Published:Updated:

நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த கதை

சிவன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவன்

டி.எஸ்.என்

ஜோதிட சாஸ்திரத்தைப் பயன்படுத்த ஆதாரமாக இருப்பதுதான் பஞ்சாங்கம். இதன் ஐந்து முக்கிய உறுப்புகளில் முதன்மையானது வாரம். மற்றவை: திதி, கரணம், நட்சத்திரம், யோகம். இவற்றில் வாரம் என்றழைக்கப்படும் கிழமைகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்வோம்.

சிவன்
சிவன்

வாரம் என்பது ஏழு கிழமைகளாகும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களுக்குரிய நாள்களாக அமைந்துள்ள ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு நாள்களை வாரம் என்று குறிப்பிடுவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த  கதை

நவகிரகங்கள் என ஒன்பது கிரகங்களைக் குறிக்கிறோம். அவற்றில் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும் ஏழு நாள்களை மட்டுமே குறிப்பிடுகிறோம். அப்படியானால், மற்ற இரண்டு கிரகங்களுக்கு நாள்களின்மீது ஆதிக்கம் கிடையாதா என்ற கேள்வி எழலாம். இதற்கு விடை தரும் ஒரு புராணக் கதை உண்டு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்கு வார நாள்களைப் பிரித்துத் தந்தார் பிரம்மா. ராகு - கேதுவான சாயா கிரகங்களை அதில் சேர்க்கவில்லை. ராகுவும் கேதுவும் தவம் செய்து பிரம்மனை தரிசித்தனர். நவகிரகங்களில் இடம்பெற்ற தங்களுக்கு வார நாள்கள் ஏன் ஒதுக்கப்படவில்லை என்று கேட்டனர். வாரம் என்பதை ஒன்பது நாள்கள் என நிர்ணயித்து, தங்களுக்கும் இரண்டு நாள்களை ஒதுக்கி, ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தரும்படி கேட்டனர்.

நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த  கதை

அதற்குப் பிரம்மன், `‘நீங்கள் இருவரும் இரண்டு கிரகங்கள் அல்ல. ஒரே கிரகம்தான். பாம்பின் தலையையும் வாலையும் உடலின் பகுதியாகக்கொண்ட நீங்கள் ஒரே கிரகம்தான். ஒரு நாளை உங்களுக்காக ஒதுக்கினால் வார நாள்கள் எட்டாகும். இது 52 வாரங்களைக்கொண்ட ஒரு வருடக்கணக்கில் சிக்கலை உண்டாக்கும். எனவே, உங்கள் விருப்பத்தை வேறுவிதமாக பூர்த்தி செய்கிறேன்’’ என்று கூறி, ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரத்தை ராகுவுக்கும் ஒன்றரை மணி நேரத்தைக் கேதுவுக்கும் தந்து அதை ராகு காலம், கேது காலம் என்று பிரித்து அருள்புரிந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது மற்ற ஏழு கிரகங்களும் தங்கள் ஆட்சிக்காலமான 24 மணி நேரத்தில் 3 மணி நேரம் குறைந்துவிட்டதே என்றும், ராகு - கேதுவுக்கு ஆட்சி நேரம் அதிகமாகிவிட்டதே என்றும் எண்ணினர். அப்போது பிரம்மா இந்த ராகு காலம், கேது காலம் பற்றிய கணக்கை விவரித்தார். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ராகு - கேது காலம் 3 மணி நேரம் போக, அந்தக் கிரகத்தின் மீதி ஆட்சி நேரம் 21 மணி நேரம். ராகு - கேது இருவருக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு 3 மணி வீதம் 7 நாள்களுக்கு 21 மணி நேரம். எனவே, ஒரு வாரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் தலா 21 மணி நேரம் ஆட்சிக் காலம் ஆகிறது என்று விளக்கினார்.

நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த  கதை

பிரம்மனின் கணித யுக்தியைப் பாராட்டினார்கள் நவகிரக தேவர்கள். ஒவ்வொரு நாளும் ராகு காலம் எப்போது, கேது காலம் எப்போது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். கேதுவின் காலத்தை எமகண்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அதனால், அது யமனுக்குரிய காலம் என்றும், அதில் ஆபத்துகள் நேரும் என்றும் தவறாக எண்ண வேண்டியதில்லை. ராகு காலத்தில் புதிய காரியங்களைத் தொடங்கக் கூடாது என்றும், திருமணம் போன்ற சுப காரியங்களின் முகூர்த்தத்தை வைக்கக் கூடாது என்றும் சாஸ்திரம் கூறுகிறது. மற்றபடி நம்முடைய தினசரிக் கடமைகளைச் செய்யவும், கர்மாக்களைச் செய்யவும் ராகு காலம், எமகண்டம் ஒரு தடையில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த  கதை
நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த  கதை

கிரகங்களின் தலைவன் சூரியன். எனவே, வாரத்தின் கிழமைகளில் முதல் கிழமை ஞாயிறுதான். மேலை நாட்டவர்கள் பல நூற்றாண்டுகள் நம்மை ஆண்ட காலத்தில், அவர்கள் கலாசாரத்துக்கேற்ப ஞாயிற்றுக்கிழமையை விடுமுறையாக்கி, திங்கட்கிழமையை வாரத்தின் முதல்நாள் என்று சிந்திக்கும்படி செய்துவிட்டனர். மற்ற நாள்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்தால் அறிவாற்றலால் ஏற்படும் சக்தி அதிகமாகி, அதனால் நல்ல பலன்கள் ஏற்படும் என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. ஆகவே, ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வெடுத்துக் கழிக்கும் பழக்கத்தை மாற்றி, ஆக்கபூர்வமான அறிவுப்பணிகளைச் செய்து பார்த்தால், அதன் பலன் தெரியும். மத்தியக் கிழக்கு நாடுகளிலும், வேறு சில மேலை நாடுகளிலும் வெள்ளிக்கிழமைதான் விடுமுறை; ஞாயிற்றுக்கிழமை வேலை நாள்!

நாளும் கிழமையும்! - ராகு காலம் பிறந்த  கதை

ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு நவகிரக நாயகன்தான் தேவதை. அந்த நவகிரகத்துக்கு ஒரு அதிதேவதை (மூலாதார தேவதை) உண்டு. அதனாலேயே அந்தந்த நாள்களில் அந்த கிரகத்துக்குரிய அதிதேவதையை பூஜித்து பலன்பெறும் பழக்கம் இந்து தர்மத்தில் உள்ளது. அதன்படியே தினமும் உரிய தேவதைகளை, தெய்வத்தை வழிபட்டு வாழும் நாள் ஒவ்வொன்றையும் திருநாளாக்கி மகிழ்வோம்.