Published:Updated:

கல்யாண யோகம் எப்போது?

கல்யாண யோகம்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாண யோகம்

கேள்வி - பதில்

? என் மகள் ஜாதகப்படி திருமண பிராப்தி எப்படி என்று விளக்குங்களேன். தடைகள் ஏதேனும் இருந்தால் பரிகாரம் சொல்ல வேண்டுகிறேன்.

- கே.மோகனா, திண்டுக்கல்

! ஜாதகர் சூரியனின் பாவசந்தி என்ற இக்கட்டான சூழலில் பிறந்துள் ளார். சூரியன் அசுவினி முதல் பாதம், மேஷ ராசியில் இருப்பதாக ராசிக் கட்டம் கூறினாலும், லக்ன பாவத்தின்படி பார்த்தால், சூரியன் மீன ராசியிலேயே இருக்கிறார். எனவே, சூரியனுக்குப் பாவசந்தி என்ற தோஷம் ஏற்பட்டுள்ளது.

நவாம்சத்தில் 7-ம் பாவம் கன்னியாக இருப்பதும், அதன் இரு புறங்களிலும் பாவ கிரகங்கள் இருப்பதும் `பாவ மத்திய ஸ்திதி’ என்ற நிலை ஏற்படுவதற்குக் காரணமாகிவிட்டன. மேலும் 8-ல் உச்சம் பெற்றிருக்கும் சனியின் தசை நடைபெறுகிறது. இதுபோன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. பாவசந்தி தோஷத்தை நிவர்த்தி செய்ய உரிய பரிகாரம் செய்ய வேண்டும். அத்துடன் அம்பாள் வழிபாடும் நலம் சேர்க்கும்.

கல்யாண யோகம் எப்போது?

? நான் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து வருகிறேன். ஜாதகப்படி அதற்கு வாய்ப்பு உண்டா?

- கே.ராமச்சந்திரன், வள்ளியூர்

! தங்கள் ஜாதகத்தில் 10-ம் இடத்துக்கு உரிய அதிபதி செவ்வாய், 11-ல் இருக்கிறார். லக்னத்தில் குரு உச்சம் பெற்றிருப்பதுடன், 9-ம் பார்வையாக பாக்கியஸ்தானத்தைப் பார்க்கிறார். 10-ம் பாவத்துக்குக் காரகரான சூரியன், 4-ல் நீசம் பெற்றிருந்தாலும்கூட, 7-ம் பார்வையால் 10-ம் இடமான ஜீவனஸ்தானத்தைப் பார்க்கிறார்.

எனவே, தங்களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும் 2021 வரை தங்களுக்குக் குரு தசை நடைபெறுகிறது. ஆகவே, நன்றாக முயற்சி செய்தால் அரசாங்க வேலை கிடைக்கும்.

? புதிதாக வீடு கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எந்த நாளில் வீடு கட்டும் பணியை ஆரம்பிக்கலாம். கதவுகள் பொருத்துவதிலும் வாஸ்து நியதிகள் உண்டா?

- எஸ்.வளர்மதி, மதுரை-2

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வீடு கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பிக்க ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ஸ்திர லக்னங்களும், ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களும் உத்தமம் ஆகும். இந்த அமைப்பு பொருந்தும் நாளைத் தேர்வு செய்யலாம்.

கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றியும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. மூடி இருக்கும் கதவைத் திறந்தால், அது அசையாமல் அப்படியே நிற்க வேண்டும். அப்படி நின்றால், சகல நன்மைகளுடன் நீடூழி வாழலாம். திறக்கும் கதவானது பெரும் இரைச்சலுடன் தானாகவே மூடிக் கொள்ளுமானால், துன்பகரமான சம்பவங்களே நிகழும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் பெருத்த சப்தம் ஏற்பட்டால், அது அந்த வீட்டின் தலைவனுக்கு ஆகாது. கதவை மூடும்போது செக்கு ஆடுவது போன்ற சப்தம் உண்டானால், புத்திரபாக்கியக் குறையும், மனைவிக்கு ஆரோக்கியக் குறைவும், மனக் கவலைகளும் ஏற்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கல்யாண யோகம் எப்போது?

? செவ்வாய் தோஷம் தரும் கிரக நிலைகள் என்ன. என் மகன் ஜாதகப்படி அவனுக்கு எப்போது திருமணம் கூடிவரும்.

- சி.சோமசுந்தரம், கடலூர்

!பொதுவாக செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருப்பது தோஷமாகும். குறிப்பாக 7, 8 ஆகிய இடங்களில் இருப்பது கடுமையான செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும். செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம் பெற்றிருந்தாலோ அல்லது குரு, சனி, ராகு, கேது ஆகியோரின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலும் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி விடும். அதேபோல் கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி விடும்.

தங்கள் மகன் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் குரு புக்தி நடைபெற்று வருகிறது. சூரியனும் புதனும் பரிவர்த்தனை பெற்று நல்லதொரு யோகத்தைத் தருகின்றனர். ஆகவே,

சுக்கிரன் பகை வீட்டில் இருப்பதால், சுக்கிரனுக்கு உரிய பரிகார பூஜை மற்றும் மகாலட்சுமி ஹோமம் செய்வது நல்லது.

வாசகர்களே... ஜோதிடம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் தருகிறார்,

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி ஜோதிடம் கேள்வி-பதில், சக்தி விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002 Email: sakthi@vikatan.com