Published:Updated:

சனி தோஷம் நீங்கிட பச்சரிசி பரிகாரம்!

ஶ்ரீசனிபகவான்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசனிபகவான்

- ஜோதிடர் ஶ்ரீமுருகப்ரியன் -

சனி தோஷம் நீங்கிட பச்சரிசி பரிகாரம்!

- ஜோதிடர் ஶ்ரீமுருகப்ரியன் -

Published:Updated:
ஶ்ரீசனிபகவான்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசனிபகவான்

ஜன்மச் சனி. அஷ்டமத்துச்சனி, ஏழரைச் சனி போன்ற சனி பகவானின் சஞ்சார நிலை எல்லோருக்குமே சஞ்சலத்தை ஏற்படுத்தும். ஆனால், `புண்ணியம் மிகுந்தோருக்குச் சனியால் சங்கடங்கள் இல்லை; எளிய வழிபாடுகளால் பாதிப்புகள் நீங்கப் பெறலாம்’ என்று வழிகாட்டுகின்றன ஜோதிடநூல்கள். அப்படியான எளிய பரிகார வழிபாடுகளை நாமும் தெரிந்துகொள்வோம்!

சனி தோஷம் நீங்கிட 
பச்சரிசி பரிகாரம்!

னீஸ்வரன் என்றும், சனி பகவான் என்றும் போற்றப்படும் சனிக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்யும் இவர் ஆயுள்காரகன் எனப்படுகிறார். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன்.

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமாரனே சனி. இவர் யமதர்மராஜனின் சகோதரன். நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனி பகவான்தான். சனி ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், அந்த ஜாதகர் எல்லாவித சௌக்கியங்களையும் பெற்று, உயரிய வாழ்க்கை வாழ்வார்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் பகையாகவோ, நீசமா கவோ இருந்தால், காரியத் தடையும் முயற்சிகளில் தோல்வியும் ஏற்படலாம். மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால், இந்தப் பலன்கள் சாதகமாக மாறும். இவர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். ஒருவரது ஜன்ம ராசிக்கு முந்தைய ராசியில் இவர் சஞ்சரிக்கும்போது, அந்த ஜாதகருக்கு ஏழரைச்சனி ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஜன்ம ராசிக்கு வந்து, அதன் பின்பு ஜன்ம ராசிக்கு அடுத்த ராசியில் சஞ்சரித்து முடியும் ஏழரை வருடங்கள் ஏழரைச்சனி காலம் ஆகும்.

இதனை மங்கு சனி, தங்கு சனி, பொங்குசனி என்று பிரித்துப் பலன் சொல்வார்கள். ஜாதகத்தில் சனி அமர்ந்துள்ள நிலைப்படி அவரது ஆட்சி, உச்ச, நீசத் தன்மையை வைத்து ஏழரைச் சனி பலன்கள் ஏற்படும். சனீஸ்வரனுக்கு அதிதேவதை யமதர்மராஜா. எனவே, தர்மம் தவறாமல் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நியாய உணர்வுடனும் வாழ்பவர்களை சனீஸ்வர பகவான் அனுக்ரஹத்தோடு காப்பாற்றுவார். தர்மமும் ஒழுக்கமும் தவறியவர்களை சனி பகவான் தண்டிக்காமல் விடுவதில்லை.

சனீஸ்வரர் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவரது பத்தினி பெயர் நீலாதேவி. காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. இவருக்கு உகந்த நிறம் கருநீலம். மனித உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர். அவயவக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, மூளைக் கோளாறு போன்றவற்றுக்குச் சனியே காரகன். எள்ளும் நல்லெண்ணெயும் இவருக்கு உகந்தது.

சனி தோஷம் நீங்கிட 
பச்சரிசி பரிகாரம்!

சில எளிய பரிகாரங்கள்...

ஏழரைச்சனி, ஜன்மச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற அமைப்புகளாலும், ஜாதகத்தில் சனிக் கிரகத்தின் நிலை பாதகமாக அமைந்தாலும் எதிர்மறையான பலன்கள் ஏற்படுவது உண்டு. இந்தக் கஷ்டங்களை சனிபகவானே ஏற்படுத்துவார் என்று அர்த்தம் இல்லை; நம் முன்வினைகளுக்கு ஏற்ப உரிய பலா பலன்களை அனுபவிக்க சனிபகவான் காரணம் ஆவார் என்றே சொல்லவேண்டும்.

ஜன்ம ஜாதகப்படி அல்லது கோசார நிலைப்படி சனிக் கிரகத்தால் பாதிப்பு உண்டாகும் நிலை எனில், சில எளிய பரிகார வழிபாடுகள் மூலம் பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்கலாம்; கஷ்டங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.

தெய்வ வழிபாடுகள்: சனிக்கிரகத்தால் பாதிப்பு உள்ளவர்கள் பிள்ளையாரையும் அனுமனையும் சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும், தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் காலைபைரவரை வழிபட்டால், சனிக் கிரக தோஷங்களின் பாதிப்புகள் விலகும்.

பிரதோஷக் காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை சமர்ப்பித்து வழிபடுவதாலும் சனிக்கிழமைதோறும் சிவனாருக்கு வன்னி மர இலைகளை மாலையாகத் தொடுத்து அணிவித்து வணங்குவதாலும் நன்மை உண்டாகும். தினமும் ராம நாமம் ஜபித்து வந்தால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.

பச்சரிசிப் பரிகாரம்: ஒரு கைப்பிடி பச்சரிசியை எடுத்துக்கொண்டு, அதை நன்றாகப் பொடி செய்துகொள்ளுங்கள். பின்னர் சூரியதேவனை வணங்கி வழிபட்டுவிட்டு, குளக்கரையிலோ மரத்தின் அடியிலோ உள்ள விநாயகரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கவேண்டும். கையில் கொண்டு வந்திருக்கும் பச்சரிசி மாவைத் தரையில் போட வேண்டும். அந்த மாவை எறும்புகள் எடுத்துச் செல்லும். குறிப்பாக வன்னி மரத்தின் அடியில் இருக்கும் விநாயகரை வலம் வருவது மிகவும் விசேஷம். இதன் மூலம் சனியால் ஏற்படும் கஷ்டங்கள் மட்டுமன்றி சகல விதமான சங்கடங்களும் நீங்கும்.

அஷ்டமத்துச் சனியின் கஷ்டங்கள் நீங்கிட...

ஒருவருக்கு சனி தசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி வந்துவிடுகிறது. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக அஷ்டமத்துச் சனி மிகவும் கஷ்டப்படுத்திவிடும். அஷ்டமச் சனி நடப்பவர்கள், பாதிப்புகளில் இருந்து விடுபட கீழ்க்காணும் எளிய நியதிகளைக் கடைப்பிடித்து வழிபடலாம்.

சனிக்கிழமைகளில் உடல் உள்ளச் சுத்தியோடு வீட்டில், வழக்கமான எளிய பூஜைகளைக் கடைப்பிடிக்கலாம்.

தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக் கவும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவலாம். அன்னதானத்துக்கு இயன்ற பங்களிப்பை வழங்கலாம். மாற்றுத் திறனாளி களுக்குத் தேவைப்படும் எளிய உதவிகளைச் செய்வது சிறப்பு.

சித்தர் பீடங்கள், ஜீவ சமாதித் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். சிதிலமுற்றுக் கிடக்கும் பழைமையான ஆலயங்களின் திருப்பணிக்கு இயன்ற உதவிகளையும் பங்களிப்பையும் வழங்கலாம்.

வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனி பகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.