Published:Updated:

சுக்கிரனால் தோஷமா?

சுக்கிர தோஷ பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
சுக்கிர தோஷ பரிகாரம்

கல்யாணப் பரிகாரம் -சந்திரசேகரன்

சுக்கிரனால் தோஷமா?

கல்யாணப் பரிகாரம் -சந்திரசேகரன்

Published:Updated:
சுக்கிர தோஷ பரிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
சுக்கிர தோஷ பரிகாரம்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. திருமணம் மட்டுமல்ல... நாம் பிறப்பது, வாழ்வது எல்லாமே முன்னரே எழுதப்பட்ட விதி ஆகும். ஆனால், பலருக்கும் விதிவசத்தால் ஜாதகத்தில் திருமண தோஷம் அமைந்து விடுவதுண்டு.

சுக்கிரனால் தோஷமா?

திருமணத் தடை என்றதும் அதற்குக் காரணமாக அமையும் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் குறித்தே யோசிப்போம். செவ்வாய், ராகு-கேது தவிர வேறு கிரகங்களும் திருமண தோஷத்துக்குக் காரணமாகலாம். உதாரணத்துக்கு சுக்கிரனின் நிலையை பார்ப்போம்.

மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் ஒருவருக்கு 7-ம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன். அவரே களத்திரக் காரகன். சுக்கிரன் மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னியில் அமர்ந்து நீசமாக இருந்தால், ஜாதகருடைய மண வாழ்க்கை பாதிக் கவே செய்யும். ஆனால், கன்னியில் இருக்கும் சுக்கிரனுக்குச் சுப கிரகங்களின் பார்வை இருந்து, சுக்கிரன் நீசபங்கம் பெற்று, இதர வர்க்கங்களிலும் சுப பலம் பெற்றிருந்தால், சுக்கிரனுக்குரிய பரிகாரம் செய்வதன்மூலம் திருமணம் நடை பெற வழி பிறக்கும்.

ஒருவர் விருச்சிக லக்னத்தில் பிறந்திருக் கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு 7-ம் வீடான ரிஷபத்துக்கு உரியவர் சுக்கிரன். அவரே களத்திரக் காரகனும் ஆவார்.

அவர் லக்னத்துக்கு 12-ம் இடமான துலாமில் இருந்தால், அந்த இடம் சுக்கிரனுக்கு ஆட்சி வீடாக இருந்தபோதிலும், திருமண வாழ்க்கை பாதிக்கவே செய்யும். பிரிவினை ஏற்படவும், மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படவும் கூடும்.

இங்ஙனம் ஜாதகத்தில் சுக்கிரன் திருமணத் தடையை ஏற்படுத்தும் நிலையில் இருந்தால், உரிய பரிகாரங்கள் மூலம் தீர்வு பெறலாம்.

எளிய பரிகாரங்கள்...

வெள்ளிக்கிழமையில் இந்திரனையும், சசி தேவியையும் வழிபடுவது நல்லது. அன்றைய நாளில் சுமங்கலி பூஜை செய்வதும் மிக விசேஷம்.

அதேபோல், அத்தி சமித்தால் ஹோமம் செய்து, மொச்சை தானம் செய்வதால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு மங்கலப் பொருள்களைத் தானமாக வழங்குவது சிறப்பு.

சுக்கிரனுக்குரிய பரிகாரத் தலமான ஶ்ரீரங்கத்துக்குச் சென்று ஶ்ரீரங்கநாதரை மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொண்டால், தோஷம் விலகும். அதேபோல், ஶ்ரீசூக்தம், லட்சுமி அஷ்டோத்திரம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism