Published:Updated:

கேள்வி - பதில்: சாம்பல் நிற மச்சம்... பலனா பாதகமா?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். 4-ம் வீட்டில் சனி இருந்தால், குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக் கூடும்.

கேள்வி - பதில்: சாம்பல் நிற மச்சம்... பலனா பாதகமா?

நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். 4-ம் வீட்டில் சனி இருந்தால், குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக் கூடும்.

Published:Updated:
கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி - பதில்

? சொந்த வீடு அமைவதற்கான கிரக நிலைகள் என்னென்ன. என் மகன் வீடு வாங்க ஆசைப்படுகிறான். ஜாதகப்படி அவனுக்குச் சொந்த வீடு யோகம் உண்டா. பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

- ஜி.பரமேஸ்வரி, திருப்பூர்

!பொதுவாக ஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்குப் பிறகு வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. 4-ம் வீட்டில் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமையப்பெற்றிருந்தால், அவர்கள் எத்தகைய வீட்டில் வசித்தாலும், சுகபோகங்களை அனுபவிப்பதில் தடை ஏற்படாது. ஆனால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. நான்காம் வீட்டில் புதன் அமையப்பெற்றிருந்தால், கலை நயம் மிகுந்த வீடு-வாசல் நிச்சயம் அமையும். ஜன்ம லக்னத்துக்கு நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்தம பாகத்துக்கு மேல் சிறப்பான வீடும் மனை யோகமும் கிடைக்கும்.

நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப்பின் இயற்கையிலேயே நல்ல வீடுவாசல், வாகன யோகங்கள் அமைந்துவிடும். 4-ம் வீட்டில் சனி இருந்தால், குடும்பத்தில் அபிப்பிராய பேதங்கள் வரக் கூடும். சனி பகவான் நல்ல ஆதிபத்தியம் பெற்று சுபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், இவர்களுக்கு நல்ல வீடுமனை யோகங்கள் உண்டாகும். நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், நீசர்களுக்கு மத்தியில் வசிக்கவேண்டியது வரும்; கேது இருப்பின் பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது.

தங்கள் மகனின் ஜாதகப்படி 4-ம் வீட்டில் செவ்வாய் அமைந்துள்ளார். ஆகவே, அவருக்குச் சொந்த வீடு அமைய வாய்ப்பு உள்ளது. எனினும் மற்ற கிரகங்களின் நிலைகள் சற்று பலவீனமாக உள்ளன.

ஆகவே, ஒருமுறை சிறுவாபுரியில் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டு வரச்சொல்லுங்கள். செவ்வாய்க் கிழமைகளில் வீட்டில் முருகனுக் குச் சர்க்கரைப் பொங்கல் படைத்து வணங்கி வழிபடச் சொல்லுங்கள். முருகன் அருளால் விரைவிலேயே அவருக்குச் சொந்தவீடு அமையும்.

கேள்வி - பதில்: சாம்பல் நிற மச்சம்... பலனா பாதகமா?

? ஜாதகப்படி, என் திருமண வாழ்க்கை எப்படி அமையும். எனக்கு மனைவி எந்தத் திசையிலிருந்து அமைவார்?

- கே.சுரேந்திரன், விழுப்புரம்

!தங்களின் ஜாதகப்படி 7-ம் இடம் கடகம். அதன் அதிபதியாகத் திகழும் கிரகம் சுபர்; பலம் பெற்று விளங்குகிறார். ஆகவே, தங்களுக்கு நற்குணங்கள் நிறைந்த மனைவி அமைவார். அவர் மூலம் புகழ்பெற்ற வாழ்க்கையும் மகிழ்ச்சியான இல்லறமும் அமையும்; நல்ல புதல்வர்களை பெறும் பாக்கியம் உண்டு.

பொதுவாக 7-ம் அதிபதி, 7-ல் இருக்கும் கிரகம், சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களில் வலிமை மிக்க கிரகம் எதுவோ, அந்தக் கிரகத்தின் ஆட்சிக்கு உரிய திசையே மணப் பெண் வசிக்கும் திசையாக அமையும். அந்த வகையில், ஜாதக அமைப்புப்படி தங்களுக்குத் தெற்கு திசையிலிருந்து குணவதியான மனைவி அமைவாள்.

? என் உடலில் ஆங்காங்கே சாம்பல் நிற மச்சங்கள் உள்ளன. அங்க லட்சணப்படி இவ்வகை மச்சங்கள் நல்ல பலனைக் குறிக்குமா?

- கே.முருகானந்தம், களியக்காவிளை

!அங்கலட்சண சாஸ்திரம் தரும் விளக்கப்படி, மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று, அபூர்வமாகச் சிலருக்கு உடம்பில் வேறு வண்ணங்களிலும் மச்சம் தென்படும். மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிரந்தரமான வருமானம் இருக்கும்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருள்களோடு ஒட்டியதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான் களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ் பெறுவார்கள்.

சிலருக்கு வெண்மை மற்றும் குங்கும நிறத்திலும் மச்சங்கள் இருக்கும். குங்கும நிறமாக மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறி வுடன் திகழ்வர். வெண்மை நிற மச்சம் அமையப்பெற்றவர், வாழ்வில் எதிர்நீச்சல் போடுபவர்களாக இருப்பார்கள்.

? விரைவில் எங்கள் மனையில் வீடுகட்டும் பணியைத் தொடங்க உள்ளோம். எந்த நட்சத்திரத்தில் வீடு கட்ட ஆரம்பிக்கலாம், எந்தத் தினத்தில் கிரகப் பிரவேசம் வைக்கலாம். தங்களின் வழிகாட்டல் வேண்டும்.

- கே.வீரமனோகரி, திருச்செந்தூர்

!ரோகிணி, மிருகசீரிடம், பூசம், உத்திரம், அஸ்தம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். புனர்பூசம், சித்திரை, சுவாதி, மூலம், அவிட்டம், சதயம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்கள் எல்லாம் அதமம். அவற்றில் வீடுகட்ட ஆரம்பிக்கக் கூடாது.

அதேபோன்று கிரகப்பிரவேசம் செய்வதற்கு உத்திரம், உத்திராடம், ரோகிணி, சித்திரை, ரேவதி, அனுஷம், மிருகசீரிடம் ஆகியவை விசேஷமானவை. அஸ்தம், அசுவினி, பூசம், அவிட்டம், சதயம், சுவாதி, திருவோணம், புனர்பூசம் ஆகியன மத்திமம். மற்ற நட்சத்திரங்களைத் தவிர்த்துவிடலாம்.

`அஷ்டம சித்தி’ என்று ஒன்று உண்டு. அதாவது, எந்த லக்னத்தில் வீடு கட்ட ஆரம்பிக் கிறோமோ, அதற்கு 8-வது இடத்தில் சுப கிரகங் கள் இருக்கவேண்டும். அதையும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.இறை அருளால் வீடுகட்டும் சுபமாக நிறைவேறட் டும்.

-பதில்கள் தொடரும்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com