Published:Updated:

சுபகிருது - சக்தி பஞ்சாங்கம்

சுபகிருது
பிரீமியம் ஸ்டோரி
சுபகிருது

சென்னை சூர்யோதயத்தின்படி சுத்த வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்தவர்: `ஜோதிடஸ்ரீ’ முருகப்ரியன்

சுபகிருது - சக்தி பஞ்சாங்கம்

சென்னை சூர்யோதயத்தின்படி சுத்த வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் கணித்தவர்: `ஜோதிடஸ்ரீ’ முருகப்ரியன்

Published:Updated:
சுபகிருது
பிரீமியம் ஸ்டோரி
சுபகிருது

இந்த வருடம் இப்படித்தான்!

மங்கலகரமான ‘சுபகிருது புத்தாண்டு, 14.4.22 வியாழன் அன்று பிறக்கிறது. குரு வாரத்தில், குரு பகவான் தன் சொந்த வீட்டில் இருக்கும் நேரத்தில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு பல்வேறு நன்மைகள் தருவதாகவே அமையவுள்ளது. சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அந்த அளவில் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும்.

இந்த ஆண்டு பிறக்கும்போது நீதிமானான சனிபகவான் ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதால், உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங் களில் வழக்குகள் விரைவாக நடைபெற்று தீர்ப்புகள் வெளியாகும். நம் நாட்டில் கனிமப்பொருள்கள் மூலம் அரசுக்குப் பலகோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். புதிய தங்கச் சுரங்கம் மற்றும் கடல் பகுதியில் அரிய பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்படும்.நம் தேசத்துக்கு வல்லரசு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகமாகக் காணப்படும்.

சுபகிருது - சக்தி பஞ்சாங்கம்

சுபகிருது வருடத்தில் நோய்க் கிருமிகள் அதிக அளவில் பரவினாலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இந்த ஆண்டு முழுவதுமே குருபகவான் தன் சொந்த வீடான மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆகவே, கல்வி வளர்ச்சி, பொருளாதாரம், குழந்தைகளின் வளர்ச்சி ஆகியவை நல்ல முறையில் காணப்படும்.

குரு பகவானின் பார்வையால் உலகத்தில் இருந்துவந்த துன்பச் சூழல்கள் விலகி, படிப்படியாகக் கஷ்டங்கள் தீரும். கடத்தல் முதலான குற்றத் தொழில்கள் கட்டுப்படுத்தப்படும்.

இந்த ஆண்டில் செவ்வாய் நட்பு வீட்டுக்குச் செல்லும் காலங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெரும். கல்விக் கட்டணங்கள் உயரும். என்றாலும் குழந்தைகளின் மீதான கல்விச்சுமை குறையும். மக்களிடம் பணக் கையிருப்பு குறையும். நூதன முறையில் புதிய மோசடிகள் நடைபெறும். எனவே எச்சரிக்கை தேவை. ஏரிகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும். விவசாயம் செழிக்கும். என்றாலும் வெட்டுக்கிளி, பூரான், எலி, அட்டைப்பூச்சி போன்றவற்றால் பாதிப்புகள் நேரலாம்.

இந்த ஆண்டு தமோ மேகம் வடக்கு திக்கில் உற்பத்தி ஆவதால் வட இந்தியாவில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படும். அதேபோல் இந்த ஆண்டு பிறக்கும் நேரம் பகல் என்பதால் பல அரசியல்வாதிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள்.

ஐப்பசி மாதம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆக்கிரமிப்பில் உள்ள புராதான கோயில் நிலங்களை அரசு மீட்கும்.விளைச்சல் அதிகமாக இருந்தாலும் சில மாதங்கள் காய்கறி, மழங்கள், மளிகை, ஆகியவற்றின் விலை உச்சத்தைத் தொடும். நம் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் கட்டுக்குள் வரும். மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களுக்குப் பொன்னான காலம்; அதிகமான ஊதியமும் ஊக்கத்தொகையும் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படுவர். இலவசக் காப்பீட்டுத் திட்டங்களில் அரசாங்கங்கள் அதீத கவனம் செலுத்தும்.

சுபகிருது வருட வெண்பா பலன்

சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.

சுபகிருது தன்னிலே சோழதேசம் பாழ்

அவமாமம் விலைகுறையும் சூன்சாம் சுபமாகும்

நாடெங்கும் மாரிமிகும் நல்லவிளை வுண்டாகும்

கேடெங்கு மில்லையதிற் கேள்

கருத்து: `சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். மண்பாண்டங்களின் விலை குறையும். மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். மழையினால் வேறு எந்த கேடும் இல்லை’ என்கிறது இந்த வெண்பா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுபகிருது - சக்தி பஞ்சாங்கம்

நவ நாயகர்களின் நிலை...

சனி - ராஜ்ஜியாதிபதி, நீரஸாதிபதி

புதன் -அர்க்காதிபதி, மேகாதிபதி, சேனாதிபதி.

குரு - மந்திரி

சூரியன் - ஸஸ்யாதிபதி

செவ்வாய் - ரஸாதிபதி

சுக்கிரன் - தான்யாதிபதி

பசுநாயக்கர் - பலபத்ரன்

இந்த வருடத்தில் கிரகணங்கள்...

சூரிய கிரகணம்

சுபகிருது வருடத்தில் இரண்டு சூரிய கிரகணங்கள். அவற்றில் ஒன்று மட்டும் இந்தியாவில் தெரியும். சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8-ம் நாள் (25.10.22) செவ்வாய்க்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது - கேது கிரகஸ்தம். மாலை 4:14 மணிக்குத் தொடங்கி மாலை 6:10 மணிக்கு நிறைவுறுகிறது.

சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

சந்திர கிரகணம்

சுபகிருது வருடத்தில் இரண்டு சந்திர கிரகணங்கள். ஒன்று மட்டுமே இந்தியாவில் தெரியும். சுபகிருதுவருடம் ஐப்பசி மாதம் 22-ம் நாள் (8.11.22) செவ்வாய்க்கிழமை அன்று பூரணச் சந்திர கிரகணம் நிகழ்கிறது - ராகு கிரகஸ்தம். மதியம் 2:39 மணிக்குத் தொடங்கி மாலை 6:19 மணிக்கு நிறைவுறுகிறது. அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் சாந்தி செய்துகொள்ள வேண்டும்.

சுபகிருது - சக்தி பஞ்சாங்கம்
சுபகிருது - சக்தி பஞ்சாங்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism