Published:Updated:

சுக்ர அதிருஷ்டம் யாருக்கு!

சுக்ரபகவான்
பிரீமியம் ஸ்டோரி
சுக்ரபகவான்

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

சுக்ர அதிருஷ்டம் யாருக்கு!

ஜோதிடஶ்ரீ முருகப்ரியன்

Published:Updated:
சுக்ரபகவான்
பிரீமியம் ஸ்டோரி
சுக்ரபகவான்

இல்லறம் நல்லறமாகவும், வீட்டில் சகல சம்பத்துகளும் நிறைந்திருக்க மகிழ்ச்சியான வாழ்வைப் பெறவும் சுக்ரனின் திருவருள் தேவை. வாழ்வில் அனைத்துவிதமான யோகங்களையும் அனுபவிக்கவேண்டும் என்றால் ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சுக்ர அதிருஷ்டம் யாருக்கு!

அதேபோல், சுக்கிர பகவான் மறைவு ஸ்தானம் பெற்றிருக்கக் கூடாது, அவர் இருக்கும் ராசியும் அவருக்கு நட்பு இடமாக இருத்தல் வேண்டும் எனும் விதிகளும் உண்டு. சுக்கிரனுக்கு ரிஷபமும் துலாமும் ஆட்சி வீடுகள்; மீனம் உச்ச வீடு. இந்த ராசிகளில் சுக்கிரன் அமையப் பெற்ற ஜாதகர் அளவற்ற நன்மைகளைப் பெறுவார். மற்ற ராசிகளில் இருக்கும்போது, அந்தந்த ராசிக்கு - இடத்துக்கு ஏற்ற பலன்களைத் தருவார். மேஷம் முதல் மீனம் வரையிலும் சுக்கிரன் எந்த ராசியில் இருந்தால் என்னென்ன பலன்களைத் தருவார் என்பதை ஜோதிட சாஸ்திர நூல்கள் விவரிக்கின்றன.

மேஷம்: மேஷ ராசி சுக்கிரனின் ஆட்சி வீடான ரிஷபத்துக்கு 12-ம் இடமாகவும், துலாம் ராசிக்கு 7-ம் இடமாகவும் உள்ளது. அதிகாரம் மிகுந்த தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். இல்லறத்தில் சிறு சிறு சலனங்கள் இருக்கும்.

ரிஷபம்: ரிஷபம் சுக்கிரனின் ஆட்சி வீடு. மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். ஜாதகர் எந்த இடத்தில் இருந்தாலும் செல்வாக்கு டன் திகழ்வார்.

மிதுனம்: புதனின் வீடான மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால், சாதுரியமான பேச்சால் காரியம் சாதிப்பார்கள். கலைகளில் ஆர்வம் இருக்கும். செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்வார்கள்.

கடகம்: கடகத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்களாக இருப்பார்கள்.

சிம்மம்: இந்த ராசியில் சுக்கிரன் இருந்தால், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரால் சகல விதங்களிலும் நன்மை ஏற்படும்.

கன்னி: இந்த ராசி சுக்கிரனின் நீச்ச வீடு. இதில் சுக்ரன் இருக்க பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வில் சலனம் இருக்கும். வெள்ளிக் கிழமைகளில் லட்சுமி வழிபாடு நன்மை பயக்கும். இங்கே இருக்கும் சுக்கிரன் நீச்சபங்கம் பெற்றிருந்தால் ஓரளவு நன்மைகள் நடக்கும்.

துலாம்: இந்த ஜாதகரால் வாழ்க்கைத்துணைக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். இந்த ஜாதகர் அனைத்து நன்மைகளையும் அடைவார். அவர் மூலம் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

விருச்சிகம்: இதில் சுக்கிரன் இருப்பது நல்லதல்ல. வீண் அலைச்சல், சச்சரவுகள் உண்டு. இந்த நிலையில் சுக்கிரன் சுப கிரகங்களின் பார்வை பெறுவார் எனில், அசுப பலன்களின் தாக்கம் குறையும். வீட்டில் தினமும் விளக்கேற்றிவைத்து, லக்ஷ்மி அஷ்டோத்திரம், மதுராஷ்டகம் போன்ற துதிகளைச் சொல்லி வழிபட்டால், நன்மைகள் சேரும்.

தனுசு: இந்த ராசியில் சுக்கிரன் அமையப்பெற்றவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள்; சிறந்த படைப்பாளியாகவும் திகழ்வார். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவார்.

மகரம்: மகரத்தில் இருக்கும் சுக்கிரனால் ஜாதகருக்கு மன திடம் அதிகரிக்கும். சகல விஷயங்களையுன் ஒன்றுபோல் பாவித்து செயல்படுவார்.

கும்பம்: கும்பத்தில் சுக்கிரன் அமையப்பெற்றிருந்தால், அந்த ஜாதகர் எளிதில் உணர்ச்சிவயப்படுவார். எதிர்மறை எண்ணங்களை விலக்குவது நல்லது. திருமால் வழிபாடு நன்மை பயக்கும்.

மீனம்: இங்கு உச்சம் பெற்று அமைந்திருக்கும் சுக்கிரன், ஜாதகருக்கும் அனைத்து விதமான நன்மைகளையும், வாழ்க்கையில் சகல சுகபோகங்களையும் வழங்குவார்.

சந்திர ராசியின்படி சுக்கிரன் அமைந்திருப்பதால் ஏற்படக்கூடிய பொதுவான பலன்களைப் பார்த்தோம். இவை போக, ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சுக்கிரன் எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதை வைத்து பலன்களைத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.

விருப்பங்கள் நிறைவேறும்!

ஓம் சுக்ராய நம:
ஓம் சுசயே நம:
ஓம் சுபகுணாய நம:
ஓம் சுப லக்ஷ்ணாய நம:
ஓம் சோபனாக்ஷாய நம:
ஓம் சுப்ரவாஹாய நம:
ஓம் சுத்தஸ்படிக பாஸ்கராய நம:
ஓம் தீனார் திஹராய நம:
ஓம் தைத்யகுரவே நம:
ஓம் தேவாபிநந்திதாய நம:
ஓம் காவ்யஸக்தாய நம:

சுக்ரபகவானைப் போற்றும் இந்த துதிகளைக் கூறி வழிபடுவது மிகவும் விசேஷம். இதன் மூலம் ஜாதகத்தில் சுக்ரன் குறை நிலையில் இருந்தாலும், அதற்கான தோஷத்தைத் தராமல் நல்ல பலன்களை அருள்வார். பக்தியுடன் இதைப் படித்து வழிபடுவோரின் நல்ல விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism