Published:Updated:

ஆன்மிகத் துளிகள்...

வெள்ளி, ஞாயிறு மற்றும் பெளர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று, துர்கை சந்நிதியில் தீபமேற்றி, மலர்கள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதால், நன்மைகள் பெருகும்.

பிரீமியம் ஸ்டோரி

ருவருக்கு ராகுவின் துணை இருந்தால், அவருக்குப் பிறர் உதவி தேவைப்படாது. சுயமாக முன்னேறும் வல்லமை கிடைக்கும். வராஹமிகிரர் பிருஹத் சம்ஹிதையில் ராகுவின் சிறப்பை விளக்கியுள்ளார்.

தினமும் `ராம் ராஹவே நம:’ என்று கூறி 16 வகை உபசாரங்களைச் செய்து ராகு பகவானை வழிபடுவது சிறப்பு.ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் உள்ளவர்கள், ராகு காலத்தில் அம்பாளை வழிபட்டு நன்மைகள் பெறலாம்.

வெள்ளி, ஞாயிறு மற்றும் பெளர்ணமி தினங்களில் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று, துர்கை சந்நிதியில் தீபமேற்றி, மலர்கள் சமர்ப்பித்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதால், நன்மைகள் பெருகும்.

ராகு பகவானின் அதிதேவதை துர்காதேவி. ஆகவே, தினமும் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்காணும் துதிப்பாடலைப் பாடி வழிபடுவதால், நம் துக்கங்கள் யாவும் விலகும்; வாழ்வில் சகல சம்பத்துகளும் ஸித்திக்கும்; முன்னேற்றம் உண்டாகும்.

ஆன்மிகத் துளிகள்...

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி

புராந்தகி த்ரியம்பகி யெழில்

புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்தரள

புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணி மனாதீத நாயகி குணாதீத

நாதாந்த சக்தி என்று உன்

நாமமே உச்சரித் திருமடியர் நாமமே

நான் உச்சரிக்க வசமோ?

ஆரணி சடைக்கடவுள் ஆரணி

எனப்புகழ் அகிலாண்ட கோடி யீன்ற

அன்னையே! பின்னையும் கன்னிஎன

மறை பேசும் ஆனந்த ரூப மயிலே!

வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ்

கங்கைபுகழ் வளமருவு

தேவையரசே!

வரைரா சனுக்கிருகண்

மணியாய் உதித்தமலை

வளர் காதலிப் பெண் உமையே!

- தாயுமான சுவாமிகள்

குவலயம் போற்றும் கணநாதா!

குலம் செழித்தோங்கி திகழவேண்டும் எனில், அவருக்கு கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும்.

கேது நிழல் கிரகம்தான். எனினும், நாம் எதிர்கொள்ள வேண்டிய துயரங்களை எல்லாம் வலுவிழக்கச் செய்து, வளமான வாழ்வை நிஜமாக்குபவர். அவரை, ஞானகாரகன் எனப் போற்றுகிறது ஜோதிடம்.

கேது, காலன், மஹா கேது, ருத்ர பிரியர், தூம்ர கேது, விவர்ணகன், நறுமணம் ஏற்பவர், வைக்கோல் புகையின் வண்ணம் கொண்டவர் என்றெல்லாம் கேதுவைச் சிறப்பிக்கும் ஞான நூல்கள், அவரை வழிபடுவதால் சகல பீடை களும் விலகும்; செல்வம், தான்யம், பசுக்கள் ஆகிய போகங்கள் பெருகும் என்றும் அறிவுறுத்து கின்றன.

அனுதினமும் ‘கேம் கேதவேநம:’ என்று சொல்லி கேது பகவானை மனதில் தியானித்து வழிபடுவதன் மூலம், அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

அத்துடன் அவருடைய அதி தேவதையான விநாயகருக்கு அப்பம் படைத்து, அருகம்புல் சாற்றி, கீழ்க்காணும் துதிப் பாடல்களைப் பாடி வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும். கேதுவின் அருள்பெற விநாயகரை வணங்கு வோம்! இங்கே உங்களுக்காக விநாயகர் துதிப்பாடல்கள்...

ஆன்மிகத் துளிகள்...

வானுலகும் மண்ணுலகும்

வாழ மறைவாழப்

பான்மைமிகு செய்யதமிழ்ப்

பார்மிசை விளங்க

ஞானமத ஐந்துகர

மூன்றுவிழி நால்வாய்

ஆனைமுக னைப்பரவி

அஞ்சலிசெய் கிற்பாம்!

(சேக்கிழார் புராணம்)

*****

குருவே!

பரமன் கொழுந்தே!

பணிந்தேன்

குவலயம் போற்றும் கணநாதா!

வருவாய் நினைவில்

வந்தெனை ஆள்வாய்

வடிவேலவனின் சோதரனே!

அருள்வாய் உனையே

அனுதினம் பணிவேன்

அன்னைபரா சக்தி

அருள் மகனே!

திருமால் மருகா திருவடி சரணம்

தீனரக்ஷகனே கண நாதா!

(ஸ்ரீவிநாயக ஸப்தகம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு