Published:Updated:

குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருக்க இதுதான் காரணமா? - இதோ எளிய 5 பரிகாரங்கள்

கண் திருஷ்டி கணபதி
கண் திருஷ்டி கணபதி

குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருக்க இதுதான் காரணமா? - இதோ எளிய 5 பரிகாரங்கள்

இன்றைய பஞ்சாங்கம்

19. 6. 21 ஆனி 5 சனிக்கிழமை

திதி: நவமி பகல் 2.53 வரை பிறகு தசமி

நட்சத்திரம்: அஸ்தம் மாலை 5.09 வரை பிறகு சித்திரை

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம்: பகல் 1.30 முதல் 3 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை/ பகல் 4.30 முதல் 5.30 வரை

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

சந்திராஷ்டமம்: சதயம் மாலை 5.09 வரை பிறகு பூரட்டாதி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்

குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருக்க இதுதான் காரணமா?

பொதுவாகவே குழந்தைகள் விளையாட்டுத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாப்பிடுவதில்கூட அவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் விளையாண்டுகொண்டே இருப்பார்கள். ஆனால் சாப்பிடும்போது வேண்டும் உணவை சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் சரியாக சாப்பிடமாட்டார்கள். நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள்கூட திடீரென்று சாப்பாட்டில் வெறுப்பு அல்லது சாப்பிட முடியாமல் திண்டாடுவார்கள். குழந்தைகள் நன்றாக சாப்பிட்டால்தான் நன்கு வளரமுடியும். சில குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடாமல் நோஞ்சானாக இருப்பார்கள். இதைக் காணும் பெற்றோர்கள் மனம் வருந்துவர். அந்தக் காலத்தில் வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள், இவற்றுக்கெல்லாம் மருந்தும் பரிகாரமும் செய்ய வைத்து உடனே சரிசெய்துவிடுவார்கள். அப்படிக் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருக்க அவர்கள் சொல்லும் காரணம் எது? அதை நீக்கும் எளிய பரிகாரங்கள் என்ன என்னும் விவரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

19.6.21

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

மேஷம்

பக்தி : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். குடும்பத்துடன் இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். தந்தையிடம் பொறுமையாகப் பேசுவதன் மூலம் காரியம் சாதிக்கலாம். - எல்லாம் அவன் செயல்!

ரிஷபம்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை அவசியம். செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். உறவினர்களால் பிரச்னைகள் வந்துபோகும். - டேக் கேர் ப்ளீஸ்!

மிதுனம்

சஞ்சலம் : மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். முடிவுகள் எடுக்க முடியாதபடித் திண்டாடுவீர்கள். செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருக்கும். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கடகம்

மகிழ்ச்சி : பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த வருத்தங்கள் நீங்கும். - என்ஜாய் தி டே!

சிம்மம்

வெற்றி : துணிவுடன் செயல்படுவீர்கள். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. - வெற்றி நிச்சயம்!

கன்னி

தாமதம் : முற்பகலில் செயலில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தினர் பாசமழை பொழிவார்கள். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். - தாமதமாகலாம், ஆனால் தடைப்படாது!

துலாம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ப பணவரவும் இருக்கும். கடன்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் அபராதத்தைத் தவிர்க்கலாம். - ஆல் இஸ் வெல்!

விருச்சிகம்

தன்னம்பிக்கை : குழப்பங்கள் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். சகோதர உறவுகளால் நன்மை உண்டாகும். நண்பர்கள் வகையில் நன்மைகள் நடைபெறும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

தனுசு:

நன்மை : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மனம் அறிந்து நடந்துகொள்வார்கள். வீட்டிலும் வெளியிலும் மரியாதை அதிகரிக்கும். - நாள் நல்ல நாள்!

மகரம்

உற்சாகம் : அதிகாலை முதலே உற்சாகமாகக் காணப்படுவீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உங்கள் ஆலோசனைகளுக்கு மரியாதை கிடைக்கும். - ஆல் தி பெஸ்ட்!

கும்பம்

திட்டம் : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்கள் திட்டப்படி வெற்றிகரமாக முடியும். - நினைத்ததை முடிப்பவர்!

மீனம்

வரவு: சகோதர உறவுகளால் ஆதாயம் ஏற்படும் நாள். எதிர்பார்த்த பணவரவும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த செயல் வெற்றிகரமாக முடியும். - ஜாலி டே!

அடுத்த கட்டுரைக்கு