திருக்கதைகள்
Published:Updated:

தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுரபி நேரம்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஜோதிடர் மதுரை சங்கர்ஜி

ஒவ்வொருவரின் ஜாதகப்படியும் ‘சுரபி நேரம்’ எனும் தருணம் குறிக்கப்படும். அந்த வேளையில் உரிய முறைப்படி வழிபட்டு வந்தால், உங்களது நியாயமான தேவைகள் எளிதில் விரைவாக நிறைவேறும். சரி, அதென்ன சுரபி நேரம்?!

தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுரபி நேரம்!

உங்களிடம் பைக் அல்லது கார் வாங்கும் அளவுக்குப் பணம் இருக்கிறது. அதற்கான தேவையும் இருக்கிறது. ஆனால், ஏதேனும் காரணத்தால் அதை வாங்க முடியாமல் தட்டிக்கொண்டே போகலாம். வாகனம்தான் என்றில்லை... உங்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள், வீடு, நகை என இந்தப் பட்டியலில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

நகையோ, வாகனமோ, வீடோ நியாயமான தேவையாக இருந்தும், கையில் கிடைப்பதற்குத் தாமதமாகும் நிலை பலருக்கும் உண்டு. இத்தகைய தேவைகள் விரைவில் பூர்த்தியாக வழிகாட்டுகிறது ஜோதிட சாஸ்திரம். ஆம், நட்சத்திரப் பாதப்படி கணக்கிடப்படும் உங்களுக்கான சுரபி நேரத்தில் உரிய முறைப்படி வழிபட்டு வந்தால், உங்களது நியாயமான தேவைகள் எளிதில் விரைவாக நிறைவேறும். சரி, அதென்ன சுரபி நேரம்?!

ஒருவருடைய பிறந்த நட்சத்திரப் பாதத்தில் துவங்கி, 54-வது பாதம் முடிந்து, 55-ம் பாதம் முழுவதும் உள்ள நேரத்தையே `சுரபி நிலை’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். உதாரணமாக, அசுவினி ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர் வழிபடக் கூடிய ‘சுரபி நேரம்’, சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் ஆகும்.

ஒரு பாதம் என்பதற்கான கால அளவு சராசரியாக ஆறு மணி நேரம். உங்களுக்குத் தெரிந்த ஜோதிட அன்பர்களிடம் கேட்டும் உங்களுக்கான சுரபி நேரத்தைக் குறித்துக்கொள்ளலாம்.

அந்த நேரத்தில் வீட்டின் பூஜையறையில் நெய் தீபம் ஏற்றி, குல தெய்வம், இஷ்ட தெய்வங்கள் மற்றும் முன்னோர்களை நினைத்து வணங்கவேண்டும். மனதிலே இருக்கக்கூடிய நியாயமான ஆசைகள், தேவைகள் நிறைவேறும் பொருட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். காலை, மாலை, பகல், இரவு என எந்த நேரமாக இருந்தாலும் இந்த வழிபாட்டைச் செய்யலாம். மற்றபடி, நல்ல நேரம் என எதுவும் பார்க்கத் தேவையில்லை.

அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் பாதம் எதுவென தெரிந்து கொண்டு, 55-வது நட்சத்திர பாதம் தொடங்கும் பொழுதில் இந்தப் பூஜையை மேற்கொள்வதால், எல்லாம் நல்லபடியாக கிடைக்கும்.