திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கரிநாள்களைத் தவிர்ப்பது ஏன்?

சூரியன்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரியன்

ஜோதிடத் துணுக்குகள்

சூரியனின் தீட்சண்யம்...

பஞ்சாங்கம் மற்றும் தினசரி காலண்டரில் சில நாள்களைக் `கரி நாள்’ என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாள்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்து விடுவார்கள்.

`கரி நாள் என்பது சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் நாள்’ என்று நம் முன்னோர்களால் வகுத்துத் தரப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம், அந்த மாதத்தில் இருக்கவேண்டிய சராசரி அளவைவிட அதிகமாக இருக்குமாம். இந்தக் கரிநாள்கள் பெரும்பாலும் வருடா வருடம் மாறுவன அல்ல. இவற்றை, தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள்.

கரி நாள்களில் சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும்போது, நம் உடலின் சுரப்பிகள், ஹார்மோன்கள் கூடுதலாகத் தூண்டப்படுகின்றன. ஆகவே, எளிதில் உணர்ச்சிவசப்படுதல், விவேகத்துக்கு முக்கியத்துவம் தராமல் வேகத்துடன் செயல்படுதல் போன்றவற்றுக்கு மனிதன் ஆளாகிவிடுகிறான். விளைவு அன்று செய்யப்படும் காரியங்கள் தோல்வியில் முடிய வாய்ப்பு உண்டு. ஆகவேதான் நம் முன்னோர்கள் கரிநாள்களைத் தவிர்த்தார்கள்.


- க.வித்யா

கரிநாள்களைத் தவிர்ப்பது ஏன்?
Lemon_tm

எந்த நாளில் புதுத் தொழில் தொடங்கலாம்?

ஜாதகத்தில் 10-ம் இடம் தொழில் ஸ்தானம் ஆகும். 10-ம் இடமும், 10-ம் வீட்டோனும் வலுப்பெற்றிருக்கும் அன்பர்களே சொந்தத் தொழிலில் வெற்றி பெறமுடியும்.

கோசாரப்படி குருபலம் உள்ள காலங்களில், அதாவது ராசிக்கு 2, 5, 7, 9, 11-ம் இடங்களில் குரு உலவும்போது தொழில் தொடங்குவது நல்லது.

தொழில் தொடங்குபவரின் நட்சத்திரத்துக்கு, தொழில் தொடங்கும் நாளின் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9-ஆக அமைவது விசேஷமாகும். அதேபோல், குறிப்பிட்ட நாளில் வரும் ராசி, ஜாதகரின் ராசிக்கு 6, 8, 12-வது ராசியாக இல்லாமல் இருப்பது அவசியமாகும்.

அமிர்த யோகம் உள்ள நாள் விசேஷம். இல்லையெனில் சித்தயோகம் நன்று. மரணயோகமும், பிரபாலாரிஷ்டயோகமும் விலக்கப்பட வேண்டும். அன்றைய தினம் சுப முகூர்த்த நாளாக அமைவது சிறப்பு.

பொதுவாக சுப நாட்களான திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தொழில் தொடங்குவது விசேஷம்.


- கே.கிருஷ்ணன்

விருந்தும் கிழமைகளும்!

நம் பண்டைய மரபில் ஒவ்வொரு விஷயத்துக்கும் உரிய நாள்களை - கிழமைகளைத் துல்லியமாகக் குறித்துவைத்து, குறிப்பிட்ட நாள்களில் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து பலன் கண்டனர் நம் முன்னோர். அவ்வகையில் விருந்துக்கு ஏற்ற கிழமைகள் குறித்தும் வழிகாட்டியுள்ளனர்.

ஞாயிறு: இந்தக் கிழமையில் விருந்துக்கு வருவோரிடம், தனக்கே முதலிடம் என்ற மனப்பாங்கு மிகுந்திருக்கும்.

செவ்வாய்: இந்தக் கிழமையில் விருந்துக்கு வருவோரிடம் வேகம் இருக்கும். அன்பும் விவேகமும் இருக்காது.

வியாழன்: இந்தக் கிழமையை விருந்துக்கு வருவோரிடம் அகம்பாவக் குணம் அதிகம் இருக்கும்.

ஆகவே மேற்காணும் கிழமைகள் தவிர்க்கப்பட்டன; திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகள் விருந்துக்கு ஏற்றவையாகச் சொல்லப்பட்டனவாம்.


மா.செந்தில்