Published:Updated:

வற்றாத செல்வம் தரும் குபேர குறிப்புகள்!

குபேரன்
பிரீமியம் ஸ்டோரி
News
குபேரன்

ஜோதிடர் செய்யனூர் ரா.சுப்பிரமணியன்

அதிகாலை எழுந்ததும் நம் வலது உள்ளங்கை, கண்ணாடியில் நம் முகம், பசு ஆகியவற்றை முதலில் பார்க்கவேண்டும். தூய்மையற்ற இடத்தில் மகாலட்சுமி தங்கமாட்டாள். ஆகவே இல்லத்தைத் தூய்மையாக வைத் திருக்கவேண்டும்.

வற்றாத செல்வம் தரும் 
குபேர குறிப்புகள்!


வீட்டில் தினமும் காலையும் மாலையும் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்துக்கு நல்லெண்ணெய் சிறந்தது. இருவேளையும் தீபம் ஏற்றி வழிபட இயலாதவர்கள், மாலை ஒருவேளை மட்டுமாவது அவசியம் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலை-பாக்கு, பூ, பழம், குங்குமம், மஞ்சள் கிழங்கு மற்றும் மருதாணி கொடுத்து உபசரிக்க, வீட்டில் சர்வ மங்கலமும் பொங்கிப் பெருகும்.

வைரம், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் லட்சுமிகடாட்சம் மிக்கவர்களுக்குக் கிடைக்கும். நெருங்கிய உறவுகளாக இருப்பினும், தனக்கான ஆபரணங்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது. புதிதாக வாங்கிக் கொடுக்கலாம்.

ஏற்கெனவே இருக்கும் செல்வம் இறையருளால் பொங்கிப் பெருக வேண்டும். ஆக, பணப் பைகள் பீரோக்கள், வங்கிக் கணக்கில் பண வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்வது சிறப்பு.

பண வரவு அதிகரிக்க பணப்பெட்டி மற்றும் பணம் வைக்கும் அலமாரியை குபேர திசையான வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்கும்படி அமைக்கலாம்.

வாடகை, மளிகை முதலான பல விஷயங்களுக்காக பணத்தைக் கொடுக்கும்போது, தலைப்பகுதியை நம் பக்கமாக வைத்துக் கொண்டு `மீண்டும் வேறு வழியில் வந்து சேரவேண்டும்’ என்று மனதாரப் பிரார்த் தித்துக் கொண்டு பணத்தைக் கொடுப்பதால், செலவுகளை விடவும் வரவு அதிகம் வரும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக் கிழமைகளில் உப்பு வாங்கு வது விசேஷம். இதனால் லட்சுமிகடாட்சம் மிகுந்திருக்கும்.

பெளர்ணமிதோறும் மாலைப் பொழுதில் சத்யநாராயணரை வணங்கி வழிபடுவது விசேஷம். துளசி, செண்பக மலர்களைக் கொண்டு சத்ய நாராயணரை அர்ச்சித்து, பால்பாயசமும் கல்கண்டும் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும். இதனால் செல்வம் பன்மடங்கு உயரும்.

வெள்ளிக் கிழமைகளில் பூவும் காசும் சமர்ப்பித்து `குபேரரே போற்றி' என்று 108 முறை உச்சரித்து குபேரரை வழிபடலாம். இதனால் செல்வ சம்பத்துகள் பெருகும்.

அதேபோல் சகல மங்கலங்களையும் பெறும் விதமான சுபகாரியங்கள் நல்லபடியாக நிறைவேற... வளர்பிறை நாட்கள், குறிப்பாக பஞ்சமி திரயோதசி திதிகள், அமிர்த, சித்த யோகம் கூடிய தினங்களில் - சுப ஹோரைகளில் அவற்றை ஆரம்பிக்கலாம்.

பூமியில் வைக்கக் கூடாத பொருள்கள்

ருமுறை நாராயணரை துதித்த பூமாதேவி அவரிடம், `பகவானே! நான் எல்லாவற்றையும் தரிப்பேன். ஆனால் சிலவற்றை என்மீது வைத்தால் என்னால் தரிக்க முடியாது...’’ என்று வேண்டிக்கொண்டாள்.

அதாவது நல்முத்து, முத்துச் சிப்பி, பகவானின் பிம்பம், சிவலிங்கம், அம்பாளுடைய மூர்த்தி, சங்கு, தீபம், தேவதா யந்திரங்கள், மாணிக்கம், வைரம், பூணூல், புஷ்பம், புத்தகம், துளசி இலைகள், ஜபமாலை, பூமாலைகள், கற்பூரம், தங்கம், கோரோசனை, சந்தனம், சாளக்கிராமம், அதற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் ஆகியவற்றைத் தன்னால் தாங்க இயலாது எனக் கூறினாள் பூமிதேவி. ஆகவே, இந்தப் பொருள்களைத் தரையில் வைக்கக்கூடாது
.