Published:Updated:

செய்வினை தோஷங்கள் விலக சிறப்புப் பரிகாரங்கள்!

ஶ்ரீநரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநரசிம்மர்

ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

செய்வினை தோஷங்கள் விலக சிறப்புப் பரிகாரங்கள்!

ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

Published:Updated:
ஶ்ரீநரசிம்மர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீநரசிம்மர்

செய்வினை-தீவினையால் ஏற்படும் தோஷ பாதிப்புகள் போன்றவை குறித்தத் தகவல்கள் அதர்வண வேதத்திலும் இன்னும்பல நூல்களிலும் உண்டு. முற்காலத்தில் பகை அரசர்களை வீழ்த்த இதுபோன்ற மந்திர-தாந்திரீக விஷயங் களைப் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

செய்வினை தோஷங்கள் விலக சிறப்புப் பரிகாரங்கள்!
Chirag Dave

கிராமப் புறங்களில் இன்றும் பல பாதிப்புகளுக்குச் செய்வினை தொஷங்களே காரணம் எனும் நம்பிக்கையும், அதுசார்ந்த பரிகார வழிபாடுகளும் வழக்கத்தில் உண்டு. செய்வினை- தீவினை தோஷ பாதிப்புகளுக்கு ஜோதிடரீதியான பரிகார விளக்கங்களும் உண்டு. அதுபற்றி அறிந்துகொள்வோம்.

செய்வினை, பில்லி-சூன்யம் போன்ற எவ்வித பாதிப்பாக இருந்தாலும் அனைத்தும் முன்வினைப்படியே நிகழ்கின்றன. முன்வினைகளைச் செயல்படுத்துபவை நவகிரகங்களே. கிரகங்களின் இசைவின்றி எதுவும் நடப்பதில்லை. பரம்பொருள் ஈசனே சனி பகவானின் பார்வைக்கு ஆளாகி பிச்சாண்டியானார் எனும் புராணக் கதை உண்டு. ஆக, கிரகங்கள் வழிவிடாமல் ஒருவருக்குச் செய்வினையால் பாதிப்பு ஏற்படாது.

ஒருவர் செய்வினையால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா, இல்லையா என்பதை ஜாதகம், பிரச்னம், அஷ்டமங்கல பிரச்னம் ஆகியவற்றின் மூலம் அறியலாம்.

பொதுவாக, ஒருவரின் ஜாதகம் பலம் பொருந்தியதாக இருந்தால், அவருக்குச் செய் வினையால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.

செய்வினை தோஷங்கள் விலக சிறப்புப் பரிகாரங்கள்!
Andrey Danilovich

ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி வலு பெற்றாலும் லக்னத்தைக் குரு போன்ற சுப கிரகங்கள் பார்த்தாலும் அந்த ஜாதகருக்கு செய்வினை பாதிப்பு ஏற்படாது. ஒருவேளை, வேறு கிரக நிலைகளால் செய்வினைகளுக்கு ஆளானாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

ஜாதகத்தில் சூரியன் சுப ஸ்தானத்திற்கு அதிபதியாகி வலுப்பெற்று இருந்தாலும், லக்ன ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும், லக்னத்திலேயே சூரியன் இருந்தாலும், லக்னத்தைப் பார்த்தாலும் அந்த ஜாதகருக்குச் செய்வினையால் பாதிப்பு ஏற்படாது.

சூரிய பகவானின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் செய்வினையால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.

சரி, எந்த நிலையிலான ஜாதக அமைப்புகளுக்குச் செய்வினை தோஷங்`களால் பாதிப்பு உண்டாகும்?!

திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகன்

த்ரு ஸ்தானமாகிய 6-ம் அதிபதி மற்றும் பாதகாதிபதி இணைவு பெறுவது செய்வினை பாதிப்பு இருப்பதைக் குறிக்கும். அப்படி இருந்தாலும் குறிப்பிட்ட தசா-புத்தி காலங் களிலேயே பாதிப்புகள் உண்டாகும்.

சனி, ராகு, கேது ஆகிய பாவ கிரகங்களின் சுய தசை, சுய புத்தி காலங்களில் பாதிப்பு உண்டாகும். அதேபோல் இந்த கிரகங்கள் 6-ம் இடம் மற்றும் பாதக ஸ்தானத்துக்கு சம்பந்தப்படும் நிலையிலும் செய்வினை பாதிப்பு உண்டாகும்.

ஆறாம் அதிபதி மற்றும் பாதகாதிபதி கிரகங்கள் 8-ம் பாவத்துடன் சம்பந்தப்படும்போது, செய்வினை தோஷமானது எளிதில் தீர்க்க முடியாதபடி நீண்டநாள் பிரச்னையைத் தரும் என்கின்றன ஜோதிடநூல்கள்.

ஆறு மற்றும் பாதகாதிபதி கிரகங்கள் விரய ஸ்தானமாகிய 12-ம் பாவத்துடன் சம்பந்தப் படும்போது, செய்வினை தோஷங்களால் பணம் - பொருள் விரயம், மருத்துவச் செலவுகள் ஆகியவை ஏற்படும்.

ஶ்ரீவாராஹி
ஶ்ரீவாராஹி

பரிகாரங்கள்... வழிபாடுகள்!

குலதெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வரும் அன்பர்களுக்குச் செய்வினையால் பாதிப்பு ஏற்படாது; குலதெய்வம் காத்து நிற்கும்.

தினமும் வீட்டுப் பூஜையறையில் நெய்விளக்கு ஏற்றி, சாம்பிராணி புகையிட்டு, குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தைப் பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

பாதிப்புகளுக்கு ஆளான அன்பர்கள், அவற்றிலிருந்து விடுபட, மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக குலதெய்வ ஆலயத்துக்குச் சென்று, அவரவர் குடும்ப வழக்கப்படி வழிபட்டு வந்தால் தோஷ பாதிப்புகள் நீங்கும்.

விழுப்புரம் அருகே ஒரே நேர்கோட்டில் அமைந்த மூன்று நரசிம்மர் திருத்தலங்கள் உண்டு. சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய அந்த மூன்று தலங்களுக்கும் சுவாதி நட்சத்திர நாளில் சென்று நரசிம்மரை தரிசித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.

இங்ஙனம் மூன்று மாதங்கள் சுவாதி நாளில் தரிசித்து வழிபட்டு வருவதால் கஷ்டங்கள் நீங்கும்; பகைவர்களால் உண்டான செய்வினை தோஷங்கள் விலகும்.

தொடர்ந்து மூன்று மாதங்கள் - அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்களா பரமேஸ்வரியை தரிசித்து, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால் மிகுந்த நன்மைகள் உண்டு; தீவினைகள் யாவும் விலகியோடும்.

மாதம்தோறும் சஷ்டி திதிநாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால், செய்வினை பாதிப்புகள் அண்டாது. ஒருமுறை திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டு வரலாம்.

ஒவ்வொரு மாதமும் பஞ்சமி தினத்தில் விரதம் இருந்து அன்னை வராஹியை நெய்விளக்கேற்றி வழிபடலாம். தஞ்சை பெரியகோயிலில் அருளும் வராஹியை தரிசித்து வழிபட்டு வருவதும் விசேஷம். அல்லது தங்கள் வீட்டுக்கு அருகில் வராஹிதேவி சந்நிதி இருந்தால், அங்கு சென்றும் வழிபடலாம்.

தேய்பிறை அஷ்டமி தினத்தில் முறைப்படி விரதமிருந்து கால பைரவரை வழிபடலாம். அஷ்டமியில் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை தரிசித்து மனமுருகி வழிபட்டு வாருங்கள்.

செவ்வாய்க்கிழமையில் விரதமிருந்து ராகு காலத்தில் பிரத்யங்கிரா தேவியை வழிபடுவதும், கும்பகோணம் அருகிலுள்ள ஐயாவாடி பிரத்யங்கிரா ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டு வருவதும் விசேஷ பலன்களை அளிக்கும்.

இதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் சோளிங்கர் நரசிம்மர், யோக அனுமனை வழிபட்டு வருவதும், ஞாயிறு - ராகுகாலத்தில் கும்பகோணம் அருகில் திருபுவனம் சிவாலயத்தில் அருளும் சரபேஸ்வரரை வழிபட்டு வருவதாலும் செய்வினைக் கோளாறுகள் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் அதிகரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism