திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ஜோதிடம் அறிவோம்!

ஜோதிடத் துணுக்குகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோதிடத் துணுக்குகள்

தொகுப்பு: எம்.கிருஷ்ணன், சென்னை-44

தாரா பலம் அவசியம்!

எந்த ஒரு சுபகாரியம் செய்யும்போதும் ‘தாரா பலம் சந்திர பலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம் ததேவா’ - என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார்கள்.இவற்றில் திருமண முகூர்த்தங்களுக்கு ‘தாரா பலம்’ மிக அவசியம்.

குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு, குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் தாரா பலம் இல்லாதவையாக இருக்கும். இதை மிக எளிதில் நிர்ணயிக்கலாம்.

ஜோதிடம் அறிவோம்!

சுப முகூர்த்தத்துக்காக ஒன்றிரண்டு நாள்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நாளுக்கு உரிய நட்சத்திரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரின் ஜன்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் நிர்ணயிக்கப்படும் நாளுக்கு உரிய நட்சத்திரம் வரையிலும் எண்ண வேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்தால், வரும் மீதியைக் கொண்டு தாரா பலத்தை நிர்ணயிக்கலாம்.

மீதி 1 எனில், ஜன்ம தாரை. இதைத் தவிர்க்க வேண்டும்.

மீதி 2 எனில், சம்பத்து தாரை. இதில் முகூர்த்தம் வைக்கலாம்.

மீதி 3 எனில், விபத்து தாரை; தவிர்க்க வேண்டும்.

மீதி 4 எனில், க்ஷேம தாரை; இது சிறப்பானது.

மீதி 5 எனில், பிரத்யுக் தாரை; தவிர்க்கவும்.

மீதி 6 எனில், சாதக தாரை; அனுகூலம் ஏற்படும்.

மீதி 7 எனில், வதை தாரை; ஏற்கலாம்.

மீதி 8 எனில், மைத்ர தாரை; ஏற்கலாம்.

மீதி 9 எனில், பரம மைத்தர தாரை; சேர்த்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, ஜன்ம நட்சத்திரம் அசுவினி. இந்த நபருக்கு உத்திராடம் நட்சத்திரம் உள்ள நாளில் திருமணம் நடத்தத் தீர்மானித்தால், தாரா பலத்தைக் கீழ்க்காணும்படி அறியலாம்.

அசுவினிக்கு 21-வது நட்சத்திரம் உத்திராடம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 3. அது விபத்து தாரை. எனவே, அந்த நாள் சரியாகாது. அசுவினிக்கு 24-வது நட்சத்திரம் சதயம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 6. அது சாதக தாரை. எனவே, அந்த நாளில் முகூர்த்தம் வைக்கலாம்.

ஜோதிடம் அறிவோம்!

பூர்வ ஜன்ம ஞாபகம்!

ஜாதகத்தில் பெரும்பாலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்து காணப்படும். நவகிரகங்களில் முக்கியமானவை சூரியனும், சந்திரனும். இவர்கள் இருவரும் சேர்ந்து காணப்பட்டால், அந்த ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

அதேநேரம், சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடு பலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது.

அதேபோல் செவ்வாயும் நிழல் கிரகமான கேதுவும் இணைந்திருந்தால், வம்சம் தழைத்தோங்கும். ஜாதகர் தர்ம சிந்தை உள்ளவர்களாகத் திகழ்வார். எங்கும் எதிலும் இவர்களுக்கு வெற்றியே உண்டாகும். இவர்களில் சிலர் ஆகம சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றிருப்பர். பூர்வ ஜன்மம் பற்றிய ஞானம் இருக்கும் என்பது விசேஷம்!

ஜோதிடம் அறிவோம்!
rawpixel.com

வீடு யோகம் எப்படி?

ருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்கு பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு.

4-ஆம் வீட்டில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அடிக்கடி இடம் மாறி வாழவேண்டியது வரலாம்.

நான்காம் வீட்டில் செவ்வாய் அமைந்திருப்பின் நல்ல வீடு-மனை யோகங்கள் உண்டு. அதேநேரம், கெட்ட கிரகங்களின் பார்வை இருப்பின், அமைதி கிடைக்காது.

நான்காம் வீட்டில் புதன் அமையப்

பெற்றிருந்தால், எத்தகைய வீடுகளில் வசித்தாலும் தங்களுடைய புத்திசாலித்தனத்தால் சிரமங்களைச் சமாளித்துவிடுவார்கள்.

நான்காம் வீட்டில் குரு அமையப்பெற்றால், வயதின் மத்திம பாகத்துக்கு மேல் சிறப்பான வீடும், மனை யோகமும் கிடைக்கும். குலம் தழைத்தோங்கும்.

நான்காம் வீட்டில் சுக்கிரன் அமைந்திருப் பின் இயற்கையிலேயே நல்ல வீடு வாசல் அமைந்துவிடும். வாடகை வீட்டில் வசித்தால்கூட, அந்த வீடு அழகாகவும் ஆடம்பரமாகவும் அமைந்திருக்கும்.

4-ம் வீட்டில் சனி இருப்பின், மன அமைதியுடன் வாழ்வது சிரமம். எனினும் சனி பகவான் சுபகிரகங்களில் பார்வையோ, சேர்க்கையோ பெற்றிருந்தால், வீடு - மனை யோகம் கூடிவரும்.

நான்காம் வீட்டில் ராகு அமையப் பெற்றிருந்தால், வீட்டுக்கு அருகில் இருப்பவர்களால் பிரச்னைகள் எழலாம். அடிக்கடி வீடு மாற வாய்ப்பு உண்டு. கேது இருப்பின், பூர்வீக வீடுகளில் வசிக்க இயலாது. வீடு வாசல் இழப்புகள் ஏற்படும்.