணி, கிருத்திகை, மிருக சீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் வந்தால் சித்தயோகம்.

ரோகிணி, மகம், சதயம் நட்சத்திரங்கள் வந்தால் அமிர்தயோகம்.

ஆயில்யம், உத்திரம், அஸ்தம், சித்திரை, பூரட்டாதி நட்சத்திரங்கள் வந்தால் மரணயோகம். ரேவதி நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்ட யோகம் கூடிவரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism