Published:Updated:

நட்சத்திர ஆருடம்!

நட்சத்திர ஆருடம்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர ஆருடம்

டி.எஸ்.என்

நட்சத்திர ஆருடம்!

டி.எஸ்.என்

Published:Updated:
நட்சத்திர ஆருடம்
பிரீமியம் ஸ்டோரி
நட்சத்திர ஆருடம்

ம் முன்னோர்கள், எதிர்காலம் பற்றிய வழிமுறைகளைப் பிறருக்கு எடுத்துக்காட்ட எத்தனையோ யுத்திகளைக் கையாண்டுள்ளனர். அவற்றில் ஒன்று நட்சத்திர ஆருடம் அல்லது நட்சத்திரச் சக்கரம். அவசரமான காலகட்டத்தில் சாஸ்திரங்களை நுணுக்கமாக ஆராய நேரம் இல்லாதபோதும் அத்தகைய சாஸ்திர நிபுணர்கள் கிடைக்காதபோதும், இந்த ஆருட சாஸ்திரம் நமக்குத் துணையாக இருக்கும்.

நட்சத்திர ஆருடம்
நட்சத்திர ஆருடம்

வாசகர்கள் பலருடைய வேண்டுகோளுக்கு இணங்க, ஏற்கெனவே `சக்தி ஜோதிடம்’ இதழில் பல அத்தியாயங்களாக வெளியான நட்சத்திர ஆருடம், எளிய வடிவில் ஒரே தொகுப்பாக இங்கு தரப்பட்டுள்ளது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலேயுள்ள நட்சத்திரச் சக்கரத்தை கத்தரித்து கெட்டியான ஓர் அட்டையில் ஒட்டிக்கொண்டால், பயன்படுத்த ஏதுவாக இருக்கும். குறிப்பிட்ட பிரச்னைக்கு பதில்காண விரும்புவோர், இறைவனைப் பிரார்த்தித்து அவருக்குச் சமர்ப்பித்த ஒரு பூவை எடுத்து, அதன் காம்பினால் நட்சத்திரக் கட்டத்தைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு, ஏதேனும் நட்சத்திரத்தையோ எண்ணையோ தொட வேண்டும்.

நட்சத்திர ஆருடம்
நட்சத்திர ஆருடம்

பூக்காம்பு தொட்டுக்கொண்டிருக்கும் நட்சத்திரம் எதுவோ, அதற்கான பலன்களை அடுத்தடுத்த பக்கங்களில் இடம்பெற்றுள்ள விளக்கங்கள் மூலம் அறியலாம்.

இந்த விளக்கங்கள்... ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு, உரிய பலன் சொல்லும் வகையில் சித்தர்களால் அருளப்பட்ட பாடல்களின் கருத்துகளாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பூக்காம்பு மூலம் `இன்ன நட்சத்திரம் ஆருடமாகப் புலப்பட்டால் இன்ன பலன்’ என்று (27 நட்சத்திரங்களுக்கும்) பாடலாகச் சித்தர்களால் அருளப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் நம் மனத்திலுள்ள பிரச்னை அல்லது கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுக மாகவோ பதில் கிடைக்கும். சில தருணங்களில் எதிர்மறையாகப் பலன்கள் வந்தால், அதற்கு ஏற்ப நமது அணுகுமுறையை மாற்றிகொள்ளவேண்டும்; உரிய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ளவும்.

நட்சத்திர ஆருடம்
நட்சத்திர ஆருடம்

1. அஸ்வினி: ஐங்கரனின் திருவருளால் எந்தக் காரியமாயினும் இடரின்றி பலிதமாகும். மருந்தினால் நோய் நீங்கும். புத்திர பாக்கியம் பெருகும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். வெளியில் இருந்து பொருளோ, ஜீவனோ கிடைக்கும். எட்டு நாள்கள் கழித்து உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுகப்படுவீர்கள். உத்தமம்.

2. பரணி: கவலை அதிகரிக்கும். சுற்றமும் நட்பும் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். உபகாரம் செய்தாலும் அபகாரம் உண்டாகும். உங்கள் வாக்கு மற்றவர்களுக்குக் கசக்கும். ஆனால் விரைவில் நலமே உண்டாகும். கடவுள் அருளால் எட்டு வாரங்கள் கழிந்ததும் இடையூறுகள் எல்லாம் விலகும். மத்திமப் பலன்.

3. கார்த்திகை: கவலையால் கலங்கி வாடுகின்றீர்கள். சுமார் இரண்டு வருடங்களாக, அளவிலாத கஷ்டங்களை அனுபவித்திருக்கலாம். பொல்லாத நோயினால் பொருள் விரயம் ஆகியிருக்கலாம். பொன் - பொருள்கள் அழிந்தும் போயிருக்கும். ஏனென் றால், ஜன்மத்தில் அங்காரகன் இருக்கிறான். அவன் மூன்று வாரங்களில் மறைகிறான். அதன் பிறகு சுகப்படுவீர்கள். கடவுள் அருளால் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை உணர்ந்து உதவுவார்கள். இது மத்திமம்.

4. ரோகிணி: குரு பஞ்சமஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பலவிதத்திலும் நன்மை உண்டாகும். மலைபோல் வந்த துன்பங்களும் பனிபோல் விலகும். பகையாளிகளும் உறவாகச் சேருவார்கள். தொழில் விருத்தியாகும். காணாமல்போன பொருளாயினும் ஜீவனாயினும் கருத்துடன் வந்து சேரும். புத்திர பாக்கியம் உண்டு. பந்துக்களுடனும் மனைவி மக்களுடனும் செல்வாக்குடன் வாழ்வீர்கள். கவலையும் நோயும் கஷ்டமும் இன்னும் இரண்டு வாரங்களில் நீங்கும். நாடிய எண்ணம் நல்லவிதமாக முடியும். உத்தமம்.

5. மிருகசீரிஷம்: பூர்வ வினைகளும் வெகுநாள்களாக அனுபவித்த கஷ்டங்களும் சூரியனைக்கண்ட பனியாக விலகும். குபேர சம்பத்துடன் புகழ்மிகுந்து வாழ்வீர்கள். மனையில் விவாகம் கைகூடும். நோய் படிப்படியாக விலகும். தொழில் நீடித்தோங்கும். தெற்கு திசையிலிருந்து நன்மையான செய்தி வரும்.

17 நாள்களில் மனக்கவலை நீங்கி மகிழ்ச்சி கிட்டும். நினைத்தது பலிதமாகும். புத்திர சம்பத்து உண்டாகும். உத்தமம்.

நட்சத்திர ஆருடம்
நட்சத்திர ஆருடம்

6. திருவாதிரை: நீங்கள் நம்பிய நபர்களும் உங்களை கைவிட்டு விடுவார்கள். குடும்பத்தில் வம்பு வழக்குகளும், தொழிலில் நஷ்ட நிஷ்டூரமும், கொடுக்கல் வாங்கலில் வாதும் சூதும் உண்டாகலாம். கவனத்தோடு செயலாற்றுங்கள். கடவுள் அருளால் கவலைகள் விலகும். எண்ணிய காரியம் தடைபடாமல் நடைபெறும். அலைச்சலும் கஷ்டமும் விரைவில் மாறும். பிரார்த்தனைகள் நல்ல பலனைத் தரும். நம்பிக்கையோடு இருங்கள். ஐந்து வாரங்கள் கழித்து நன்மை உண்டாகும். மத்திமமான பலன் தரும்.

7. புனர்பூசம் ஆபத்துகளும், பொல்லாத கண்டங்களும், பாதிக்கும் நோயும் நீங்கும். குறைவின்றி குடும்பம் தழைக்கும். மாடு மனை வகையில் லாபம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி, புத்திர சம்பத்து, தொழில் விருத்தி உண்டு. அந்நியரான பெரியவர் ஒருவரின் உதவியால் ஆறுதலும் அமோக ஒத்துழைப்பும் உண்டாகும். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்துவர, கஷ்டங்கள் விலகும்.

8. பூசம்: எண்ணிய எண்ணம் இடையூறின்றி பலிதமாகும். எதிரிகளும் இழிவாகப் பேசியவர்களும் தோல்வியடைவார்கள். பகைவர்கள் அஞ்சுவர். அதிர்ஷ்டவசமான பொருள்களெல்லாம் கிடைக்கும். சுபம் உண்டாகும். நோய் நீங்கும். மேற்கு திசையிலே லாபம் உண்டு. தொழில் விருத்தியாகும். அதேநேரம், வீட்டில் குலதெய்வங்களை வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்துவர, 27 நாள்களில் கஷ்டங்கள் நீங்கும். உத்தமம்.

9. ஆயில்யம்: மனத்தில் நினைத்த எண்ணம் தடங்கலாகும். குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் பகை ஏற்படும். பலவிதத்தில் பொருள் சேதம் உண்டு. சலிப்பு ஏற்படும். மனைவி மக்களைப் பிரிய நேரிடும். சொற்பமான நோயாயினும் பெரிதும் பாதிக்கும். உங்கள் வாக்கு பிறருக்கு கசக்கலாம். எண்ணங்கள் எல்லாம் பகற்கனவாக மாறும். கடவுள் அருளால் நன்மையே நடக்கும். ஒரு மாதம் கழித்து நல்லதே நிகழும். இது மத்திமம்.

10. மகம்: பற்பல கவலைகளும் சிநேகித விரோதமும் ஏற்படும். பந்துக்களும் பகைவர்கள் ஆவர். உங்கள் பொருளே உங்களை விரோதியாக்கிவிடும்; குடும்பத்தில் சச்சரவுகளை உண்டாக்கும். அடிக்கடி நோயால் கவலையும், பொருள் விரயமும், தொழில் நஷ்டமும், மனக்கஷ்டமும் உண்டாகும். தரித்திர திசையால் மனக்கலக்கம் அதிகமாகும். 40 நாள்கள் கழித்து நன்மை உண்டாகும்.

11. பூரம்: பலரும் உங்களுக்கு எதிராக மாறி நிந்திப்பார்கள். செய்யும் தொழிலில் தாமதமும் நஷ்டமும், காரிய தடையும் உண்டாகும். குடும்பத்தில் சச்சரவு வரலாம். கவனத்தோடு நடந்துகொள்ளுங்கள். எதிலும் நிதானமாக அக்கறையாக இருந்துகொண்டால் நன்மை உண்டாகும். பேச்சில் கனிவு கொள்ளுங்கள். இறைவழிபாடு இன்னலைத் தீர்க்கும். ஐந்து மாதங்கள் கழிய, நன்மை உண்டு.

12. உத்திரம்: உலகில் நல்லவிதமாக வாழ்வீர்கள். வறுமையும், அல்லல்படுத்திய நோயும், கொல்ல வந்த கண்டமும் ஒழிந்தன. இனி, குடும்பத்தில் உள்ள சச்சரவுகள் நீங்கும். மனையில் விவாகம் நடக்கும். தாயாதி வழியில் பொருள் சேரும். வடக்கு திசையில் லாபம் உண்டாகும். பகைவர்களும் உறவாவார்கள். 21 நாள்களில் வெளியிலிருந்து நன்மையான சங்கதி வரும். எண்ணம் பலிதமாகும். மிக உத்தமமான பலன்.

13. அஸ்தம்: பலவித சிக்கல்கள் வலிய வரும். குடும்பத்தில் சண்டை வரலாம். எண்ணி எண்ணி ஒவ்வொரு செயலையும் செய்யுங்கள். தொழிலில் நஷ்டமும் நிந்தையும் ஏற்படலாம். கவனமாகச் செயல்படுங்கள். கடவுள் அருளால் கவலைகள் நீங்கும். மற்றவர்க்கு உதவுங்கள். இரண்டு மாதங்கள் கழிந்ததும் துன்பங்கள் ஒழிந்து நன்மை உண்டாகும். மத்திமமான பலன்.

14. சித்திரை: கவனமாக இருக்கவேண்டிய தருணம் இது. சிக்கல்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உங்களால் ஆதரிக்கப்பட்டோரும் உங்களை அவமதிப்பார்கள். காரியத்தில் தடைகள் உண்டாகலாம். கடன், ஜாமீன் கொடுப்பதில் கவனம் கொள்ளுங்கள். அறியாதவர்களுக்கு உதவப்போய் ஆபத்தில் சிக்க வேண்டாம். இன்று முதல் ஒன்பது நாள்களுக்கு, நவகிரகங்களைப் பூஜிக்க நன்மை உண்டாகும்.

15. சுவாதி: சோம்பல் மிகுதியாகும். உதவி செய்தாலும் உபத்திரவமே உண்டாகும். குடும்பத்தில் பகை ஏற்பட்டு, தொல்லை நேரிடும். கடன்காரர்களின் தொல்லையும் உண்டாகலாம். கடன் வாங்குவதை நிறுத்துங்கள். பலவிதமான கவலைகள் மனத்தில் குடிகொள்ளும். மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கொடுமைகள் விலகும். ஆக, இந்த நட்சத்திரக்கட்டம் சொல்லும் பலன் மத்திமமே.

16. விசாகம்: மனத்தில் கொண்ட எண்ணம் உங்களை அலைக்கழிக்கும். மனத்தில் கவலை குடிகொண்டு துன்பத்தைத் தரும். நாளுக்கு நாள் மனக்கவலை அதிகரிக்கும். நோயின் வாதனையும் மனவேதனையும் உண்டாகலாம். விரயச் செலவுகள் அதிகரிக்கும். எங்கும் எதிலும் கவனம் தேவை. கடவுள் நம்பிக்கை நிலைமையை சுகமாக்கும். கவலை வேண்டாம். 7-வது வாரத்தில் இடர்கள் நீங்கி, சுகம் உண்டாகும். மத்திம பலனே.

17. அனுஷம்: பெரியோர்களின் உதவி கிட்டும். அபாரமான செல்வம் கிடைக்கும். மனையில் திருமணம் நடக்கும். ஆண் குழந்தை பிறக்கும். ஆகாத நோயும் நீங்கும். வீட்டைவிட்டுப் போனவர்களும் அதிவிரைவில் திரும்புவார்கள். குடும்பத்தில் ஒரு குறையும் வராது. மனத்தில் இருக்கும் குறைகளும் 23 நாள்களில் விலகும். உத்தமம்.

18. கேட்டை: கவனத்தோடு இருக்க வேண்டிய காலம் இது. ஏமாற்றங்கள் அதிகம் உருவாகும் நிலை வரலாம். உங்கள் பொருளையே பெற்றுக்கொண்டு, உங்களைப் பெரும் மோசத்துக்கு ஆளாக்கு வார்கள். அபாண்டமான குற்றங்களும் உங்கள் மீது சுமத்தப்படும். ஆனாலும், தைரியத்தைக் கைவிட வேண்டாம். கஷ்டங்கள் எல்லாம் நவகிரகாதிகளின் சகாயத்தால் சீக்கிரமே நன்மையாக மாறும். மத்திமம்.

19. மூலம்: காரியம் பலிதமாகும். ஆனால், வஞ்சகர்களுடன் உறவுவைத்து நெஞ்சம் கலங்கும் நிலைக்கு ஆளாகிவிடக் கூடாது. இன்னும் கொஞ்சம் நாள்களில் ஆண்டவன் சகாயத்தினால், வேண்டிய செல்வாக்குடனே வாழ்வீர்கள். மனையில் ஒரு பெண் குழந்தை பிறக்கும். குடும்பக் கடன் தீரும். தெற்கு திசையிலே லாபம் உண்டாகும். தொழில் ஓங்கும். நிலபுலன்களுடன் நீடித்த செல்வமும், நிந்தையற்ற சிந்தனையும் உண்டாகும். வெளியிலிருந்து சந்தோஷகரமான செய்தி வந்து சேரும். இது உத்தமம்.

20. பூராடம்: பூராடத்தின் பலன் என்னவென்றால், தைரியம் நீங்கும். மனக்கவலைகள் சூழும். பிரிவும் துன்பமும் நேரும். தெளிவுள்ள மனத்தில் தயக்கம் உண்டாகும். மூத்தோர்கள் தேடிவைத்த மூலதனம் வீணாக செலவழியும். உங்களின் ஆசை நிராசையாகும். மனம் துணியாத குற்றமெல்லாம் செய்யத் துணியும். ஒரு வருடம் வரை, கொஞ்சம் சஞ்சலமாகவே இருக்கும். கடவுளை நினையுங்கள் கவலைகள் பறந்தோடும். இது மத்திமம்.

21. உத்திராடம்: உத்திராடத்தின் பலனால் ஏழு வருஷங்கள் வரையில் அதிக செல்வாக்கும், குடும்பச் சிறப்பும், பொன் பூஷண சேகரிப்பும், உடன்பிறந்த சகோதரர்களால் ஒத்துழைப்பும், பந்துக்களின் உதவியும் உண்டாகும். பீடிக்கும் நோயானது நீடிக்காமல் நீங்கும். சில நாளைக்கு முன்பு வறுமையால் வாடி, தேசாந்திரம் சென்றவரும், சீக்கிரத்தில் வீடு வந்து சேருவார். பத்து நாள்களுக்குள் பலவிதமான துயரங்களும் மாறிப்போகும். இது உத்தமம்.

22. திருவோணம்: எண்ணிய எண்ணமெல்லாம் இன்னல் இல்லாமல் ஜயமாகும். குடும்பத்தில் சிக்கல் இருக்காது. வியாபார விஷயமாக வெளியூருக்குப் போக, லாபம் உண்டாகும். திருத்தலங்களுக்கு யாத்திரை போக, நன்மை உண்டாகும். தொழிலில் மேன்மை உண்டு. பாலர்களைப் பள்ளியில் அமர்த்த கல்வி ஓங்கும். நாளுக்கு நாள் மேலுக்கு மேலாக குடும்பம் மேன்மை அடையும். குலதெய்வங்களை மறவாமல் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்ய நலம் உண்டாகும். இது உத்தமம்.

