Published:Updated:

சூரிய யோகம் எப்படி?

சூரிய யோகம் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
சூரிய யோகம் எப்படி?

பாடூர் சுப்ரமணிய சாஸ்திரிகள்

சூரிய யோகம் எப்படி?

பாடூர் சுப்ரமணிய சாஸ்திரிகள்

Published:Updated:
சூரிய யோகம் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
சூரிய யோகம் எப்படி?
நாம் அனுதினமும் நேரில் தரிசிக்கும் கண்கண்ட தெய்வம் சூரிய பகவான். நவகிரகங்களில் நாயகர் அவர். சூரியனின் வெம்மையும் ஒளியுமே இவ்வுலகையும் உயிர்களையும் வாழவைக்கின்றன. சைவர்கள் சிவச் சூரியன் என்றும் வைணவர்கள் சூரியநாராயணர் என்றும் கதிரோனைப் போற்றுவர். பிரமாண்ட புராணம், மார்க்கண்டேய புராணம், காசிக்காண்டம் முதலான ஞானநூல்கள் சூரியனின் மகிமையைப் போற்றுகின்றன.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜோதிட நுல்கள் சூரியனை ஆத்ம காரகன் எனச் சிறப்பிக்கின்றன. அவர் சிம்மராசியின் அதிபதி. ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் ஓர் ஆண்டில் கடக்கிறார். சூரியனின் நிலை ஒருவரின் ஜாதகத்தில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை வைத்து, அந்த ஜாதகருக்கு அரசுத் தொடர்பு, தந்தை வழி பலன்கள் ஆகியவற்றை ஜோதிடம் வரையறுக்கும். மேலும் மனிதனின் உற்சாகம், பெருந்தன்மை, விவாத வல்லமை, ஆளுமை, பக்குவம், லட்சியம் ஆகியன சூரியனின் நிலையைக் கொண்டே கணிக்கப்படும்.

அவ்வகையில் ஜாதகப்படி சூரியன் அமைந்திருக்கும் நிலைக்குத் தக்க அவர் என்னென்ன பலன்களைத் தருவார் என்பதைக் காண்போம். முன்னதாக உங்கள் ஜாதகத்தில் அவர் அமைந்திருக்கும் இடத்தை அறிந்துகொள்ளுங்கள்.ஜாதகக் கட்டத்தில் `ல’ என்று குறிப்பிடப் பட்டிருக்கும் இடமே முதலாவது வீடாகும். அதிலிருந்து அடுத்தடுத்த வீடுகளைக் கணக்கிடலாம். அதன்படி சூரியன் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, பலன்களை அறிந்துகொள்ளலாம்.

லக்னத்தில் சூரியன்: ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் அமைந்திருக்கப் பிறந்த ஜாதகர், குறைவான கேசம் உடையவராக இருப்பார். செயல்படுவதில் வேகம் குறைவாக இருக்கும். கோபம், உக்ரம் மிகுந்திருக்கும். உயரமானவர்; மெலிந்த தேகம் மற்றும் சிவந்த கண் களைக் கொண்டவர்.

2-ம் வீட்டில் சூரியன்: கல்வி, செல்வம், பணிவு இல்லாதவர். சொந்த வீடு உண்டு. அடிக்கடி இடம்பெயர்வர்; பரம்பரைச் சொத்துகளை விரயமாக்குவார்.

3-ம் வீட்டில் சூரியன்: வீரம், வலிமை, செல்வம், தாராள மனம் உடையவர். உறவினரிடம் பகை ஏற்படும். சகோதரர் களால் உதவி கிட்டாது. லட்சுமிகடாட்சம் மிகுந்தவர்.

4-ம் வீட்டில் சூரியன்: அரசாங்க வேலை கிடைக்கும். சொந்த வீடு, நிலம் எதுவும் இருக்காது. உறவினர்கள், நண்பர்கள், சுகமான வாழ்வு போன்றவற்றில் பாதிப்புகள் உண்டு. உழைப்பால் முன்னேறுவர்.

சூரிய யோகம் எப்படி?

5-ம் வீட்டில் சூரியன்: புத்திசாலிகளாக இருப்பார்கள். காடுகளில் பயணம் செய்ய பிடிக்கும். மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றில் திருப்தி இருக்காது.

6-ம் வீட்டில் சூரியன்: ஜாதகத்தில் 6-ம் இடத்தில் சூரியன் இருப்பது சிறப்பு. இத்தகைய ஜாதகர் அரசாளும் யோகம் பெற வாய்ப்பு உண்டு. புகழ், நற்குணங்கள், செல்வம், வெற்றி ஆகிய யாவையும் வந்து சேரும்.

7-ம் வீட்டில் சூரியன்: இந்த நிலை பாதிப்பானது. 7-ல் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள், அரசாங்கத்தால் அல்லல்களைச் சந்திப்பார்.

8-ம் வீட்டில் சூரியன்: பார்வையில் பாதிப்பு ஏற்படும். நண்பர்களை அரவணைப்பதும் நட்புக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நன்று.

9-ம் வீட்டில் சூரியன்: உறவுகள் சூழ வாழ்பவர், தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கையும் அதனால் பலன்களும் அதிகம் உண்டு.

10-ம் வீட்டில் சூரியன்: இது நல்லதொரு அமைப்பு. மழலைச் செல்வம், வாகனங்கள், புகழ், புத்திசாலித்தனம், செல்வம், வலிமை மிக்கவர். நற்பெயர் உடையவர், அரசருக்குச் சமமாகும் யோகம் உண்டு.

11-ம் வீட்டில் சூரியன்: செல்வ யோகம் உண்டாகும். துயரத்தைச் சந்திக்காத வாழ்வு, நீண்ட ஆயுள் உண்டு.

12-ம் வீட்டில் சூரியன்: பார்வையில் பாதிப்பு உண்டாகும். தந்தையிடம் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உழைப்பால் செல்வம் சேர்ப்பார்கள்.