திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

மகர சங்கராந்தி சூரியன் சனி சேர்க்கைபலன்கள் பரிகாரங்கள்!

மகர சங்கராந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
மகர சங்கராந்தி

சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அந்தக் கிரகங்களால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம்.

கிரகங்களின் நாயகன் சூரியன். பார்வைக்கு இலக்காகும் பரம்பொருள். `சூரியன் உலகின் அணையா விளக்கு’ என்பார் வராகமிஹிரர். சூரியன் உலகை உணர்த்துகிறார்; இயங்க வைக்கிறார்; உறங்க வைக்கிறார் என்கிறது ஜோதிடம்.

`மும்மூர்த்திகளும் அவருள் அடக்கம்.முத்தொழில்களையும் அவரே நடத்து கிறார்...’, `வேதத்தின் வடிவமான ஒலி ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன்...’ என்றெல்லாம் விளக்கு கிறது வேதம்.

நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப்பட்டவையே. சூரியக் கிரணங்களின் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம் என்கிறது வேதம் (தஸ்யா:பாகவிசேஷேண ஸ்மிருதம்காலவிசேஷணம்).

மகர சங்கராந்தி சூரியன் சனி சேர்க்கைபலன்கள் பரிகாரங்கள்!

முக்கால நிகழ்வுகளுக்கும் சூரியனே சாட்சி. ‘முக்காலத்திலும் நிகழ்கிற பலன் களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்’ என வராஹ மிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார்.

சூரியன் ஒளிப்பிழம்பு. அவரிடமிருந்து ஒளியைப் பெற்ற சந்திரனும் ஒளிப்பிழம்பு. நட்சத்திரங்களும் ஒளி வடிவானவை என்கிறது வேதம். கண்ணுக்குப் புலப்படும் சாஸ்திரம் ஜோதிடம்; ஒளிப்பிழம்புகள் ஜோதிடத்துக்கு ஆதாரம்.

ஆக, வேதத்தின் மறுவடிவம்; வேள்விக்கு ஆதாரம்; ஜோதிடத்தின் அடிப்படை; விஞ்ஞானத்தின் எல்லை; மெய்ஞ்ஞானத்தின் நிறைவு; அன்றாடப் பணிகளின் வழிகாட்டி... என நம்முடன் இணைந்த கிரகம் சூரியன். கிரணம் மூலமாக நம்மில் ஊடுருவி, உடல் மற்றும் உள்ளத்தைப் பாங்குடன் ஒருசேர வளர்ப்பதில் சூரியனுக்குப் பங்கு உண்டு.

நம் மனம், ‘ஜடம்’; அது ஆன்மாவின் இணைப்பில் செயல்படும். கர்மவினை ஜடம்; அது சூரியனது இணைப்பில் செயல்படும். சூரியன் ஆன்மா; ஆகவே அவர் எதிலும் ஒட்டமாட்டார். அவரின் தொடர்பில், மற்றவை செயல்படும். சூரியனது தொடர்பில் மற்ற கிரகங்கள் கர்மவினையை வெளிப்படுத்துகின்றன.

கண்ணுக்கு இலக்காகாத கர்ம வினையின் தரத்தை வெளிக்கொண்டு வருபவன், சூரியன். தேசத்தோடு இணைந்து பிறந்தவனின் வேளை (லக்னம்) சூரியனை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. வாரம், திதி நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்து கால அளவுகளுக்குச் சூரியனின் பங்கும் உண்டு.

மகர சங்கராந்தி சூரியன் சனி சேர்க்கைபலன்கள் பரிகாரங்கள்!

சிம்மத்துக்கு அதிபதியாக சூரிய பகவானைச் சொன்னாலும், அனைத்து ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறார். சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசி களிலும் நிறைந்திருக்கிறார், அவர்! ‘ஹோரா’ என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சம பங்கில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது ஜோதிடம்.

சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அந்தக் கிரகங்களால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்துவிடலாம். ஆன்ம பலத்தில் மனம் வலுப்பெற்றால், எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடுவது எளிது.

ராசிச் சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அனைத்து கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமை களைக் கர்மவினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.

ராசிபுருஷனின் 5-ஆம் வீடான சிம்மத்தை சூரியனின் ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம். தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந்தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு; சூரியனுக்கும் உண்டு. பொருட்களின் தோற்றத்துக்கு சூரியனின் வெப்பம் வேண்டும். எனவே, அவரை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவருடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும். அதேநேரம், அவரது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கிவிடுவதும் உண்டு.

சூரியனும் மற்ற கிரகங்களும்

சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவார். அதனை நிபுண யோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம். ஆனால், சூரியனுடன் முற்றிலும் ஒன்றினால் (அஸ்தமனம்) விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.

சூரியன் குருவுடன் சேரும்போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வார்.

செவ்வாயுடன் சூரியன் இணையும்போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம்.

சந்திரனுடன் இணைந்தால், மனத்தெளிவை ஏற்படுத்துவார்.

சுக்கிரனுடன் இணைந்தால் தாம்பத்தியத்தை இழக்க நேரிடும்.

சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட நேரிடும்; செல்வ வளம் பெற்றாலும், செல்லாக்காசாக மாற நேரிடும்.

ராகுவுடன் சேர்ந்தால், வீண்பழி, அவப்பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகமும் சில தருணங்களில் சூரியனின் ஒளி பரவாமல் தடுப்பது உண்டு. அதேபோல் ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு.

மகர சங்கராந்தி சூரியன் சனி சேர்க்கைபலன்கள் பரிகாரங்கள்!

கேதுவுடன் சேர்ந்தால் வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும். வசதி உலகவியலில் அடங்கும்; சுகம், மனம் சார்ந்த விஷயம். ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்கவைப்பார்.

சூரியனின் நிலைகள்...

உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், அந்த ஜாதகனை செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றிவிடுவார். அவனது தனித்தன்மையை அழியாமல் சூரியன் காப்பாற்றுவார்.

நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து விழுந்து வேலை செய்தாலும், தகுதியிருந்தும் சிறக்க முடியாது போகும்; சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது.

பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும்; தன்னம்பிக்கை பிறக்கும்; மக்கள் சேவை யுடன் திகழலாம்; புகழுடன் வாழலாம். ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணை புரியும்.

எந்த இடம்... என்ன பலன்?

ஜாதகப்படி சூரியன் அமைந்திருக்கும் நிலைக்குத் தக்க அவர் என்னென்ன பலன்களைத் தருவார் என்பதை இனி காண்போம்.

முன்னதாக உங்கள் ஜாதகத்தில் அவர் அமைந்திருக்கும் இடத்தை அறிந்துகொள்ளுங்கள். ஜாதகக் கட்டத்தில் `ல’ என்று குறிப்பிடப் பட்டிருக்கும் இடமே முதலாவது வீடாகும். அதிலிருந்து அடுத்தடுத்த வீடுகளைக் கணக்கிடலாம். அதன்படி சூரியன் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, பலன்களை அறிந்துகொள்ளலாம்.

லக்னத்தில் சூரியன்: ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் அமைந்திருக்கப் பிறந்த ஜாதகர், குறைவான கேசம் உடையவராக இருப்பார். செயல்படுவதில் வேகம் குறைவாக இருக்கும். கோபம், உக்ரம் மிகுந்திருக்கும். உயரமானவர்; மெலிந்த தேகம் மற்றும் சிவந்த கண்களைக் கொண்டவர்.

2-ம் வீட்டில் சூரியன்: கல்வி, செல்வம், பணிவு இல்லாதவர். சொந்த வீடு உண்டு. அடிக்கடி இடம்பெயர்வர்; பரம்பரைச் சொத்துகளை விரயமாக்குவார்.

3-ம் வீட்டில் சூரியன்: வீரம், வலிமை, செல்வம், தாராள மனம் உடையவர். உறவினரிடம் பகை ஏற்படும். சகோதரர்களால் உதவி கிட்டாது. லட்சுமி கடாட்சம் மிகுந்தவர்.

4-ம் வீட்டில் சூரியன்: அரசாங்க வேலை கிடைக்கும். சொந்த வீடு, நிலம் எதுவும் இருக்காது. உறவினர்கள், நண்பர்கள், சுகமான வாழ்வு போன்றவற்றில் பாதிப்புகள் உண்டு. உழைப்பால் முன்னேறுவர்.

5-ம் வீட்டில் சூரியன்: புத்திசாலிகளாக இருப்பார்கள். காடுகளில் பயணம் செய்ய பிடிக்கும். மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றில் திருப்தி இருக்காது.

6-ம் வீட்டில் சூரியன்: ஜாதகத்தில் 6-ம் இடத்தில் சூரியன் இருப்பது சிறப்பு. இத்தகைய ஜாதகர் அரசாளும் யோகம் பெற வாய்ப்பு உண்டு. புகழ், நற்குணங்கள், செல்வம், வெற்றி ஆகிய யாவையும் வந்து சேரும்.

7-ம் வீட்டில் சூரியன்: இந்த நிலை பாதிப்பானது. 7-ல் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள், அரசாங்கத்தால் அல்லல்களைச் சந்திப்பார்கள்.

8-ம் வீட்டில் சூரியன்: பார்வையில் பாதிப்பு ஏற்படும். நண்பர்களை அரவணைப்பதும் நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நன்று.

9-ம் வீட்டில் சூரியன்: உறவுகள் சூழ வாழ்பவர், தெய்வ வழிபாடு களில் நம்பிக்கையும் அதனால் பலன்களும் அதிகம் உண்டு.

10-ம் வீட்டில் சூரியன்: இது நல்லதொரு அமைப்பு. மழலைச் செல்வம், வாகனங்கள், புகழ், புத்திசாலித்தனம், செல்வம், வலிமை மிக்கவர். நற்பெயர் உடையவர், அரசருக்குச் சமமாகும் யோகம் உண்டு.

11-ம் வீட்டில் சூரியன்: செல்வ யோகம் உண்டாகும். துயரத்தைச் சந்திக்காத வாழ்வு, நீண்ட ஆயுள் உண்டு.

12-ம் வீட்டில் சூரியன்: பார்வையில் பாதிப்பு உண்டாகும். தந்தையிடம் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உழைப்பால் செல்வம் சேர்ப்பார்கள்.

இனி, மகர சங்கராந்தி முதல் ஒருமாத காலம் சூரியன் - சனி சேர்க்கையால் ஏற்படும் பலன்களை அறிவோம்.