23. அவிட்டம்: உங்களுக்கு அவிட்டம் உதயமாகியுள்ளது. இதுவரையில் வெகுகாலமாக மிக மிக துயரப்பட்டீர்கள். சொந்தபந்தங்களுக்கும் பகையானீர்கள். பல துஷ்டர்களின் இடரினால் மனக் கவலையும், தொழிலில் நஷ்டமும் வாய்த்தன. நோயாலும் கண்டங்களாலும் பாதிக்கப்பட்டீர்கள். சுக்கிரனின் சகாயத்தால் இனி நாளுக்கு நாள் உங்கள் கவலைகளெல்லாம் படிப்படியாக நீங்கும்; க்ஷேமம் அடைவீர்கள்; அச்சம் தேவையில்லை. இது உத்தமம்.

24. சதயம்: சதயம் ஆரூடமானதால், கனவில்கண்ட பொருளானாலும் நிஜத்தில் கிட்டும். நில வளமும், மாடு ஆடு விலைகொள்ள, பால் பாக்கியமும், மனை விலைகொள்ள விருத்திகரமும், தான்ய விளைவும், தன லாபமும், உத்தியோக மேன்மையும், குடும்பத்தில் பலவிதமான நற்காரியங்களும் கைகூடும். நோய்கள் நீங்கும். எந்தவிதமான நல்ல எண்ணமும் நினைத்த போதில் தடையின்றிப் பலிதமாகும். நாளுக்கு நாள் குடும்பக் கவலைகளும் நீங்கும். இது உத்தமம்.

25. பூரட்டாதி: பூரட்டாதி உதயமானதால், உங்கள் புகழானது ஓங்கும். நாணயம் தவறாத சொல்லுறுதி உண்டாகும். செல்வம் ஓங்கும். உங்களுக்கு இதுவரையிலும் இடைஞ்சல் புரிந்த ஈனர்கள் ஒழிவார்கள். தன தான்யக் குவியலும், பொன்பூஷண சேர்க்கையும் உண்டாகும். கொண்ட குணவதியினால் குடும்பம் தழைத்தோங்கும். கெடுதலான கண்டங்களும் நீங்கி ஆயுள் பலத்தைக் கொடுக்கும். எண்ணங்கள் பலவிதமாகும். இது உத்தமம்.

26. உத்திரட்டாதி: உத்திரட்டாதி ஆரூடமாக வந்ததால், ஆழிசூழ் உலகில் ஆறுமுகனின் கருணையால் ஆனந்தம் பெருக வாழ்வீர்கள். பலமான தொழில் பெருகும். குடும்ப சுகம் ஏற்படும். அலைச்சலும் கவலையும் கஷ்டமும் குடும்பத்தில் கலகமும் நீங்கும். மனையில் கல்யாண காரியங்களும் புத்திர சம்பத்தும் ஏற்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நோயும் கண்டமும் நீங்கும். இது உத்தமம்.

27. ரேவதி: ரேவதியின் பலனாவது என்னவென்றால், குடும்பத்தின் பலவித வம்புகளும் வழக்குகளும் விலகும். உங்களின் தொழிலானது உயர்வடைந்து மேலோங்கும். உங்களின் துன்பங்கள் எல்லாம் சில நாளைக்குள் இன்பமாக மாறிப்போகும். எதைச் செய்தபோதிலும் எவ்விதமான இன்னலும் ஏற்படாது. உங்களின் எண்ணமும் பலிதமாகும். இது உத்தமம்.

நட்சத்திரச் சக்கரத்தைக் கையாளும் முறை

காலையில் எழுந்து குளித்து முடித்து, முறைப்படி சமயச் சின்னங்கள் தரித்து, கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டு, மனத்தில் இருக்கும் பிரச்னையை, கேள்வியை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும்.

நட்சத்திரச் சக்கரம்
நட்சத்திரச் சக்கரம்

அதன்பின், இறைவனுக்குச் சமர்ப்பித்த ஒரு பூவை எடுத்து, கண்ணை மூடிக்கொண்டு, நட்சத்திரக் கட்டத்தைப் பார்க்காமல், பூவின் காம்பினால் கட்டத்தில் உள்ள ஏதேனும் நட்சத்திரத்தையோ எண்ணையோ தொட வேண்டும். பின்பு, நட்சத்திரக் கட்டத்தில் பூக்காம்பு தொட்டுக்கொண்டிருக்கும் நட்சத்திரம் அல்லது எண் எது என்று பாருங்கள். அந்த நட்சத்திரத்துக்கான பலனை, இங்கு தரப்பட்டிருக்கும் விளக்கங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம் அறியும் பலனை உங்கள் ஜன்ம நட்சத்திரத்துக்கு உரிய பலனாக எண்ணிவிடக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism