Published:Updated:

மனைவியால் அதிர்ஷ்டம் வேண்டுமா?

மனைவியால் அதிர்ஷ்டம்
பிரீமியம் ஸ்டோரி
மனைவியால் அதிர்ஷ்டம்

- க.முருகேசன் -

மனைவியால் அதிர்ஷ்டம் வேண்டுமா?

- க.முருகேசன் -

Published:Updated:
மனைவியால் அதிர்ஷ்டம்
பிரீமியம் ஸ்டோரி
மனைவியால் அதிர்ஷ்டம்

ஓர் ஆணின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7-வது இடம் மனைவி ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த வீட்டுக்குரிய கிரகம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, இந்தக் கிரகம் 2, 4, 5, 9 ஆகிய வீடு களுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பெண், வாழ்க்கைத் துணைவியாக அமைவாள்.

மனைவியால் அதிர்ஷ்டம் வேண்டுமா?

மேற்சொன்ன கிரக அமைப்புடன் கூடிய ஜாதகர்கள், திருமணத்துக்கு முன் மிகச் சாதாரணமானவர்களாக இருந்திருப்பார்கள். மனைவி வந்த நேரம், அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். இவர்களின் வாழ்க்கைத் துணையாய் வரும் பெண், விளக்கேற்றிவைத்து எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் சில ஆண்டுகளிலேயே பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் சுபத் தன்மை பெற்ற குருவின் பார்வை பெற்றால், அவருக்கு மனைவியாக வாய்க்கக்கூடிய பெண் கற்பு நெறி, தெய்வ பக்தி, உண்மை பேசும் குணம், பெரியோரை அனுசரித்துச் செல்லுதல் ஆகிய நற்குணங்களைக் கொண்டவளாக இருப்பாள்.

லக்னாதிபதியும் வலுவடைந்து, 7-ஆம் வீட்டுக்குரிய கிரகமும் பாவக் கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இல்லாமல் இருந்தால், அழகு, அன்பு, அறிவு, அந்தஸ்து, நற்குணம் கொண்ட மனைவி அமைவாள்.

தங்களின் பிள்ளைகளுக்கு இப்படியான அதிர்ஷ்டம் தரும் மனைவி அமைய, ஓர் ஆணின் பெற்றோர் சில நல்ல விஷயங்களைச் செய்வது நல்லது.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்யலாம். அல்லது திருமணச் செலவின் ஒரு பகுதியை மனமுவந்து ஏற்கலாம்; மாங்கல்யம் வாங்கித் தருவது மிக விசேஷம்.

சஷ்டி திதியன்று திருத்தணி முருகனை வழிபடுவது சிறப்பு.

வெள்ளிக் கிழமைகளில் அம்பாளை கீழ்க்காணும் 11 திருநாமங்களால் அர்ச்சித்து வழிபட்டால், விரைவில் நல்ல மணப்பெண் அமைவாள்.

ஓம் ஶ்ரீமாதங்க்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ச்யாமாயை நம:
ஓம் ஸசிவேச்யை நம:
ஓம் சுகப்ரியாயை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் அபிராமையை நம:
ஓம் மகேச்வர்யை நம:
ஓம் நாதப்ரியாயை நம:
ஓம் ராஜராஜேச்வர்யை நம: